கலாத்தியர் அதிகாரம் 1 Quiz கேள்வி பதில்
- பவுலும் அவனோடிருந்த மற்ற சகோதரர்களும் எந்த சபைக்கு காலத்தியர் நிருபத்தை எழுதினார்கள?
 கலாத்தியா (1:2)
- இப்பொழுது இருக்கிற பிரபஞ்சம் எப்படிப்பட்டது என்று பவுல்?சொல்லுகிறார் பொல்லாத பிரபஞ்சம் (1:4)
- கலாத்தியர் எதற்கு திரும்பினார்கள்?
 வேறொரு சுவிஷேசத்திற்கு (1:6)
- கலாத்தியரைத் கலகப்படுத்தினவர்கள் எதை புரட்ட மனதாயிருந்தார்கள்?கிறிஸ்துவினுடைய சுவிசேஷம் (1:7)
- வானத்திலிருந்து வருகிற ஒரு தூதன் வேறொரு சுவிசேஷத்தைப் பிரசங்கித்தால், அவன் எப்படிப்பட்டவன்?
 சபிக்கப்பட்டன் (1:8)
- பவுல் எதை அல்லது யாரை மிகவும் துன்பப்படுத்தினார்?
 தேவனுடைய சபையை (1:13)
- தன் ஜனத்தாரில் தன் வயதுள்ள அநேகரைப்பார்க்கிலும் யூதமார்க்கத்திலே தேறினவனாய் இருந்தவர் யார்?
 பவுல் (1:14)
- பவுல் எதற்க்காக மிகவும் பக்திவைராக்கியமுள்ளவனாயிருந்தார்?
 தன் பிதாக்களுடைய பாரம்பரிய நியாயங்களுக்காக (1:14)
 
- பவுல் தேவனுடைய  குமாரனை யாரிடத்தில் சுவிசேஷமாய் அறிவிக்க தேவன் பிரியமாயிருந்தார்?
 புறஜாதிகளிடத்தில் (1:16)
- தேவன் தம்முடைய குமாரனை தமக்குள் வெளிப்படுத்தப் பிரியமாயிருந்தபோது பவுல் எவைகளோடு யோசனைபண்ணவில்லை?
 மாம்சத்தோடும் இரத்தத்தோடும் (1:16)
- தேவன் தம்முடைய குமாரனை பவுலுக்கு வெளிப்படுத்தினபோது பவுல் எங்கே புறப்பட்டுப் போனார்?
 அரபிதேசத்திற்கு (1:17)
- அரபிதேசத்திலிருந்து பவுல் எங்கே திரும்பி வந்தார்?
 தமஸ்கு ஊருக்கு (1:17)
- மூன்று வருஷம் சென்ற பின்பு பவுல் யாரை கண்டுகொள்ளும்படி போனார்?
 பேதுருவை (1:18)
- பவுல் பேதுருவினிடத்தில் எத்தனை நாள் தங்கியிருந்தார்?
 பதினைந்து நாள் (1:18)
- பவுல் எருசலேமிலிருந்து எந்த நாடுகளின் புறங்களில் வைத்தார்?
 சீரியா சிலிசியா (1:18-21)
 Click here to join our “தேவ வார்த்தை” Whatsapp Group for updates தினமும் ஒரு தேவ வார்த்தையை பெற “Whatsapp Group” இல் சேரவும் 
 
கலாத்தியர் அதிகாரம் 2 Quiz கேள்வி பதில்
- எத்தனை வருஷம் சென்றபின்பு பவுல் மறுபடியும் எருசலேமுக்குப் போனார்?
 பதினாலு வருஷம் (2:1)
- பவுலுடனேகூட இருந்த தீத்து எந்த தேசத்தை சேர்ந்தவன்?
 கிரேக்க (2:3)
- விருத்தசேதனம் பண்ணிக்கொள்ளும்படிக்குக் கட்டாயம்பண்ணப்படாதவன் யார்?
 தீத்து (2:3)
- கிறிஸ்து இயேசுவுக்குள் நமக்கு உண்டானது என்ன?
 சுயாதீனம் (2:4)
- கள்ளச் சகோதரர் எதற்கு நம்மை அடிமைகளாக்கும்பொருட்டாகப் பக்கவழியாய் நுழைந்தார்கள்?
 நியாயப்பிரமாரணத்திற்கு (2:4)
- கலாத்தியரிடம் எது நிலைத்திருக்கும்படி பவுலும் பர்னபாவும் தீத்துவும் கள்ளச் சகோதரருக்கு இணங்கவில்லை?
 சுவிசேஷத்தின் சத்தியம் (2:5)
- பேதுரு யாருக்கு சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கும்படி கையளிக்கப்பட்டது?விருத்தசேதனமுள்ளவர்களுக்கு (2:8)
- பவுலுக்கு யாருக்கு சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கும்படி கையளிக்கப்பட்டது?விருத்தசேதனம் இல்லாதவர்களுக்கு (2:8)
- தூண்களாக எண்ணப்பட்டவர்கள் யார்?
 யாக்கோபும், கேபாவும், யோவானும் (2:9)
- யாரை நினைத்துக்கொள்ளும்படி பவுலிடமும, பர்னபாவிடமும் யாக்கோபும், கேபாவும், யோவானும் கூறினார்கள்?
 தரித்திரரை (2:10)
- பேதுருவை முமுகமாய்ப் எதிர்த்தவர் யார்?
 பவுல் (2:11)
- யாரிடத்திலிருந்து சிலர் வருகிறதற்குமுன்னே பவுல் புறஜாதியாருடனே சாப்பிட்டான்?
 யாக்கோபு (2:12)
- பேதுருவோடே கூட மாயம்பண்ணியவர்கள் யார்?
 மற்ற யூதர்கள் (2:13)
- பேதுருவும் மற்ற யூதரும் எதற்கு ஏற்றபடி சரியாய் நடக்கவில்லை என்று பவுல் கண்டார்?
 சுவிசேஷத்தின் சத்தியத்திற்கேற்றபடி (2:14)
- “புறஜாதியாரை யூதர் முறைமையாக நடக்கும்படி நீர் எப்படிக்கட்டாயம் பண்ணலாம்” – யார், யாரிடம் கேட்டது?
 பவுல் பேதுருவிடம் (2:14)
- எதின் கிரியைகளினாலே மனுஷன் நீதிமானாக்கப்படுவதில்லை?
 நியாயப்பிரமாணத்தின் (2:15)
- எதினால் மனுஷன் நீதிமான்களாக்கப்படுகிறான்?
 கிறிஸ்துவைப்பற்றும் விசுவாசத்தினாலே (2:15)
- பவுல் எதற்க்கென்று நியாயப்பிரமாணத்தினாலே நியாயப்பிரமாணத்திற்கு மரித்தேனே என்று கூறினார்?
 தேவனுக்கென்று பிழைக்கும்படி (2:19)
- பவுல் எதை விருதாவாக்குகிறதில்லை என்று சொன்னார்?
 தேவனுடைய கிருபையை (2:21)
கலாத்தியர் அதிகாரம் 3 Quiz கேள்வி பதில்
- கலாத்தியர் எதற்கு கீழ்ப்படியாமற்போகத்தக்கதாக மயக்கப்பட்டதாக பவுல் கூறினார்?
 சத்தியத்திற்கு (3:1)
- இயேசு கிறிஸ்து எப்படிப்பட்டவராக கலாத்தியருக்கு வெளிப்படுத்தப்பட்டிருந்தார்?
 சிலுவையிலறையப்பட்டவராக (3:1)
- தேவனை விசுவாசித்தான், அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது – இதில் அவன் யாரை குறிக்கிறது?
 ஆபிரகாம் (3:6)
- ஆபிரகாமின் பிள்ளைகளென்று அறியப்படுகிறவர்கள் யார்?
 விசுவாசமார்க்கத்தார்கள் (3:7)
- யாருக்குள் சகல ஜாதிகளும் ஆசீர்வதிக்கப்படும் என்று வேதம் முன்னறிவித்தது?
 ஆபிரகாமுக்குள் (3:8)
- சாபத்திற்குட்பட்டிருக்கிறவர்கள் யார்?
 நியாயப்பிரமாணத்தின் கிரியைக்காரர்கள் (3:10)
- எதில் எழுதப்பட்டவைகளையெல்லாம் செய்யத்தக்கதாக அவைகளில் நிலைத்திராதவன் எவனோ அவன் சபிக்கப்பட்டவன் என்று எழுதியிருக்கிறது?
 நியாயப்பிரமாண புஸ்தகத்தில் (3:10)
- எதினாலே ஒருவனும் தேவனிடத்தில் நீதிமானாகிறதில்லை?
 நியாயப்பிரமாணத்தினால் (3:11)
- எதினாலே நீதிமான் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறது?
 விசுவாசத்தினாலே (3:11)
- மரத்திலே தூக்கப்பட்ட எவனும் ————————————– என்று எழுதியிருக்கிறது?
 சபிக்கப்பட்டவன் (3:13)
- கிறிஸ்து நமக்காகச் சாபமாகி எதற்கு நம்மை நீங்கலாக்கி மீட்டுக்கொண்டார்?
 நியாயப்பிரமாணத்தின் சாபத்திற்கு (3:13)
- கிறிஸ்து இயேசுவினால் புறஜாதிகளுக்கு வருவது?
 ஆபிரகாமுக்கு உண்டான ஆசீர்வாதம் (3:14)
- மனுஷர்களுக்குள்ளே உறுதிபண்ணப்பட்ட எதை ஒருவனும் தள்ளுகிறதுமில்லை?
 உடன்படிக்கையை (3:15)
- உடன்படிக்கைக்கு பின்பு எத்தனை வருடங்கள் கழித்து நியாயப்பிரமாணம் உண்டானது?
 நானூற்றுமுப்பது (3:17)
- நியாயப்பிரமாணமானது எதை வியர்த்தமாக்கமாட்டாது?
 வாக்குத்தத்தத்தை (3:17)
- நியாயப்பிரமாணமானது யாரைக்கொண்டு கட்டளையிடப்பட்டது?
 தேவதூதரைக்கொண்டு (3:19)
 
- நம்மை கிறிஸ்துவினிடத்தில் வழிநடத்துகிற உபாத்தியாய் இருந்தது எது?
 நியாயப்பிரமாணம் (3:24)
- எதற்க்காக நியாயப்பிரமாணம் நம்மை கிறிஸ்துவிடம் வழி நடத்தியது?
 விசுவாசத்திலே நீதிமான்களாக்கப்படுவதற்கு (3:24)
- எது வந்தபின்பு நாம் உபாத்திக்குக் கீழானவர்களல்ல?
 விசுவாசம் (3:25)
- நாம் யாருடைய புத்திரராயிருக்கிறோம்?
 தேவனுடைய (3:26)
- கிறிஸ்துவுக்குள் யூதனென்றும் ————- என்றும் இல்லை?
 கிரேக்கன் (3:28)
- கிறிஸ்துவுக்குள் அடிமையென்றும் ————- என்றும் இல்லை?
 சுயாதீனன் (3:28)
- கிறிஸ்துவுக்குள் ஆணென்றும் ————- என்றும் இல்லை?
 பெண் (3:28)
- வாக்குத்தத்தத்தின்படி சுதந்தரராயிருப்பவர்கள் யார்?
 கிறிஸ்துவினுடையவர்கள் (3:29)
 Click here to join our “தேவ வார்த்தை” Whatsapp Group for updates தினமும் ஒரு தேவ வார்த்தையை பெற “Whatsapp Group” இல் சேரவும் 
 
கலாத்தியர் அதிகாரம் 4 Quiz கேள்வி பதில்
- எல்லாவற்றிற்கும் எஜமானாயிருப்பவன் யார்?
 சுதந்தரவாளியானவன் (4:1)
- தேவனுடையகுமாரன் நாம் எதை அடையும்படிஅனுப்பப்பட்டார்?
 புத்திராசுவிகாரத்தை (4:4, 5)
- நாம் தேவனுடைய புத்திரராயிருக்கிறபடியால் அவரை எப்படி அழைக்கும்படியான உரிமை கொடுத்திருக்கிறார்?
 அப்பா, பிதாவே (4:6)
- இவ்வுலகத்தின் வழிபாடுகள் எப்படிப்பட்டது என பவுல் கூறினார்?
 பெலனற்றதும் வெறுமையானதுமானதும் (4:9)
- கலாத்தியருக்கு பவுல் எதினாலே சத்துருவானேன் என்று கூறினார்?
 சத்தியத்தைத் சொன்னதினாலே (4:16)
- எப்பொழுதும் எதில் வைராக்கியம் பாராட்ட வேண்டும்?
 நல்விஷயத்தில் (4:18)
- அடிமையானவள் சுயாதீனமுள்ளவள் என்பது எதை குறிக்கிறது?
 இரண்டு ஏற்பாடுகள் (4:24)
- இரண்டு ஏற்பாடுகளில் ஒன்று எந்த மலையில் உண்டானது?
 சீனாய்மலை (4:24)
- நாம் யாரைப்போல வாக்குத்தத்தத்துப் பிள்ளைகளாயிருக்கிறோம்?
 ஈசாக்கு (4:28)
- நாம் அடிமையானவளுக்குப் ——————, ————- பிள்ளைகளாயிருக்கிறோம்
 பிள்ளைகளாயிராமல், சுயாதீனமுள்ளவளுக்கே (4:31)
கலாத்தியர் அதிகாரம் 5 Quiz கேள்வி பதில்
- நாம் மறுபடியும் எதின் நுகத்துக்கு உட்படக்கூடாது?
 அடிமைத்தனம் (5:1)
- நியாயப்பிரமாணம் முழுவதையும் நிறைவேற்றக் கடனாளியாயிருக்கிறவன் யார்?
 விருத்தசேதனம் பண்ணிக்கொள்ளுகிற எந்த மனுஷன் (5:3)
- நியாயப்பிரமாணத்தினால் நீதிமான்களாக விரும்புகிறவர்கள் யாரை விட்டு பிரிந்தார்கள்?
 கிறிஸ்து (5:4)
- எதினால் பவுல் நம்பிக்கையோடே காத்திருந்தார்?
 விசுவாசத்தினால் (5:15)
- ————- கிரியைசெய்கிற விசுவாசமே உதவும்.
 அன்பினால் (5:16)
- புளிப்புள்ள கொஞ்சமாவானது எதை உப்பப்பண்ணும்?
 பிசைந்த மாவனைத்தையும் (5:9)
- எதினாலே ஒருவருக்கொருவர் ஊழியஞ்செய்யுங்கள் என்று பவுல் சொல்லுகிறார்?
 அன்பினாலே (5:13)
- ஒருவரையொருவர் கடித்துப் பட்சித்தீர்களானால் ——————-.
 அழிவீர்கள் (5:15)
- ஆவிக்கேற்றபடி நடந்துகொண்டால், அப்பொழுது எதை நிறைவேற்றாதிருப்போம்?
 மாம்ச இச்சையை (5:16)
- மாம்சம் எதற்கு விரோதமாக இச்சிக்கிறது?
 ஆவிக்கு (5:17)
- நாம் ஆவியினால் நடத்தப்படுவோமானால் எதற்கு  கீழ்ப்பட்டவர்களல்ல?
 நியாயப்பிரமாணத்திற்கு (5:18)
- மாம்சத்தின் கிரியைகளைச் செய்கிறவர்கள் எதைச் சுதந்தரிப்பதில்லை?
 தேவனுடைய ராஜ்யத்தை (5:21)
- எதற்கு விரோதமான பிரமாணம் ஒன்றுமில்லை?
 ஆவியின் கனிகளுக்கு (5:23)
- ————- விரும்பாமலும், ஒருவரையொருவர் ————-, ஒருவர்மேல் ஒருவர் ————- இருக்கக்கடவோம்.
 வீண் புகழ்ச்சியை, கோபமூட்டாமலும், பொறாமைகொள்ளாமலும் (5:26)
கலாத்தியர் அதிகாரம் 6 Quiz கேள்வி பதில்
- ஒருவர் பாரத்தை ஒருவர் சுமந்து எதை நிறைவேற்ற வேண்டும்?
 கிறிஸ்துவினுடைய பிரமாணத்தை (6:2)
- ஒருவன், தான் ஒன்றுமில்லாதிருந்தும், தன்னை ஒரு பொருட்டென்று எண்ணினால் அவன் யார்?
 தன்னைத்தானே வஞ்சிக்கிறவன் (6:3)
- ஆவியினாலே நித்தியஜீவனை யார் அறுப்பார்கள்?
 ஆவிக்கென்று விதைக்கிறவன் (6:8)
- எதை செய்கிறதில் சோர்ந்துபோகாமலிருக்க வேண்டும் ?
 நன்மை (6:9)
- விசேஷமாக யாருக்கு நன்மைசெய்யக்கடவோம்?
 விசுவாச குடும்பத்தார்களுக்கு (6:10)
- பவுல் எதை குறித்தேயல்லாமல் வேறொன்றையுங் குறித்து மேன்மைபாராட்டாதிருப்பேனாக என்று கூறினார்?
 கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் சிலுவையை (6:14)
- கிறிஸ்து இயேசுவுக்குள்  —————— காரியம்
 புது சிருஷ்டியே (6:15)
- பவுல் தன் சரீரத்திலே எதை தரித்துக்கொண்டிருக்கிறதாக கூறினார்?
 கர்த்தராகிய இயேசுவினுடைய அச்சடையாளங்களை (6:17)
 Click here to join our “தேவ வார்த்தை” Whatsapp Group for updatesதினமும் ஒரு தேவ வார்த்தையை பெற “Whatsapp Group” இல் சேரவும்