ஆதியாகமம் 49 : 10 “சமாதானக் கர்த்தர் வருமளவும் செங்கோல் யூதாவைவிட்டு நீங்குவதும் இல்லை, நியாயப்பிரமாணிக்கன் அவன் பாதங்களை விட்டு ஒழிவதும் இல்லை; ஜனங்கள் அவரிடத்தில் சேருவார்கள்.”
யாக்கோபு கடைசியாகத் தன் பிள்ளைகள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதித்தார். ரூபன், சிமியோன், லேவிக்கு அடுத்தபடியாக, உண்மையான பதவிக்குத் தகுதியுடையவனாக யூதா விளங்குகிறார். யூதாவை ஆசீர்வதிக்கும் போது இந்த ஆசீர்வாதத்தைக் கூறி யாக்கோபு ஆசீர்வதித்தார். சமாதானக் கர்த்தராகிய மேசியா யூத சந்ததியில் தோன்றுவார் என்ற முதல் வாக்குத்தத்தம் நிறைவேறியதை மத்தேயு 1 : 1 – 3, எபிரேயர் 7 : 14ல் பார்க்கிறோம்.