Menu Close

கொர்நேலியு

செசரியா என்னும் பட்டணத்தில், இத்தாலியா பட்டாளம் என்னப்பட்ட பட்டா ளத்தில் கொர்நேலியு என்ன பெயருடைய நுற்றுக்கதிபதி இருந்தான். இந்த செசரியாப்பட்டணம் இராணுவத்தின் தலைமையிருப்பிடமாக இருந்து வந்தது. அதனால்தான் ஏரோது அதை எடுத்துப் பிரமாதமாகக் கட்டினான். பிலிப்பு இந்த செசரியா பட்டணத்தில் போய் சுவிசேஷம் அறிவித்ததை அப்போஸ்தலர் 8 : 40 ல் பார்க்கிறோம். நுற்றுக்கதிபதியென்றால் ரோமரின் இராணுவத்திலுள்ள 6000 போர்சேவகரில், 100 போர்சேவகர்களுக்குத் தலைவனாக இருப்பவன். இவன் ஒரு புறஜாதி மனிதனாக இருந்தாலும்,யூத வழக்கத்தின்படியே முறைமைகளைச் செய்தான். யூதர்களை ஆளுகை செய்கிறவனாக இருந்தாலும், யூதர்கள் எல்லோ ரிலும் நற்பெயர் பெற்றவனாகக் காணப்பட்டான். இவன் மிகுந்த தேவபக்தியுள் ளவன்.தன் வீட்டாரனைவரோடும் தேவனுக்குப் பயந்து எப்பொழுதும் தேவனை நோக்கி ஜெபம் பண்ணிக் கொண்டிருந்தவன். இவன் வேதாகமத்தையோ, வேதா கமம் வெளிப்படுத்தும் தேவனையோ அறிந்தவனல்ல. இயேசுவை அறிய வேண் டிய விதத்தில் அறியவில்லை. அவன் இன்னும் இரட்சிக்கப்படவோ, ஞானஸ் நானம் எடுக்கவோ, பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைப் பெறவோ இல்லை. ஆனால் தேவனைக் குறித்த வெளிப்பாடு இருந்தது. அவனது உள்ளம் தேவனை இன்னும் அறிய வேண்டுமென்று துடித்தது. கொர்நேலியு விக்கிரகங்களை விட்டு உண்மையான தேவனைப் பக்தியுடன் நாடியவர். அவன் உத்தமனாயி ருந்தபடியால் ஏழை ஜனங்களுக்கு மிகுந்த தானதர்மங்களைச் செய்தான். 

கொர்நேலியு கண்ட தேவதரிசனம்:

தமஸ்கு வீதியில் பக்தியுள்ளவனாயிருந்த பவுலைத் தேவன் தனக்கென்று தெரி ந்து கொண்டதைப் போல, கர்த்தரை அறிந்துகொள்ள வேண்டுமென்ற தாகமுள்ள கொர்நேலியுவுக்கு கர்த்தர் தரிசனத்தைக் கொடுத்தார். கொர்நேலியுவை ஆயத் தப்படுத்த தன்னுடைய தேவதூதனை அவனிடம் அனுப்பினார். கொர்நேலியு தன்னுடைய வீட்டில் வழக்கத்தின்படியே ஒன்பதாம் மணி வேளையில் ஜெபம் பண்ணிக் கொண்டிருக்கும் போது, அவனுடைய அந்த அறையில் தேவதூதன் ஒருவன் தரிசனத்தில் தன்னுடைய பெயரைச் சொல்லி அழைப்பதைக் கண்டான். தேவதூதனை உற்றுப்பார்த்த கொர்நேலியு பயத்துடன் ஆண்டவரே என்றான். உடனே தேவதூதன்,

அப்போஸ்தலர் 10 : 4 “உன் ஜெபங்களும் உன் தருமங்களும் தேவனுக்கு நினைப்பூட்டுதலாக அவர் சந்நிதியில் வந்தெட்டியிருக்கிறது.”

என்று கூறி அவன் செய்ய வேண்டிய காரியங்களைத் தெரிவித்தான். இதிலிருந்து கிறிஸ்தவரல்லாதவர்களின் ஜெபங்களை,அவர்கள் தெய்வ பயத்தோடு உண் மையாய் ஜெபிக்கும்போது தேவன் கேட்டு, அவர்களைத் தம்மண்டை வழி நடத்துகிறாரென்றறிகிறோம். தூதன் அவனிடம் தெளிவாக முகவரி, அவன் பார்க்க வேண்டிய நபரின் பெயர், அவன் என்ன செய்து கொண்டிருக்கிறான், அவன் யார் வீட்டில் தங்கியிருக்கிறான், அவனுடைய வேலை என்ன என்ப தெல்லாம் தெளிவாகக் கூறினான். கொர்நேலியுவிடம் தூதன் யோப்பா பட்ட ணத்தில் தோல் பதனிடும் தொழில் செய்து கொண்டிருக்கும் சீமோனுடைய வீட்டிற்கு உன்னுடைய ஆட்களை அனுப்பு என்றான். அவனுடைய வீட்டில் பேதுரு என்ற மறுபெயர் கொண்ட சீமோன் என்பவன் தங்கியிருக்கிறான் என்றான். அந்த வீடு கடலோரத்தில் இருப்பதாகவும், அவன் வந்து உன்னி டத்தில் பேசுவான் என்றும் கூறினான் (அப்போஸ்தலர் 10:5 –6, 30-32). 

இதேபோல் லூக்கா 1:6 – 20 ல் சகரியாவும், எலிசபெத்தும் கர்த்தரிட்ட சகல கற்பனைகளின்படியும், நியமனங்களின்படியும் குற்றமற்றவர்களாய் நடந்து நீதியுள்ளவர்களாயிருந்தாலும் குழந்தை பாக்கியமில்லாதிருந்தார்கள். மிகவும் வயதாகி விட்டதால் குழந்தை வேண்டுமென்பதையே விட்டு விட்டார்கள். வருஷத்துக்கு இரண்டு முறை ஆசாரிய ஊழியம் செய்யப் போகும் போது அத்தனை வருடங்கள் வராத தூதன் அன்று வந்து அவனிடம் குழந்தை பிறக் கப் போவதைக் குறித்தும், அதை வளர்க்கும் முறையைக் குறித்தும் தெளிவா கப் பேசியதைப் பார்க்கிறோம். அதேபோல் 40 வருடங்களாக மீதியான் தேசத் தில் ஆடுமேய்த்துக் கொண்டிருந்த மோசேக்கு 40 வருடங்களுக்குப் பின் தேவ தூதன் முட்செடியின் நடுவிலிருந்து அவனை அழைத்து இஸ்ரவேல் ஜனங் களை விடுவிக்க அவனைப் பயன்படுத்தப் போகும் காரியங்களைப் பற்றிப் பேசியதை யாத்திராகமம் 3:1 – 10ல் பார்க்கிறோம். ஏனெனில் 40 வருடங்களாக அதரிசனமான தேவனை மோசே தேடித் திரிந்தான் (அப்போஸ்தலர் 11 : 27). 

கொர்நேலியு தரிசனத்தில் தேவதூதன் சொன்னபடி தன்னுடைய வீட்டிலுள்ள இரண்டு மனுஷர்களையும், தன்னுடைய போர்சேவகர்களில் தேவபக்தியுள்ள ஒருவனையும் அழைத்து, தான் கண்ட தரிசனத்தை அவர்களுக்கு விவரித்துச் சொல்லி அவர்களை தூதன் சொன்ன முகவரியான யோப்பா பட்டணத்துக்குச் சென்று பேதுரு அப்போஸ்தலனை அழைத்துவரும்படி அனுப்பினான். தேவ தூதனுக்குக் கிறிஸ்து இந்த உலகத்தாரின் பாவங்களுக்காக மரித்து, மரணத் திலிருந்து உயிர்த்தெழுந்தார் என்று நன்கு தெரியும். அந்தத் தூதனால் பேதுரு பிரசங்கிப்பதைவிட பத்துமடங்கு அதிகமாக விளக்கிக் கூறவும் முடியும். தூதனி டமில்லாத ஒன்று பேதுருவிடமிருந்ததால் பேதுருவை அழைக்கக் கர்த்தர் ஏவினார் அது என்னவென்றால் பேதுரு பெற்றிருந்த இரட்சிப்பின் அனுபவம் தூதனிடம் இல்லாதது தான். அவர்கள் யோப்பா பட்டணத்தை சென்றடைந்தனர். 

பேதுரு கண்ட தேவ தரிசனம்: 

அப்பொழுது அப்போஸ்தலர்கள் பல பகுதிகளில் ஊழியம் செய்து கொண்டிருந் தனர். பேதுரு அப்போஸ்தலனும் சில பகுதிகளில் தன்னுடைய ஊழியத்தை முடித்து விட்டு யோப்பா பட்டணத்தில் தோல் பதனிடும் சீமோன் வீட்டிலே தங்கி யிருந்தான். அடுத்தபடியாகப் பேதுருவை கொர்நேலியுவின் வீட்டில் சுவிசேஷம் சொல்லக் கர்த்தர் ஆயத்தப்படுத்தினார். பேதுரு தன்னுடைய மனநிலையில் விடாப்பிடியாக இருப்பதையறிந்த தேவன் ஒரு தரிசனத்தைக் கொடுத்து அவனது மனநிலையை மாற்ற எண்ணினார். கொர்நேலியு தரிசனம் கண்ட மறு நாள் பேதுரு ஆறாம் மணி நேரத்தில் ஜெபம் பண்ணும்படி மேல்வீட்டில் ஏறி னான். நீண்டநேரம் ஜெபம் பண்ணியதால் பேதுருவுக்குப் பசியுண்டாயிற்று. அந்த வீட்டிலுள்ளவர்கள் உணவை ஆயத்தப்படுத்திக் கொண்டிருந்தனர். அப்பொழுது பேதுரு ஞானதிருஷ்டியடைந்தான். 

அந்தத் தரிசனத்தில் திறந்த வானத்தில் பூமியிலுள்ள சகலவிதமான நாலுகால் ஜீவன்களும், காட்டுமிருகங்களும், ஊரும் பிராணிகளும், ஆகாயத்துப் பறவை களும் நாலுமுனைகளும் கட்டப்பட்ட பெரிய துப்பட்டியைப் போன்ற ஒரு கூடு தன்னிடத்தில் இறங்கி வருவதைப் பார்த்தான். இதேபோல் எசேக்கியேல் 1 : 1 ல் எசேக்கியேல் வானங்கள் திறக்கப்பட்ட தேவதரிசனங்களைக் கண்டான். இயேசு வானவர் ஞானஸ்நானம் பெற்றபோது வானம் அவருக்குத் திறக்கப்பட்டது. தேவ ஆவி புறாவைப் போல் அவர்மேல் இறங்கியது. அப்போஸ்தலர் 7 : 56 ல் ஸ்தேவான் வானத்தை அண்ணாந்து பார்த்து தேவனுடைய மகிமையையும், தேவனுடைய வலது பாரிசத்தில் இயேசுவானவர் நிற்கிறதையும் கண்டான். மேலும் அந்தக் கூட்டிலிருந்து ஒரு சத்தம் உண்டாயிற்று. அது என்னவென் றால் “பேதுருவே அடித்துப் புசி” என்பதுதான். பேதுரு ஒரு யூதனாக இருந்த படியா லும், லேவியராகம் 11ம் அதிகாரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சில தீட்டுள்ள மிருக ங்கள் அதில் இருந்தபடியாலும் மோசேயின் பிரமாணத்தின்படி மறுத்தான். 

அப்படிப்பட்ட கர்த்தருடைய கட்டளைகளை அறிந்தபடியினாலும், ஆண்டவரே தான் ஒருக்காலும் தீட்டும், அசுத்தமாயிருக்கிற ஒன்றையும் புசித்ததில்லை என்றான். அதற்குப் பதிலாகக் கர்த்தர் “தான் சுத்தமாக்கினவைகளை நீ தீட்டாக எண்ணாதே” என்று மூன்று முறை கூறிய பின் அந்தக் கூடு வானத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இயேசு தன்னுடைய பிரசங்கத்தில் மத்தேயு 15 : 11 ல் “வாய்க்குள்ளே போகிறது மனுஷனைத் தீட்டுப்படுத்தாது, வாயிலிருந்து புறப்படுகிறதே மனுஷனைத் தீட்டுப்படுத்தும் என்றார்.” இந்தத் தரிசனம் எப்படிப் பட்டது என்று பேதுரு சிந்தித்துக் கொண்டிருந்தான். எதற்காகத் தேவன் இந்தத் தரிசனத்தைக் கொடுத்தாரென்றால் பேதுரு ஒரு யூதனாதலால் யூதரல்லாத வீட்டிற்குச் செல்லவோ, அங்கு உணவு புசிக்கவோ மாட்டான். அதனால்தான் தான் சுத்தமாக்கினதை அவன் அசுத்தனென்று எண்ணக்கூடாது என்கிறார். அதா வது அசுத்தம் என்று கருதப்பட்ட யூதரல்லாத ஒரு மனிதனின் வீட்டுக்குப் போகச் சொல்லியிருக்கிறாரென்பதை பேதுரு விளங்கிக் கொண்டான். 

பேதுரு தேவ கட்டளைக்குக் கீழ்ப்படிதல்:

பேதுரு தான் கண்ட தரிசனத்தைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருக்கையில் கொர்நேலியு அனுப்பின மூன்று மனுஷர் பேதுரு இருந்த வீட்டிற்கு வந்து அவனைப் பற்றி விசாரித்தனர். அப்பொழுது பேதுருவிடம் ஆவியானவர் தான் தான் அங்கு வந்திருக்கிற மூன்று மனுஷர்களையும் அனுப்பியதாகவும், ஆத லால் ஒன்றுக்கும் சந்தேகப்படாமல் அவர்களுடனேகூடப் போகக் கட்டளையிட் டார். பேதுரு அங்கு தேடி வந்தவர்களைப் பார்த்து அவர்கள் வந்திருக்கிற காரி யம் என்னவென்று கேட்டான். அதற்கு அவர்கள் கொர்நேலியு என்ற நுற்றுக்கதி பதி உம்மை அழைத்து நீர் சொல்லும் வார்த்தைகளைக் கேட்கும்படி தூதனாலே தரிசனம் பெற்றார் என்றனர். உடனே பேதுரு அவர்களை உள்ளே அழைத்து உபச்சாரஞ் செய்து, யோப்பா பட்டணத்திலுள்ள சகோதரர் சிலரையும் கூட்டிக் கொண்டு மறுநாளில் அவர்களுடனே கூடப் போனான். மறு நாளில் செசரியா பட்டணத்தை அடைந்தனர். அங்கு கொர்நேலியு தன்னுடைய சொந்த பந்தங் களையும், தன்னுடைய சிநேகிதர்களையும் தன்னுடைய வீட்டில் வரவழைத்து பேதுருவின் வருகைக்காகக் காத்திருந்தான். 

பேதுரு கொர்நேலியுவின் வீட்டில் பண்ணின பிரசங்கம்:

முதலாவது யூதர்களுக்கும், பின்பு யூதரல்லாதவர்களுக்கும் சுவிசேஷத்தின் வாசலைத் திறக்கும் பாக்கியம் பேதுருவுக்கே அருளப்பட்டது. கொர்நேலியு வீட்டில் பேதுரு பிரவேசித்தபோது கொர்நேலியு பேதுருவுக்கு எதிர் கொண்டு போய் அவன் பாதத்தில் விழுந்து பணிந்து கொண்டான். உடனே பேதுரு நுற்றுக்கதிபதி தன்னுடைய காலில் விழுந்தான் என்று எந்தப் பெருமையும டையாமல் அவனைத் தூக்கியெடுத்து, நானும் ஒரு மனுஷன் தான் என்றான். பேதுரு உள்ளேபோய் அங்கு கூடியிருப்பவர்களையெல்லாம் பார்த்து வியந் தான். பின் அங்குள்ளவர்களிடம் தேவன் எந்த மனிதனையும் தீட்டுள்ளவனென் றும், அசுத்தனென்றும் சொல்லாதபடிக்கு காண்பித்தாரென்றான். பின் கொர்நே லியுவைப் பார்த்து, தன்னை எதற்காக அழைத்தீர்கள் என்று கேட்டான். அதற்கு கொர்நேலியு தான் கண்ட தரிசனத்தைக் கூறி அதனால் தான் உம்மை அழைத்து வந்து தேவன் உமக்கு கட்டளையிட்ட காரியத்தைக் கேட்கும்படி அமர்ந்திருக் கிறோம் என்றான். பேதுரு அங்கு பிரசங்கம் பண்ணினான். 

தேவன் பட்சபாதமுள்ளவரல்ல என்றும், எந்த ஜாதியைச் சேர்ந்தவனாயிருந் தாலும் தேவனுக்குப் பயந்தவனாய் நீதியைச் செய்கிறவன் தேவனுக்கு உகந்த வன் என்றான். ஒரு ஆத்துமாகூட அழிந்துபோவது தேவனுக்குப் பிரியமல்ல என்றான். பவுலும் கலாத்தியர் 2 : 6 ல் “தேவன் மனுஷரிடத்தில் பட்சபாத முள்ளவரல்லவே” என்றும், உபாகமம் 10 : 17 ல் “கர்த்தர் பட்சபாதம் பண்ணுகிற வருமல்ல, பரிதானம் வாங்குகிறவருமல்ல” என்றுள்ளது. இயேசு கிறிஸ்துவே வெளிப்பட்ட மேசியா என்றும், அவரை எவ்வாறு மரண தண்டனைக்குட்படு த்தினரென்றும், தேவன் அவரை எவ்வாறு உயிரோடெழுப்பி தனது வலது பாரிச த்தில் உயர்த்தி வைத்திருக்கிறாரென்றும், இவைகளனைத்துக்கும் அப்போஸ்த லர்களாகிய நாங்களே சாட்சி என்றான். மேலும் இயேசுவின் ஊழியத்தைப் பற்றிச் சொல்லும்போது இயேசுவைத் தேவன் பரிசுத்த ஆவியினாலும் வல்ல மையினாலும் அபிஷேகம் பண்ணி தேவன் அவருடனே இருந்தபடியால் அவர் நன்மை செய்கிறவராகவும், பிசாசின் பிடியிலகப்பட்ட யாவரையும் குணமாக் குகிறவராயும் சுற்றித் திரிந்தார் என்று கூறினார் (ஏசாயா 61 : 1 – 3). 

பேதுருவின் பிரசங்கத்தைக் கேட்டதால் நடந்த சம்பவம்:

இந்த வார்த்தைகளை பேதுரு பிரசங்கித்துக் கொண்டிருக்கையில் அங்கு வசனத் தைக் கேட்டுக்கொண்டிருந்த அனைவர் மேலும் பரிசுத்தஆவியானவர் இறங்கி, அவர்களனைவரும் பற்பல பாஷைகளைப் பேசி தேவனைப் புகழ்ந்தனர். அப்போ ஸ்தலர் 2ம் அதிகாரத்தில் நடந்த சம்பவத்தைப் போலவே கொர்நேலியுவின் வீட்டிலும் நடந்தது. அவர்கள் கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டபடியினால் தேவன் அவர்கள்மேல் பரிசுத்த ஆவியைப் பொழிந்தருளினார். எனவே பேதுரு பரிசுத்தஆவியானவர் இவர்களை அபிஷேகித்திருக்கிறாரே, அதனால் அவர்கள் ஞானஸ்நானம் பெறுவதற்குத் தடையில்லை என்று, அங்கு வந்திருந்த அனைவ ருக்கும் கர்த்தருடைய நாமத்தினாலே ஞானஸ்நானம் கொடுத்தார். யூதரல்லா தவர்களுக்கு அளித்த முதல் செய்தியின் முதல் கருத்து தேவன் பட்சபாதமுள் ளவரல்ல என்பதாகும். யாராயிருந்தாலும் தங்களுடைய பாவங்களை அறிக்கை யிட்டு, மன்னிப்பு கேட்டு, இயேசுவை இரட்சகராக ஏற்றுக்கொள்ளும் யாவருக் கும் தேவன் இரட்சிப்பை அருளுகிறார். இந்த சங்கதிகளனைத்தும் நடந்தபின்னர் எருசலேமுக்கு பேதுரு திரும்பிப் போனார். இரட்சிப்பின் செய்தியைக் கேட்டுக் கொண்டிருந்தவர்கள் மீது இரட்சிப்பும், ஆவியானவரின் அபிஷேகமும் பெற்றுக் கொண்டதாக வேதத்தில் கூறப்படும் ஒரே நிகழ்ச்சி இதுதான். 

முடிவுரை:

கொர்நேலியுவின் மூலம் நாம் அறிந்து கொண்ட பாடம் என்னவெனில், இயேசு ஒருவரே அனைத்துலக மனிதருக்கும் இரட்சகர். சிறந்த பக்தியுள்ள குடும்பத் தலைவரால் தமது குடும்பத்தாரையும், உறவினரையும் கர்த்தருக்குள் வழிநடத்த முடியும். தாகமுள்ள யாராயிருந்தாலும் தேவன் சந்திப்பார் என்பதில் சந்தேக மில்லை. பக்தியால் ஒரு போதும் இரட்சிபடையை முடியாது. இயேசுவை விசு வாசித்தால் மட்டுமே இரட்சிக்கப்பட முடியும். தானதர்மங்கள் தேவனுக்குப் பிரி யமானவை. ஆனால் அவற்றால் இரட்சிக்கப்பட முடியாது. சுவிசேஷத்தைக் கேட்டு மனந்திரும்பி இயேசுவை ஏற்றுக்கொண்டால் மட்டுமே இரட்சிப்பைப் பெற்றுக்கொள்ள முடியும். இரட்சிக்கப்பட்டோர் நற்கிரியை செய்ய வேண்டியது அவசியமான ஒன்று. ஆனால் நற்கிரியை இரட்சிக்கப்பட்டதற்கு உறுதியான அடையாளம் அல்ல. ஆமென்.

Related Posts