ஓர் என்னும் மலையில் கர்த்தர் ஆரோனையும், மோசேயையும் நோக்கி மேரிபாவின் தண்ணீரைப் பற்றிய காரியத்தில் அவர்கள் கர்த்தருடைய வார்த்தைக்கு கீழ்படியாததால் கானானுக்குள் பிரவேசிக்க முடியாதென்றார். மேலும் கர்த்தர் “ஆரோனையும் அவனுடைய மகனாகிய எலெயாசரையும் கூட்டிக் கொண்டு ஓர் என்னும் மலையில் ஏறி ஆரோனின் வஸ்திரத்தை எலேயாசருக்கு உடுத்தி அங்கே ஆரோன் மரித்து ஜனத்தாரோடு சேர்க்கப்படுவான்.” என்று ஆரோனிடமே கூறினார். கர்த்தர் கூறியபடியே தனது 123 ம் வயதில் ஓர் மலையில் மரித்தான் – எண் 20: 23-28, 33:38,39