ஆதியாகமம் அதிகாரம் 1 – 10 Quiz கேள்வி பதில்
- தேவன் எப்போது வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார்?
- ஆதியிலே இருள் எங்கிருந்தது?
- முதலாம் நாளில் படைக்கப்பட்டது எது?
- ஆகாய விரிவுக்கு என்ன பெயர் வைக்கப்பட்டது?
- எதற்காக ஆகாயவிரிவில் சுடர்கள் படைக்கப்பட்டன?
- பூமியின் படைப்புகளை தேவன் என்ன செய்தார்?
- மனுஷனுக்கு தேவன் கொடுத்த முதல் கட்டளை எது?
- தேவன் தம்முடைய கிரியைகளை எந்த நாளில் நிறைவேற்றினார்?
- பூமியின் மீது சகலவித பூண்டுகளும் இன்னும் உண்டாக்கப்படாததன் காரணம் என்ன?
- ஆவிலா தேசத்தின் விளைபொருள் என்ன?
- மனுஷனை தேவனாகிய கர்த்தர் எதற்காக ஏதேன் தோட்டத்தில் கொண்டு வைத்தார்?
- எது மனுஷனுக்கு நல்லது அல்ல?
- தேவன் படைத்த படைப்புகளுக்கு பெயர் சூட்டியவர் யார்?
- தந்திரமுள்ளதாயிருந்த காட்டு ஜீவன் எது?
- நீ எங்கே இருக்கிறாய் என தேவன் யாரிடம் கேட்டார்?
- பூமி யார் நிமித்தம் சபிக்கப்பட்டிருக்கும்?
- ஆதாமுக்கும் ஏவாளுக்கும் தேவன் என்ன உடை உண்டாக்கி உடுத்தினார்?
- காயீன் ஆபேலை எந்த இடத்தில் கொலை செய்தான்?
- காயீன் எங்கு குடியிருந்தான்?
- ஏனோக்கின் மகன் பெயர் என்ன?
- தனக்கு காயமுண்டாக ஒரு மனுஷனைக் கொன்றவன் யார்?
- யாருடைய காலத்தில் மக்கள் கர்த்தருடைய நாமத்தைத் தொழுது கொள்ள ஆரம்பித்தனர்?
- எந்த நாளிலே மனுஷன் என்ற பெயர் சூட்டப்பட்டது?
- ஆதாம் உயிரோடிருந்த வருஷங்கள் எத்தனை?
- முன்னூறு வருஷம் தேவனோடு சஞ்சரித்த மனிதன் யார்?
- நோவாவின் பெயரின் பொருள் என்ன?
- நோவா எந்த வயதில் தன் மூன்று பிள்ளைகளையும் பெற்றான்?
- எது மனுஷனோடே என்றென்றைக்கும் போராடுவது இல்லை?
- நீதிமானும் உத்தமனும் தேவனோடு சஞ்சரித்தவனுமாகிய ஒருவர் யார்?
- பேழைக்குள் சென்ற நபர்கள் எத்தனை ?
- இந்த சந்ததியில் யாரை தேவன் நீதிமானாகக் கண்டார்?
- ஜலப்பிரளயம் பூமியின் மீது உண்டானபோது நோவாவின் வயது எத்தனை?
- நோவாவின் பேழையின் கதவை அடைத்தவர் யார்?
- மூடப்பட்ட மலைகளுக்கு மேலாக ஜலம் எத்தனை முழம் உயர்ந்தது?
- பேழை தங்கிய மலையின் பெயர் என்ன?
- எந்த நாளிலே பேழை அரராத் மலையில் தங்கியது?
- நோவாவின் பேழைக்கு போக்கும்வரத்துமாயிருந்த பறவை எது?
- நோவாவிடம் திரும்பி வந்த பறவை எது ?
- பேழையிலிருந்து இறங்கி வந்த நோவா என்ன செய்தார்?
- தேவனாகிய கர்த்தர் நோவாவோடு செய்த உடன்படிக்கை எது?
- மாம்சத்தை எதோடு புசிக்கலாகாது?
- மனுஷனுடைய இரத்தத்தைச் சிந்துகிறவனுக்கு கிடைக்கும் தண்டனை எது?
- உடன்படிக்கையின் அடையாளமாக தேவன் எதை மேகத்தில் வைத்தார்?
- வானவில் எப்போது தோன்றும்?
- நோவாவின் மகன் காம் எத்தேசத்துக்கு தகப்பன்?
- திராட்சை ரசத்தைக் குடித்து வெறிகொண்டு கூடாரத்தில் படுத்திருந்தவன் யார்?
- ஜலப்பிரளயத்துக்குப் பின்பு நோவா எவ்வளவு காலம் வாழ்ந்தார்?
- நோவா வாழ்ந்த நாட்கள் எத்தனை?
- நோவாவின் குமாரருக்கு எப்போது பிள்ளைகள் பிறந்தனர்?
- பாபேல் எந்த தேசத்தில் உள்ளது?
- நினிவேயைக் கட்டினவன் யார்?
- நினிவேக்கும் காலாகுக்கும் நடுவில் இருக்கும் பட்டணம் எது?Click here to join our “தேவ வார்த்தை” Whatsapp Group for updatesதினமும் ஒரு தேவ வார்த்தையை பெற “Whatsapp Group” இல் சேரவும்
ஆதியாகமம் அதிகாரம் 11 – 20 Quiz கேள்வி பதில்
- பாஷையை தாறுமாறாக்க யார் இறங்கி வந்தார்?
- ஊர் என்பது யாருடைய பட்டணம்?
- பூமியிலுள்ள வம்சங்களெல்லாம் யாருக்குள் ஆசீர்வதிக்கப்படும் என்று கர்த்தர் சொன்னார்?
- கர்த்தர் சொன்னபடியே அவருக்கு பின் சென்றவர் யார்?
- ஆபிராம் ஆரானைவிட்டுப் புறப்பட்ட போது அவருக்கு வயது என்ன?
- ஆபிராமுடன் சென்றவன் யார்?
- ஆபிராம் சுற்றி திரிந்து எந்த சமபூமி மட்டும் வந்தார்?
- மோரே என்னும் சமபூமியில் வசித்து வந்தவர்கள் யார்?
- தேசத்தில் பஞ்சம் உண்டானபடியால் ஆபிராம் எங்கு தங்கும்படிச் சென்றார்?
- சாராய் யாருக்கு முன்பாக புகழப்பட்டாள்.
- லோத்தும் ஆபிராமும் ஒருமித்து வாழ ஏதுவில்லாமல் போகக் காரணம் என்ன?
- லோத்து எந்த தேசத்தைத் தெரிந்தெடுத்தார்?
- ஆபிராம் எங்கு குடியிருந்தார்?
- எந்த நாட்டு மக்கள் பொல்லாதவர்களும் கர்த்தருக்கு முன்பாக மகா பாவிகளுமாயிருந்தனர்?
- ஆபிராமின் சந்ததியை எப்படி பெருகப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொன்னார்?
- நிலக்கீல் உண்டாகும் கேணிகள் எந்த பள்ளத்தாக்கில் இருந்தன?
- ஆபிராமின் சகோதரனை மீட்க ஆபிராம் எத்தனை நபர்களுடன் யுத்தத்திற்குச் சென்றார்?
- லோத்தின் பொருட்களை மீட்டுக்கொண்டு வந்து கொண்டிருக்கையில் ஆபிராமை ஆசீர்வதித்தவன் யார்?
- மெல்கிசதேக்குக்கு ஆபிராம் எதை கொடுத்து வந்தார்?
- ஆபிராமின் வீட்டுவிசாரணைக்காரன் பெயர் என்ன?
- கர்த்தர் எதை ஆபிராமின் வாழ்வில் நீதியாக எண்ணினார்?
- ஆபிராமுக்கு தேசத்தை சுதந்திரமாக் கொடுக்கும்படி அவனை எந்த பட்டணத்திலிருந்து அழைத்து வந்தார்?
- ஆபிராமின் சந்ததியார் எத்தனை ஆண்டுகள் அன்னிய தேசத்தாரை சேவித்து உபத்திரவப்படுவார்கள்?
- யாருடைய அக்கிரமம் இன்னும் நிறைவாகவில்லை?
- ஆபிராம் எத்தனை ஆண்டுகள் கானான் தேசத்தில் குடியிருந்தபின்பு சாராய் ஆபிராமுக்கு ஆகாரை கொடுத்தாள்?
- ஆகார் சாராயை விட்டு ஓடிப்போக காரணம் என்ன?
- வீட்டை விட்டு ஓடிப்போன ஆகாரை தேவதூதன் எங்கு கண்டுபிடித்தான்?
- யார் துஷ்ட மனிதனாய் இருப்பான் என்று ஆகாரிடம் தூதன் சொன்னான்?
- காதேசுக்கும் பாரேத்துக்கும் நடுவே இருக்கும் தண்ணீர் துரவின் பெயர் என்ன?
- ஆகார் இஸ்மவேலைப் பெற்ற போது ஆபிராமுக்கு வயது எத்தனை?
- ஆபிராகாமின் ஆண் சந்ததி எல்லாம் என்ன செய்யப்பட வேண்டும்?
- எந்த நாளில் விருத்தசேதனம் பண்ணப்படவேண்டும் ?
- விருத்தசேதனம் பண்ணப்படாத ஆண்பிள்ளை எதை மீறினவன்?
- சாராய் என்ற பெயருக்கு தேவன் கொடுத்த புதுப்பெயர் என்ன?
- சாராள் என்பதன் பொருள் என்ன?
- தொன்னூற்று ஒன்பது வயதில் பெற்ற உடன்படிக்கை வார்த்தைகளை கேட்ட ஆபிரகாம் என்ன செய்தார்?
- இஸ்மவேல் எத்தனை பிரபுக்களைப் பெறுவான் என தேவன் சொன்னார்?
- ஆபிரகாம் விருத்தசேதனம் பண்ணப்படுகையில் அவன் வயது என்ன?
- தேவன் ஆபிரகாமுக்கு எங்கு தரிசனமானார்?
- சோதோமின் பாவத்துக்காக கர்த்தர் என்ன செய்தார்?
- சோதோமுக்கு எத்தனை தூதர்கள் வந்தார்கள்?
- அப்பாலே போ பரதேசியாய் வந்த இவனா நியாயம் பேசுவது என்று கூறியவர் யார்?
- லோத்தை வீட்டுக்குள் இழுத்து பூட்டிய பின்னர் தெருவாசலிலிருந்த சோதோமியருக்கு தூதர்கள் என்ன செய்தனர்?
- யாருடைய கூக்குரல் தேவ சமூகத்தில் பெரிதாயிருந்தது?
- லோத்து விரும்பி ஓடிப்போக சம்மதித்த ஊரின் பெயர் என்ன?
- பின்னிட்டுப் பார்த்த லோத்தின் மனைவிக்கு என்ன நேர்ந்தது?
- சோதோம் கொமோராவிலிருந்து எழும்பிய புகை எவ்வாறு இருந்தது?
- சோவாரிலே குடியிருக்கப் பயந்த லோத்து தன் குமாரத்திகளுடன் எங்கே குடியிருந்தார்?
- அபிமெலேக்கு எந்த ஊர் ராஜாவாயிருந்தான்?
- ஆண்டவரே நீதியுள்ள ஜனங்களை அழிப்பீரோ என கேட்டவர் யார்?
- அபிமெலேக் பிழைக்கும்படி யார் அவனுக்காக ஜெபம் செய்வான் என்று அபிமலேக்கிடம் கர்த்தர் சொன்னார்?
- தன் மனைவியினிமித்தம் தன்னை கொன்று போடுவார்கள் என்று பயந்தவன் யார்?
- தன் தகப்பன் வீட்டை விட்டு தேசாந்தரியாய்த் திரிந்தவன் யார்?
- சாராளின் முகத்துக்கு முக்காட்டுக்காக அபிமலேக்கு ஆபிரகாமிடம் எத்தனை வெள்ளிக்காசு கொடுத்தான்?
- யார் நிமித்தமாக அபிமலேக்கின் வீட்டாரின் கர்ப்பங்கள் அடைக்கப்பட்டன?
ஆதியாகமம் அதிகாரம் 21 – 30 Quiz கேள்வி பதில்
- எப்போது ஆபிரகாமுக்கு சாராள் ஒரு குமாரனைப் பெற்றாள்?
- ஆபிரகாம் ஈசாக்குக்கு எட்டாம் நாளில் விருத்தசேதனம் செய்ய காரணம் என்ன?
- ஈசாக்கு பிறந்தபொழுது ஆபிரகாமுக்கு வயது என்ன?
- தேவன் என்னை நகைக்கப்பண்ணினார் என்று சொன்னது யார்?
- யாரிடத்தில் உன் சந்ததி விளங்கும் என்று தேவன் சொன்னார்?
- பெயர்செபா வனாந்திரத்தில் அலைந்து திரிந்தவள் யார்?
- இஸ்மவேல் எந்த வனாந்திரத்தில் இருந்த போது விவாகம் பண்ணினான்?
- ஆபிரகாமிடம் தயவு கேட்டு வந்தவன் யார்?
- அபிமலேக்கும் ஆபிரகாமும் உடன்படிக்கை பண்ணுகையில் ஆபிரகாம் எதை அடையாளமாக கொடுத்தார்?
- அபிமலேக்கும் ஆபிரகாமும் ஆணையிட்டுக் கொண்ட இடத்தின் பெயர் என்ன?
- ஆபிரகாம் பெயர்செபாவிலே எதை உண்டாக்கி கர்த்தருடைய நாமத்தை த் தொழுது கொண்டார்?
- எதற்காக தேவன் ஆபிரகாமே என அழைத்தார்?
- ஆபிரகாம் எத்தனை நாள் பயணத்துக்குப் பின் ஈசாக்கை பலியிடும் மலையைக் கண்டார்?
- ஆபிரகாம் தேவனுக்குப் பயப்படுகிறவர் என்பதை எதினால் கர்த்தர் அறிந்தார்?
- ஆபிரகாம் கர்த்தரின் வார்த்தைக்கு கீழ்படிந்ததினால் ஜனங்களுக்கு என்ன நடக்கும்?
- ஈசாக்கை பலியிடச் சென்ற பின்பு ஆபிரகாம் எங்கே குடியிருந்தார்?
- சாராள் எத்தனை வருடம் உயிரோடிருந்தார்?
- சாராள் எங்கே மரித்தாள்?
- சாராளை அடக்கம் செய்ய தன் குகையை கொடுத்தவர் யார்?
- சாராளை அடக்கம்செய்ய வாங்கிய நிலத்திற்கு எத்தனை சேக்கல் வெள்ளியை ஆபிரகாம் நிறுத்து கொடுத்தார்?
- சாராளை அடக்கம் செய்த குகையின் பெயர் என்ன?
- ஆபிரகாம் ஈசாக்குக்கு எங்கே பெண் கொள்ள வேண்டாம் எனக் கூறினார்?
- ஆபிரகாமின் ஊழியக்காரன் ஈசாக்குக்குப் பெண் பார்க்க எந்த ஊரில் வந்து சேர்ந்தார்?
- கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட்டவரே உள்ளே வாரும் நீர் வெளியே நிற்பானேன் என்று சொன்னவர் யார்?
- ஆபிரகாமின் ஊழியக்காரனுடன் செல்ல ஆயத்தப்பட்ட ரேபேக்காளை சகோதரனும் வீட்டு மக்களும் என்ன சொல்லி வாழ்த்தினர்?
- ஈசாக்கு எந்த துரவின் வழியாய்ப் புறப்பட்டு வந்தார்?
- ஈசாக்கு சாயங்கால வேளையில் எதற்காக வெளியே சென்றார்?
- ஆபிரகாமின் இரண்டாவது மனைவியின் பெயர் என்ன?
- ஆபிரகாம் எத்தனை ஆண்டுகள் உயிரோடிருந்தார்?
- மக்பேலா குகையில் யாரை எல்லாம் அடக்கம் பண்ணினர்?
- இஸ்மவேல் எத்தனை வருடம் வாழ்ந்தார்?
- ஈசாக்கு ரெபேக்காளை விவாகம் பண்ணினபோது அவனுக்கு வயது என்ன?
- ரெபேக்காள் மலடியாயிருந்தபோது ஈசாக்கு என்ன செய்தார்?
- ஈசாக்குக்கு பிள்ளைகள் பிறந்தபோது அவனுக்கு வயது எத்தனை?
- யாக்கோபு எப்படிப்பட்டவனாயிருந்தார்?
- தன் சேஷ்டபுத்திர பாகத்தை அலட்சியம் பண்ணியவர் யார்?
- அபிமலேக்கு எந்த நாட்டின் ராஜா?
- ஈசாக்கிடத்தில் எகிப்துக்கு போக வேண்டாம் என்று சொன்னது யார்?
- ஈசாக்கு வர வர ஐசுவரியவனாகி வருவதைக் கண்டு பொறாமை கொண்டவர்கள் யார்?
- ஈசாக்கின் மேய்ப்பர்களுக்கும் கேராரூர் மேய்ப்பராகளுக்கும் துரவினிமித்தம் ஏற்பட்ட வாக்குவாதத்தினால் அந்த துரவுக்கு என்ன பெயர் வைத்தான்?
- ஈசாக்குவின் மூன்றாவது துரவினால் வாக்குவாதம் வரவில்லை ஆகவே அந்த துரவுக்கு என்ன பெயர் வைத்தான் ?
- ரெகொபோத் என்றால் பொருள் என்ன?
- ஈசாக்கின் வேலைக்காரர் கடைசியாக வெட்டிய துரவின் பெயர் என்ன?
- தன் சொல்லை மாத்திரம் கேட்கும்படி தன் மகனை வற்புறுத்திய தாய் யார்?
- தந்திரமாய் எழுந்து சகோதரன் ஆசீர்வாதத்தைப் பெற்றுக் கொண்ட ஈசாக்கின் மகன் யார்?
- உன்னை காத்து இந்த தேசத்துக்கு உன்னைத் திரும்பி வரப்பண்ணுவேன் நான் உனக்குச் சொன்னதைச் செய்யுமளவும் உன்னைக் கைவிடுவதில்லை என்று யாரிடம் கர்த்தர் சொன்னார்?
- யாக்கோபு கல்தூணை நிறுத்தி எண்ணெய் வார்த்து அவ்விடத்துக்கு என்ன பெயரிட்டார்?
- பெத்தேலுக்கு முற்காலத்தில் இருந்த பெயர் என்ன?
- லேயாளுக்கு வேலைக்காரியாகக் கொடுக்கப்பட்டவள் யார்?
- யாக்கோபு யாரை அதிகமாய் நேசித்தான்?
- கடைசியாக பெற்ற மகனுக்கு லேயாள் இப்பொழுது கர்த்தரை துதிப்பேன் என்று கூறி அவனுக்கு என்ன பெயரிட்டான்?
- பிள்ளை இல்லாவிட்டால் நான் சாகிறேன் எனக் கூறியவள் யார்?
- கோதுமை அறுப்பு காலத்தில் வயல்வெளிகளில் போய் ரூபன் எதை கண்டு எடுத்து கொண்டு தாயிடம் கொடுத்தான்?
- லேயாள் பெற்ற மகளின் பெயர் என்ன?
- ராகேலுக்கு கொடுக்கப்பட்ட மகனின் பெயர் என்ன?Click here to join our “தேவ வார்த்தை” Whatsapp Group for updatesதினமும் ஒரு தேவ வார்த்தையை பெற “Whatsapp Group” இல் சேரவும்
ஆதியாகமம் அதிகாரம் 31 – 40 Quiz கேள்வி பதில்
- லாபான் யாக்கோபின் சம்பளத்தை எத்தனை முறை மாற்றினான் ?
- லாபான் உனக்குச் செய்கிற யாவையும் நான் கண்டேன் என்று கூறியது யார்?
- யாக்கோபு தனக்கு உண்டானவற்றைச் சேர்த்துக்கொண்டு ஆற்றை கடந்து எந்த மலையை நோக்கிப் போனார்?
- தன் தகப்பனுடைய சொரூபங்களைத் திருடியவள் யார்?
- யாக்கோபு லாபான் வீட்டிலிருந்து வெளியேறிய செய்தி லாபானுக்கு எந்த நாளிலே அறிவிக்கப்பட்டது?
- ராத்திரியிலே தேவன் லாபானிடத்தில் என்ன சொன்னார்?
- யாக்கோபு எத்தனை ஆண்டுகள் லாபானிடத்தில் இருந்தார்?
- எத்தனை ஆண்டுகள் லாபானின் குமாரத்திகளுக்காக யாக்கோபு வேலை செய்தான்?
- லாபானும் யாக்கோபும் கல்லை நிறுத்தி உடன்படிக்கை செய்த ஸ்தலம் எது என்று அழைக்கப்படுகிறது?
- இந்த கற்குவியல் எனக்கும் உனக்கும் சாட்சி என்று லாபான் சொன்னபடியால் அது என்ன பெயருடன் அழைக்கப்படுகிறது?
- லாபான் யாக்கோபிடம் நம்முடனே ஒருவரும் இல்லை பார் தேவனே எனக்கும் உனக்கும் சாட்சி என்று சொன்னபடியால் அது என்ன பெயர் பெற்றது?
- லாபானும் யாக்கோபும் மீண்டும் யுத்தத்துக்கு வராமல் இருக்க சாட்சியாக நிறுத்தப்பட்டது எது?
- யாக்கோபு பிரயாணம் பண்ணுகையில் அவரை சந்தித்தவர்கள் யார்?
- தேவனுடைய சேனையை சந்தித்த இடத்துக்கு யாக்கோபு என்ன பெயரிட்டான்?
- ஏசா எத்தனை பேருடன் யாக்கோபை சந்திக்க ஆயத்தப்பட்டான்?
- ஏசாவை கண்டு பயந்த யாக்கோபு இராமுழுதும் என்ன செய்தான்?
- ஏசாவை மகிழ்ச்சியாக்க யாக்கோபு என்ன திட்டம் தீட்டினான்?
- தன் இரு மனைவிகளையும் பதினொரு பிள்ளைகளையும் பணிவிடைகாரர்களையும் யாக்கோபு கூட்டிக்கொண்டு எந்த ஆற்றை கடந்தான்?
- யாக்கோபுக்கு கொடுக்கப்பட்டப் புதுப் பெயர் என்ன?
- யாக்கோபு தேவனை முகமுகமாய் கண்ட இடத்திற்கு என்ன பெயர் வைத்தார்?
- பெனியேல் என்றால் பொருள் என்ன?
- இஸ்ரவேலர் இந்நாள் வரைக்கும் தொடைச்சந்து நரம்பை புசியாததற்கு காரணம் என்ன?
- எத்தனை விசை யாக்கோபு ஏசாவுக்கு முன்பாக தரை மட்டும் குனிந்து வணங்கி ஏசாவின் கிட்ட சேர்ந்தார்?
- யாக்கோபு எங்கே தனக்கு ஒரு வீடு கட்டினார்?
- யாக்கோபு கூடாரம் போட்ட நிலம் ஏமோரின் கையிலே எத்தனை வெள்ளிக் காசுக்கு வாங்கப்பட்டது?
- ஏமோரின் கையில் விலைக்கு வாங்கிய நிலத்தில் யாக்கோபு கட்டிய பலிபீடத்தின் பெயர் என்ன?
- தேசத்துப் பெண்களைப் பார்க்க சென்ற யாக்கோபின் குமாரத்தி யார்?
- சீகேம் யாருடைய மகன்?
- ஏமோரியரைப் பட்டயக்கருக்கால் வெட்டிய தீனாளின் சகோதரர்கள் யார்?
- சீகேமிலிருந்து யாக்கோபும் அவர் ஜனங்களும் கானான் தேசத்திலுள்ள எந்த இடத்துக்கு வந்து சேர்ந்தனர்?
- யாக்கோபு பெத்தேலில் கட்டிய பலிபீடத்திற்கு என்ன பெயர் வைத்தார்?
- ரெபேக்காளின் தாதியின் பெயர் என்ன?
- தெபொராளை அடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கு என்ன பெயர் வந்தது?
- தேவன் தன்னோடு பேசின இடத்திற்கு யாக்கோபு என்ன பெயர் வைத்தார்?
- மரணகாலத்தில் யாருடைய ஆத்துமா பிரியும்போது அவள் தன் குமாரனுக்கு பெனொனி எனப் பெயரிட்டாள்?
- பெனொனி என்பதை தகப்பன் எவ்விதம் மாற்றினார் ?
- ராகேல் மரித்து எங்கே அடக்கம் பண்ணப்பட்டாள் ?
- ஈசாக்கு எந்த வயதில் மரித்தார்?
- ஏதோமியரின் தகப்பன் யார்?
- ஏசாவின் மனைவிகள் பெயர் என்ன?
- பஸ்மாத் யாருடைய குமாரத்தி ?
- அவர்கள் மந்தையினிமித்தம் தாங்கள் தங்கியிருந்த பூமி தாங்க கூடாததாய் இருந்ததால் ஒருவரை ஒருவர் பிரிந்து சென்றவர்கள் யார்?
- ஏசா எந்த மலையில் குடியேறினார்?
- ஏசாவுக்கு கொடுக்கப்பட்ட இன்னொரு பெயர் என்ன?
- யாக்கோபு எங்கே தங்கியிருந்தார்?
- யோசேப்பு எத்தனை வயதில் ஆடுகளை மேய்த்து வந்தார்?
- தன் சகோதரரின் துன்மார்க்கத்தைத் தகப்பனுக்கு எடுத்துக்கூறியவர் யார்?
- யாக்கோபு யோசேப்பை அதிகமாக நேசிக்க காரணம் என்ன?
- யோசேப்பின் இரண்டாவது சொப்பனம் எது?
- யோசேப்பு சொன்ன சொப்பனத்தை மனதில் வைத்துக் கொண்டது யார்?
- யோசேப்பின் சகோதரர்கள் எங்கே ஆடுகளை மேய்க்கப் போனார்கள்?
- யோசேப்பை தப்புவிக்க முயற்சி செய்தவன் யார்?
- நாம் நம்முடைய சகோதரனைக் கொன்று அவன் இரத்தத்தை மறைப்பதினால் லாபம் என்ன என சகோதரரிடம் சொன்னவர் யார்?
- யோசேப்பை எத்தனை வெள்ளிக்காசுக்கு விற்றுப் போட்டார்கள்?
- வஸ்திரங்களைக் கிழித்து அரையில் இரட்டைக்கட்டிக் கொண்டு தன் மகனுக்காக அனேக நாள் துக்கம் கொண்டாடினவர் யார்?
- யூதா தன் சகோதரரை விட்டு யாரிடம் சேர்ந்தான் ?
- யூதா யாரை விவாகம் பண்ணினான்?
- யூதா பெற்ற குமாரர்களின் பெயர் என்ன?
- யார் கர்த்தருடைய பார்வைக்குப் பொல்லாதவனாயிருந்ததினால் கர்த்தர் அவனை அழித்துப் போட்டார் ?
- யார் செய்தது கர்த்தரின் பார்வைக்கு பொல்லாததாயிருந்ததினால் அவனையும் அவர் அழித்துப் போட்டார்?
- என்னிலும் அவள் நீதியுள்ளவள் என்று யார் யாரைக் குறித்து சொன்னது ?
- மீறுதலினால் பிறந்தவனுக்கு என்ன பெயர் இட்டாள்?
- சிவப்பு நூல் கட்டப்பட்டவன் பிறந்த போது அவனுக்கு என்ன பெயரிடப்பட்டது?
- கர்த்தர் யோசேப்போடே கூட இருந்தபடியால் அவன் எப்படிப்பட்டவனான்?
- தேவனுக்கு விரோதமாய்ப் பாவம் செய்வது எப்படி என்று சொன்னவர் யார்?
- எகிப்தின் ராஜாவுக்கு குற்றம் செய்தவர்கள் யாவர்?
- எது தேவனுக்குரியதல்லவா என்று யோசேப்பு சொன்னார்?
ஆதியாகமம் அதிகாரம் 41 – 50 Quiz கேள்வி பதில்
- எகிப்து தேசத்தின் செழிப்பும் பஞ்சமும் யாரால் நிச்சயப்பட்டிருக்கிறது?
- நல்ல விளைச்சல் உண்டாகும் காலத்தில் எத்தனை பகுதியை ராஜாவின் களஞ்சியத்தில் சேர்க்க யோசேப்பு ஆலோசனை சொன்னான்?
- பார்வோன் யோசேப்புக்கு இட்ட பெயர் என்ன?
- யோசேப்புக்கு பார்வோன் யாரை மனைவியாகக் கொடுத்தான்?
- ஆஸ்நாத் யாருடைய மகள்?
- போத்திபிரா எந்த பட்டணந்து ஆசாரியன்?
- யோசேப்பு எகிப்தின் பார்வோனுக்கு முன்பாக நிற்கும் போது அவனுக்கு வயது எத்தனை?
- என் வருத்தம் யாவையும் என் குடும்பம் அனைத்தையும் மறக்கும்படி தேவன் பண்ணினார் என்று சொல்லி யோசேப்பு மூத்தவனுக்கு என்ன பெயர் சூட்டினான்?
- நான் சிறுமைப்பட்டிருந்த தேசத்தில் தேவன் என்னைப் பெருகப் பண்ணினார் என்று சொல்லி யோசேப்பு இளையகுமாரனுக்கு என்ன பெயர் சூட்டினான்?
- சகல தேசத்திலும் பஞ்சம் ஏற்பட்டதும் எந்த தேசத்தில் ஆகாரம் இருந்தது?
- எகிப்து தேசத்தில் வர வர எது கொடிதாயிற்று?
- யோசேப்பின் சகோதரர் எத்தனை பேர் தானியங்கொள்ள எகிப்துக்கு போனார்கள்?
- யோசேப்பு தன் சகோதரர்களை எத்தனை நாள் காவலில் வைத்தான்?
- யோசேப்பு தன் சகோதரர்களிடம் எதைக்கொண்டு பேசினான்?
- யோசேப்பு யாரைப் பிடித்து கட்டுவித்தான்?
- எதைக்கண்டு யாக்கோபும் யோசேப்பின் சகோதரர்களும் பயந்தார்கள்?
- பென்யமீனுக்காக உத்திரவாதம் பண்ண முன் வந்தவன் யார்?
- தன் சகோதரனை மகனே என்றழைத்தது யார்?
- எகிப்தியர் யாரோடு சாப்பிட மாட்டார்கள்?
- பென்யமீனுடைய சாக்கிலே எது கண்டுபிடிக்கப்பட்டது?
- தேவன் எதை விளங்கப்பண்ணினார் என்று யோசேப்பின் சகோதரர்கள் சொன்னார்கள்?
- நீர் பார்வோனுக்கு ஒப்பாயிருக்கிறீர் என்று யோசேப்பை பார்த்து சொன்னவர் யார்?
- என் தகப்பனுக்கு நேரிடும் தீங்கை நான் எப்படி காண்பேன் என்றது யார்?
- யோசேப்பு தன்னுடைய சகோதரரிடத்தில் தேவன் தன்னை எதற்கு எகிப்துக்கு
அனுப்பினார்? - யோசேப்பு தன்னை யாருக்கு தகப்பனாக தேவன் வைத்தார் என்றான்?
பார்வோனுக்கு ஆதி 45: 8 - எந்த சமாசாரம் பார்வோனின் அரன்மனையில் பிரசித்தமாயிற்று?
- யோசேப்பு பென்யமீனுக்கு எத்தனை வெள்ளிக்காசை கொடுத்தார்?
- யாருடைய ஆவி உயிர்த்தது?
- தேவன் யாக்கோபிடத்தில் எங்கு போகப் பயப்படவேண்டாம் என்றார்?
- நான் உன்னுடனே கூட எங்கு வருவேன் என்று தேவன் யாக்கோபுக்கு சொன்னார்?
- கானானிய ஸ்தீரியின் குமாரன் யார்?
- எவர்கள் கானான் தேசத்தில் இறந்தார்கள்?
- ஆசோருடைய மகள் யார்?
- பெரீயாவின் குமார் யார் யார்?
- தாணுடைய குமாரன் யார்?
- எகிப்துக்கு போன யாக்கோபின் குடும்பத்தார் எத்தனை பேர்?
- யாக்கோபு தன்னை யோசேப்பு சந்திக்க வரும்படி சொல்ல யாரை அனுப்பினான்?
- எவர்கள் எகிப்தியற்கு அருவருப்பானவர்கள்?
- பார்வோனின் கட்டளைப்படி யோசேப்பு தன் தகப்பனையும் சகோதரர்களையும் எந்த பட்டணத்தில் குடியேற்றினான்?
- பஞ்சத்தினால் மெலிந்து போன தேசங்கள் எது?
- ஆசாரியரின் நிலம் விற்கப்படாததன் காரணம் என்ன?
- பார்வோனுக்குச் சேராமலிருந்த நிலம் எது?
- யாக்கோபு எகிப்து தேசத்தில் எத்தனை ஆண்டுகள் வாழ்ந்தான்?
- கட்டிலில் சாய்ந்து தொழுது கொண்டவன் யார்?
- கானான் தேசத்திலுள்ள எந்த இடத்தில் தேவன் யாக்கோபுக்குத் தரிசனமாகி ஆசீர்வதித்தார்?
- ராகேல் எங்கு அடக்கம் பண்ணப்பட்டாள்?
- இஸ்ரவேல் தன் வலது கையினால் யாரை ஆசீர்வதித்தார்?
- இஸ்ரவேல் தன் இடது கையினால் யாரை ஆசீர்வதித்தார்?
- யாக்கோபின் குமாரரில் ஏக சகோதரர்கள் யார்?
- சகோதரரால் புகழப்படுபவன் யார்?
- யார் வருமளவும் செங்கோல் யூதாவை விட்டு நீங்குவதில்லை?
- கடல்துறை அருகே குடியிருப்பவன் யார்?
- இரண்டு பொதிகளின் நடுவே படுத்திருக்கும் பலத்த கழுதை யார்?
- இஸ்ரவேலின் ஒரு கோத்திரமாகி தன் ஜனத்தை நியாயம் விசாரிப்பவன் யார்?
- யார் மேல் ராணுவக் கூட்டம் பாய்ந்து விழும்?
- ஆகாரம் கொழுமையானதும் ராஜாக்களுக்கு வேண்டிய ருசி வர்க்கங்களை தருபவன் யார்?
- விடுதலை பெற்ற பெண்மான் யார்?
- கனிதரும் செடி யார்?
- மேய்ப்பனும் இஸ்ரவேலின் கன்மலையுமானவன் யார்?
- பீறுகிற ஓநாய் யார்?
- இஸ்ரவேலின் உடலுக்கு சுகந்த வர்க்கமிட்டவர்கள் யார்?
- சுகந்தவர்க்கம் இட எத்தனை நாட்கள் ஆகும்?
- இஸ்ரவேலுக்காக எகிப்தியர் எத்தனை நாட்கள் துக்கம் அனுசரித்தனர்?
- ஆத்தாத்தின் போர்களம் எங்குள்ளது?
- இஸ்ரவேலுக்காக மிகுந்த துக்கம் கொண்டாடினபடியால் அந்த இடத்துக்கு என்ன பெயர் வந்தது?
- யோசேப்பு எத்தனை வருடம் உயிரோடு இருந்தான்?
- யோசேப்பு ஏப்பீராயீமுக்கு பிறந்த எத்தனை தலைமுறை பிள்ளைகளைக் கண்டான்?
- மரித்துப்போன யோசேப்பை சுகந்த வர்க்கமிட்டு எங்கு வைத்தார்கள்?Click here to join our “தேவ வார்த்தை” Whatsapp Group for updatesதினமும் ஒரு தேவ வார்த்தையை பெற “Whatsapp Group” இல் சேரவும்