Menu Close

ஏரோது அரசனிடம் இயேசுவின் ஐந்தாவது விசாரணை (லூக்கா 23 : 6 – 12)

இயேசு கலிலேயன் என்பதை பிலாத்து கேள்விப்பட்டபோது இயேசுவை ஏரோதுவின் அதிகாரத்திற்கு உள்ளானவர் என்றறிந்து அந்த நாட்களில் எருசலேமுக்கு வந்திருந்த ஏரோதுவினிடத்திற்கு இயேசுவை அனுப்பினர்.

லூக்கா 23 : 8, 9 “ஏரோது இயேசுவைக்குறித்து அநேக காரியங்களைக் கேள்விப்பட்டிருந்ததினாலும், அவரால் செய்யப்படும் அடையாளத்தைப் பார்க்கவேண்டுமென்று விரும்பியிருந்ததினாலும், அவரைக் காணும்படி வெகுநாளாய் ஆசைகொண்டிருந்தான். அந்தப்படி அவரைக் கண்டபோது, மிகவும் சந்தோஷப்பட்டு, அநேக காரியங்களைக்குறித்து அவரிடத்தில் வினாவினான். அவர் மறுமொழியாக அவனுக்கு ஒன்றும் சொல்லவில்லை”

லூக்கா 23 : 5 ம் வசனத்தில் யூதர்கள் இயேசு கலிலேயா தேசத்தில் செய்த ஊழியத்தைக் குறித்துச் சொன்னபடியால், இயேசு கலிலேயனா என்று விசாரித்து, அவர் ஏரோதின் அதிகாரத்துக்குள்ளானவர் என்றறிந்து, அவரை ஏரோதிடம் அனுப்பினான். ஏரோது இயேசுவின் அற்புதங்களையும் அவரு டைய வல்லமைகளையும் பற்றிக் கேள்விப்பட்டிருந்ததாலும், அவர் மூலமாக அடையாளத்தைப் பார்க்க வேண்டும் என்று விரும்பி அவரைக் காணும்படி வெகுநாளாய் ஆசை பட்டிருந்ததாலும், இயேசுவைக் கண்ட போது மிகவும் சந்தோஷத்துடன், அனேக காரியங்களைக் குறித்து இயேசுவிடம் கேள்வி கேட்டான். ஆனால் இயேசுவோ அவரிடம் மறுமொழியாக எந்தப் பதிலும் கூறவில்லை. அதற்குக் காரணம் ஏரோதுராஜா யோவான்ஸ்நாகனின் மரணத் துக்குக் காரணமாயிருந்தபடியினால் (மத்தேயு 14 : 10), அவனிடம் இயேசு ஒரு வார்த்தையும் பேசவில்லை.

லூக்கா 9 : 7 – 9லும் காற்பங்கு தேசாதிபதியாகிய ஏரோது இயேசுவால் செய்யப்பட்டவைகளைக் கேள்விப் பட்டு அவரைப் பார்க்க விரும்பியதைப் பார்க்கிறோம். ஏரோது இயேசுவின் கருத்துக்களை உண்மையில் அறிய விரும்பியிருந்தால் ஏரோதிடம் இயேசு பேசியிருப்பார். இயேசு அற்புதங்கள் செய்கிறவர் என்றறிந்தும் காரணமின்றி ஏரோது அவமானப்படுத்தினான். ஆனால் கூட்டிவந்த பிரதான ஆசாரியரும், வேதபாரகரும் இயேசுவின் மேல் குற்றம் சாட்டிக் கொண்டே நின்றார்கள். எனவே ஏரோது தன் போர் சேவகரோடு கூட இயேசுவை நிந்தித்து பரியாசம் பண்ணி மினுக்கான வஸ்திரத்தை அவருக்கு உடுத்தி அவரைத் திரும்ப பிலாத்துவினிடத்திற்கு அனுப்பினான். லூக்கா 23 : 10, 11. அதற்கு முன் பகைவராயிருந்த ஏரோதும், பிலாத்துவும் இயேசுவின் பாடுகளால் சிநேகிதரானார்கள். மேலும் இயேசுவின் இரத்தத்தினால் யூதர், புறஜாதியார் என்ற பிரிவும் நீக்கப்பட்டது. மேலும் பிலாத்துவும் ஏரோதுவும் இயேசுவிடம் ஒரு குற்றமும் காணவில்லை என்று தன்னுடைய வாயினாலேயே அறிக்கையிட்டனர் (லூக்கா 14 , 15).

Related Posts