இயேசுவை மறுபடியும் பிலாத்துவிடம் அனுப்பினார்கள். பிலாத்து பிரதான ஆசாரியர்களையும், அதிகாரிகளையும், ஜனங்களையும் கூடி வரச்செய்து,
லூக்கா 23 : 14 “அவர்களை நோக்கி: ஜனங்களைக் கலகத்துக்குத் தூண்டிவிடுகிறவனாக இந்த மனுஷனை என்னிடத்தில் கொண்டுவந்தீர்கள். நான் உங்களுக்கு முன்பாக விசாரித்தபோது, இவன்மேல் நீங்கள் சாட்டுகிற குற்றங்களில் ஒன்றையும் நான் இவனிடத்தில் காணவில்லை.” என்றார்.
பிலாத்து கூட்டி வந்தவர்களை நோக்கி இயேசுவைக் கலகத்துக்குத் தூண்டி விடுகிறவன் என்று கூறி கூட்டி வந்தீர்கள். ஆனால் தான் இயேசுவை விசாரித்த போது, இயேசுவின் மேல் அவர்கள் காட்டுகிற ஒரு குற்றத்தையும் காணவில்லை என்றான். மேலும் தான் ஏரோதிடம் இயேசுவை அனுப்பிய போதும், ஏரோதும் இயேசுவிடம் ஒரு குற்றத்தையும் கண்டுபிடிக்கவில்லை என்றான். அந்த நாட்களில் ரோமர்களுக்கும் யூதர்களுக்கும் இடையே இருந்த நட்பு நிலையில் மாற்றம் ஏற்படக்கூடாது என்பதற்காக, ரோம தேசாதிபதி குற்றம் செய்த ஒரு குற்றவாளியான யூதனை பஸ்கா பண்டிகைதோறும் மன்னித்து விடுதலையாக்குவது அவசியமாய் இருந்தபடியினால், மரணத்துக் கேதுவாக இயேசு ஒன்றும் செய்யாததால், இயேசுவைத் தண்டித்து விடுதலையாக்குவேன் என்று அவர்களிடம் கூறினான். அதற்கு யூதர்கள் நீர் இவனை விடுவித்தால் இராயனுக்கு நண்பனாயிருக்க முடியாது என்றார்கள். பிரதான ஆசாரியர்கள் ஜனங்களை ஏவி விட்டபடியினால் ஜனங்கள் எல்லோரும் பிலாத்து கூறியதைக் கேட்டவுடன், பரபாசை விடுதலையாக்கும், இயேசுவை சிலுவையிலறையும் என்று கூக்குரலிட்டனர். பரபாசென்பவன் கொலை செய்யப்பட்டதினிமித்தம் காவலில் வைக்கப்பட்டிருந்தான்.
பிலாத்துவின் மனைவி பிலாத்துவுக்கு ஆளனுப்பி “நீர் அந்த நீதிமானை ஒன்றும் செய்ய வேண்டாமென்று எச்சரித்தாள். மேலும் பிலாத்து யோவான் 19 15 ல் உங்கள் ராஜாவை நான் சிலுவையில் அறையலாமா என்றான். நயவஞ்சகமும், மாயக்காரர்களுமாகிய பிரதான ஆசாரியர் இராயனே யல்லாமல் தங்களுக்கு வேறு ராஜா இல்லையென்றனர். உண்மையில் அவர்கள் இராயனையும், அவன் அரசையும் வெறுத்தவர்கள். பிலாத்தைப் பிரியப்படுத்த இவ்வாறு சொன்னார்கள். தன்னுடைய சிலுவை மரணத்தின் மூலம் நித்தியஜீவனைக் கொடுக்கத் தன்னை அர்ப்பணித்த இயேசுவை ஏற்றுக்கொள்ளாமல், பாவத்திற்கு மேல் பாவம் செய்து நித்திய அழிவைத் தேடிக் கொண்டனர். யூதத் தலைவர்கள் பொறாமையினால் இயேசுவை ஒப்புக் கொடுத்தனர். பிலாத்துவுக்கு அவரது மனைவி மூலம் தேவன் எச்சரிக்கையையும், அக்குற்றத்தைச் செய்யாமல் தப்பித்துக்கொள்ளும் வாய்ப்பும் அளித்தார். பிலாத்து அதையும் பொருட்படுத்தவில்லை. எனவே பிலாத்து,
மத்தேயு 27 : 24 “கலகம் அதிகமாகிறதேயல்லாமல் தன் பிரயத்தனத்தினாலே பிரயோஜனமில்லையென்று பிலாத்து கண்டு, தண்ணீரை அள்ளி, ஜனங்களுக்கு முன்பாகக் கைகளைக்கழுவி: இந்த நீதிமானுடைய இரத்தப்பழிக்கு நான் குற்றமற்றவன், நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள் என்றான்.”
கலகக்காரனும் கொலைகாரனுமாகிய பரபாசை விடுவிப்பதைவிட, நீதிமானா கிய இயேசுவை மரண தண்டனைக்கு ஏதுவான எந்தக் குற்றமும் செய்யாத வரை விடுதலை செய்யப் பிலாத்து விரும்பினான். இதற்காக மூன்று முறை பிரயாசப்பட்டான். பிலாத்து தன்னுடைய பிரயாசத்தினால் ஒன்றும் நடக்காது என்பதையறிந்து ஜனங்களைப் பிரியப்படுத்த மனதுள்ளவனாய் பரிபாசை அவ ர்களுக்கு விடுதலையாக்கி. இயேசுவை வாரினால் அடிப்பித்து சிலுவையில் அறையும்படி ஒப்புக் கொடுத்தான். நியாயாதிபதியான பிலாத்து தானாகத் தீர்ப்பு வழங்குவதற்குப் பதிலாக, ஜனங்களிடம் தீர்ப்பு கூறும்படி கேட்டது வழக்கத்திற்கு மாறானது. தண்ணீரினால் தன் கைகளைக் கழுவி நீதிமானாகிய இயேசுவின் இரத்தப்பழிக்கு தான் குற்றமற்றவன் என்று தன் வாயினால் அறிக்கையிட்டான். கையைக் கழுவுவதால் பொறுப்பு, குற்றம் ஆகியவை இல்லாமல் போகாது. இதைக் கேட்ட ஜனங்கள் பேசாமலிருந்திருக்கலாம். அவர்களின் கோபம், வெறுப்பு பொறாமை ஆகியவற்றின் உச்சகட்டமாக ஜனங் கள், இயேசுவினுடைய இரத்தப்பழியைத் தங்கள் மேலும் தங்கள் பிள்ளை களின் மேலும் தாங்களாகவே ஏற்றுக்கொண்டனர். பொறாமையினால் இயேசு தவறாக ஒப்புக்கொடுக்கப்பட்டவர் என்று பிலாத்து அறிந்திருந்தும் இயேசு வுக்கு மரணதண்டனை தந்தது மாபெரும் தவறு. அப்பொழுது தேசாதியின் போர்சேவகர்கள் அனைவரும் இயேசுவை ஏளனம் செய்தபின் இயேசு உடுத்தியிருந்த வஸ்திரங்களை கழற்றி சிவப்பான மேலங்கியை அணிவித்து இயேசுவை சிலுவையிலறையக் கூட்டிச் சென்றனர்.