Menu Close

விசாரணையின் போது இயேசுவுக்கு எதிரான குற்றச்சாட்டுகள்

இயேசு சிலுவையில் அறையப்படுவதற்கு முந்தைய விசாரணையின் போது, யூத மத தலைவர்களும் ரோம ஆட்சியாளர்களும் அவர்மீது பல குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். இவ்வாறான குற்றச்சாட்டுகள் அவரை தண்டிக்க வழிவகுக்கும் வகையில் திட்டமிட்டு கூறப்பட்டவை. கீழே அந்தக் குற்றச்சாட்டுகளின் பட்டியலைக் காணலாம்.

1. மாற்கு 2 : 5 – 7 ல் இயேசு பாவங்கள் மன்னிக்கப்பட்டது என்றதால் வேதபாரகர் குற்றம்சாட்டினார்.

2. மாற்கு 3 : 22 ல் இயேசு பிசாசுகளைத் துரத்தினதினால் வேதபாரகர் குற்றம் சுமத்தினார்.

3. மாற்கு 2 : 15, 16 ல் இயேசு ஆயக்காரரோடும், பாவிகளோடும் பந்தியிருந்ததால் வேதபாரகரும், பரிசேயரும் குற்றம் சுமத்தினார்கள்.

4. மாற்கு 2 : 23 – 25 ல் சீஷர்கள் ஓய்வுநாளில் கதிர்களைக் கொய்ததால் பரிசேயர் தவறு என்றனர். இயேசுவோ தவறில்லை என்றதால் குற்றம் சுமத்தினார்.

5. மாற்கு 8 : 11, 12 ல் பரிசேயர் இயேசுவிடம் அடையாளம் கேட்டு, அவர் அடையாளம் எதுவும் கொடுக்காததால் குற்றம் சுமத்தினார்.

6. மாற்கு 7 : 1, 2 ல் பரிசேயரும், வேதபாரகரும் இயேசுவின் சீஷர்களில் சிலரும் கைகளைக் கழுவாமல் போஜனம் பண்ணியதால் குற்றம் கண்டு பிடித்தனர்.

7. மாற்கு 11 : 18ல் இயேசு எருசலேம் தேவாலயத்தில் விற்கிறவர்களையும், கொள்ளுகிறவர் களையும் துரத்தி விட்டதால் வேதபாரகரும், பிரதான ஆசாரியரும் இயேசுவைக் கொலைசெய்ய வகைதேடினர்.

8. மாற்கு 12 : 11, 12 இயேசு கூறின திராட்சத் தோட்ட உவமையைக் கேட்டு பிரதான ஆசாரியரும், வேதபாரகரும், மூப்பரும் அவரைப் பிடிக்க வகை தேடினர்.

9. மாற்கு 5 : 13, 17 ல் சுதரேனருடைய ஜனங்கள் அவர்களுடைய பன்றிகள் மாண்டதால் தங்கள் எல்லைகளை விட்டுப் போகும்படி வேண்டினர்.

10. யோவான் 10 : 30லும் , 5 : 18 லும் இயேசு தானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம் என்றதால் முறுமுறுத்தனர் (யோவான் 6 : 42).

Related Posts