யோவான் அதிகாரம் 1 – 7 Quiz கேள்வி பதில்
- ஆதியிலே இருந்தது எது?
- ஆதியிலே இருந்தவருக்குள் இருந்தது எது?
- தேவனால் அனுப்பப்பட்ட மனுஷன் யார்?
- மாம்சம் ஆனது எது?
- மாம்சமான வார்த்தை எவைகளினால் நிறைந்தது?
- இயேசுவைக் குறித்து சாட்சி கொடுத்தவர் யார்?
- யோவான் ஞானஸ்நானம் கொடுத்த இடம் எது?
- யோனாவின் மகன் யார்?
- கேபா என்பதற்கு அர்த்தம் என்ன?
- நீ எனக்கு பின் சென்று வா இயேசு யாரை அழைத்தார்?
- பிலிப்பு எந்த பட்டணத்தை சேர்ந்தவன்?
- வந்து பார் என்று யார் யாரிடம் கூறியது?
- அத்திமரத்தின் கீழ் உட்கார்ந்திருந்தவன் யார்?
- கபடற்ற உத்தம இஸ்ரவேலன் யார்?
- பெரிதானவைகளைக் காண்பாய் யார் யாரிடம் கூறியது?
- கலியாணத்திற்கு அழைக்கப்பட்டவர்கள் யார்?
- கலியாண வீட்டில் என்ன குறைவுபட்டது?
- எத்தனை கற்சாடிகள் கலியாண வீட்டில் வைக்கப்பட்டிருந்தது?
- இயேசு தம் மகிமையை வெளிப்படுத்தின முதல் அற்புதம் எங்கே நடந்தது?
- யூதருக்குள்ளே அதிகாரியான பரிசேயன் யார்?
- நிக்கொதேமு இயேசுவிடம் எப்பொழுது வந்தான்?
- எவைகளினால் பிறவாதவன் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்க மாட்டான்?
- மோசேயினால் வனாந்தரத்தில் உயர்த்தப்பட்டது எது?
- மனுஷகுமாரனை விசுவாசிக்கிறவன் அடைவது என்ன?
- தேவன் தாம் உலகத்தை நேசித்ததை எவ்விதம் வெளிப்படுத்தினார்?
- தேவன் தம்முடைய குமாரனை உலகத்துக்கு அனுப்பினது எதற்காக?
- சாலீம் ஊருக்கு சமீபமான ஊர் எது?
- நான் சிறுக வேண்டும் என்று கூறியவன் யார்?
- இயேசு எந்த நாட்டின் வழியாக கலிலேயாவுக்கு போனார்?
- சீகார் என்பது எவ்விடத்திலுள்ள ஊர்?
- யாக்கோபு தன் குமாரனாகிய யோசேப்புக்குக் கொடுத்த நிலத்தின் அருகே இருந்த ஊர் எது?
- சீகார் ஊரிலே யாருடைய கிணறு இருந்தது?
- இயேசு யாக்கோபின் கிணற்றருகே உட்கார்ந்த நேரம் என்ன?
- தண்ணீர் மொள்ள வந்த ஸ்திரீ யார்?
- தாகத்துக்கு தா யார் யாரிடம் கேட்டது?
- யூதர்கள் யாருடனே சம்பந்தம் கலவாதவர்கள்?
- சமாரியா ஸ்திரீக்கு எத்தனை புருஷர் இருந்ததாக இயேசு கூறினார்?
- சமாரியா ஸ்திரீ இயேசுவை முதலாவது எப்படி அழைத்தாள்?
- இரண்டாவதாக சமாரியா ஸ்திரீ இயேசுவை யாராகக் கண்டு கொண்டாள்?
- இரட்சிப்பு யார் வழியாய் வருகிறது?
- சமாரியா ஸ்திரீ இயேசுவை மூன்றாவதாக யாராகக் கண்டாள்?
- யாருடைய வார்த்தையினிமித்தம் சமாரியாவில் அநேகம்பேர் இயேசுவின் மேல் விசுவாசம் வைத்தார்கள்?
- ராஜாவின் மனுஷனுடைய குமாரன் உயர் பிழைத்த நேரம் என்ன?
- இயேசு கலிலேயாவில் செய்த இரண்டாம் அற்புதம் எது?
- எருசலேமில் ஆட்டு வாசலருகே இருந்தது எது?
- சொஸ்தமாகவேண்டுமென்று விரும்புகிறாயா என்று இயேசு யாரிடம் கேட்டார்?
- மரித்தோர் யாருடைய சத்தத்தைக் கேட்குங்காலம் வரும்?
- சத்தியத்திற்குச் சாட்சி கொடுத்தவன் யார்?
- எதை ஆராய்ந்து பார்க்கும்படி இயேசு கூறினார்?
- வேதவாக்கியங்களால் நமக்கு கிடைப்பது என்ன?
- இயேசுவைக் குறித்து எழுதியிருக்கிறவர் யார்?
- கலிலேயாக் கடலின் மறுபெயர் என்ன?
- சீமோன் பேதுருவின் சகோதரன் யார்?
- இங்கே ஒரு பையன் இருக்கிறான் என்று கூறியவன் யார்?
- சீஷர்கள் எவ்வளவு தூரம் தண்டுவலித்தபோது இயேசு கடலின் மேல் நடந்து வந்தார்?
- தேவனுக்கேற்ற கிரியை எது?
- குமாரனிடத்தில் விசுவாசம் வைக்கிறவன் எதை அடைவான்?
- எதைப் புசிக்கிறவனை இயேசு கடைசி நாளில் எழுப்புவார்?
- மெய்யான போஜனம் எது?
- மெய்யான பானம் எது?
- உயிர்ப்பிக்கிறது எது?
- யூதருடைய எந்த பண்டிகை சமீபமாயிருந்தது?
- உண்மையுள்ளவனிடத்தில் எது இல்லை?
Click here to join our “தேவ வார்த்தை” Whatsapp Group for updates
தினமும் ஒரு தேவ வார்த்தையை பெற “Whatsapp Group” இல் சேரவும்
யோவான் அதிகாரம் 8 – 14 Quiz கேள்வி பதில்
- எது உங்களை விடுதலையாக்கும் என்று இயேசு கூறினார்?
- தாங்கள் யாருடைய சந்ததியாய் இருக்கிறோம் என்று யூதர்கள் கூறினார்கள்?
- யார் தங்களுக்கு பிதா என்று யூதர்கள் கூறினார்கள்?
- இயேசுவின் நாளைக் காண ஆசையாயிருந்து கண்டு களிகூர்ந்தவன் யார்?
- மனுஷ கொலைபாதகனும் பொய்யனும் பொய்க்கு பிதாவும் யார்?
- இயேசுவைக் குறித்து சாட்சி கொடுக்கிறவர் யார்?
- யார் உண்டாவதற்கு முன்னமே இயேசு இருந்தார் ?
- வேதபாரகரும் பரிசேயரும் யாரை இயேசுவிடம் கொண்டு வந்தனர்?
- ஒருவனும் கிரியை செய்யக்கூடாத காலம் எது?
- சீலோவாம் என்பதன் அர்த்தம்?
- தேவன் யாருக்கு செவிகொடுக்கிறதில்லை?
- இயேசு உலாவிக்கொண்டிருந்த மண்டபம் எது?
- யார் ஒரு அற்புதத்தையும் செய்ய வில்லை?
- இயேசு எவர்களிடத்தில் அன்பாயிருந்தார்?
- யார் நித்திரையடைந்திருக்கிறான் என்று இயேசு சொன்னார்?
- எருசலேமுக்கு சமீபமாய் ஏறக்குறைய இரண்டு மைல் தூரத்தில் உள்ள ஊர் எது?
- நீர் உலகத்தில் வருகிறவரான தேவகுமாரனாகிய கிறிஸ்து என்று விசுவாசித்தவள் யார்?
- இயேசுவைக் காண விரும்புகிறோம் என்று பிலிப்புவினிடத்தில் கேட்டவர்கள் யார்?
- யார் புறம்பாக தள்ளப்படுவான்?
- பிசாசானவன் யாருடைய இருதயத்தை தூண்டினான்?
- நான் உன்னைக் கழுவாவிட்டால் என்னிடத்தில் உனக்குப் பங்கில்லை என்று இயேசு யாரிடம் கூறினார்?
- இயேசு ஆவியிலே கலங்கி சொன்னது என்ன?
- நீ செய்கிறதைச் சீக்கிரமாய் செய் யார் யாரிடம் கூறியது?
- பிதாவின் வீட்டில் எவைகள் உள்ளன என்று இயேசு கூறினார்?
- ஆண்டவரே நீர் போகிற இடத்தை அறியோமே என்று கூறியவன் யார்?
- பிதாவை எங்களுக்குக் காண்பியும் என்று இயேசுவிடம் கேட்டவன் யார்?
- நம்முடன் இருக்கும்படிக்கு பிதா யாரைத் தந்தருளுவார்?
- இயேசு எதை வைத்துப்போகிறேன் என்று கூறினார்?
யோவான் அதிகாரம் 15 – 21 Quiz கேள்வி பதில்
- கனி கொடுக்கிற கொடியை பிதா எதற்காக சுத்தம் பண்ணுகிறார்?
- இயேசு கிறிஸ்துவின் கற்பனை எது?
- பிதாவினிடத்திலிருந்து புறப்படுகிறவர் யார்?
- தேற்றரவாளன் வரும் போது எவைகளைக் குறித்து கண்டித்து உணர்த்துவார்?
- உலகம் உண்டாகிறதற்கு முன்னே பிதாவினிடத்தில் இயேசுவுக்கு இருந்தது என்ன?
- வேதவாக்கியம் நிறைவேறத்தக்கதாக கெட்டுப் போகிறவன் யார்?
- சத்தியம் என்பது எது?
- இயேசு சீஷருடனே கூட எந்த ஆற்றுக்கு அப்புறம் போனார்?
- இயேசு போயிருந்த தோட்டத்தை அறிந்திருந்தவன் யார்?
- இயேசு எவற்றையெல்லாம் அறிந்திருந்தார்?
- தன்னிடத்திலிருந்த பட்டயத்தை உருவியவன் யார்?
- இயேசுவைப் பிடித்து முதலாவது யாரிடத்தில் கொண்டு போனார்கள்?
- காய்பாவின் மாமா யார்?
- எது நலமாயிருக்கும் என்று காய்பா யூதருக்கு ஆலோசனை கூறினான்?
- இயேசுவை பிடித்துக்கொண்டு போனது எந்த காலமாயிருந்தது?
- நீ யூதருடைய ராஜாவா இயேசுவிடம் கேட்டவன் யார்?
- போர்ச்சேவகர் இயேசுவுக்கு எதை உடுத்தினர்?
- தளவரிசைப்படுத்தின மேடையின் எபிரேயு பாஷை எது?
- நான் எழுதினது எழுதினதே கூறியவன் யார்?
- முழுவதும் நெய்யப்பட்டதாயிருந்தது எது?
- இயேசுவின் சிலுவையினருகே நின்றவர்கள் யார்?
- இயேசுவின் தாயாரின் சகோதரி பெயர் என்ன?
- வேதவாக்கியம் நிறைவேறத்தக்கதாக இயேசு கூறியது என்ன?
- இயேசு தலையை சாய்த்து எதை ஒப்புக்கொடுத்தார்?
- இயேசு ஆவியை ஒப்புக்கொடுத்த நாள் எந்த நாள்?
- வெள்ளைப் போளமும் கரியபோளமும் கொண்டு வந்தவன் யார்?
- வாரத்தின் முதல்நாள் காலையில் கல்லறையினிடத்திற்கு வந்தவள் யார்?
- துரிதமாய் ஓடி முந்தி கல்லறையினிடத்துக்குவந்தவன் யார்?
- கல்லறைக்குள் பிரவேசித்த சீஷன் யார்?
- கல்லறையினருகே நின்று அழுது கொண்டிருந்தவள் யார்?
- ரபூனி என்று அழைத்தவள் யார்?
- இயேசு சீஷர்கள் மேல் ஊதி எதைப் பெற்றுக்கொள்ளுங்கள் என்று கூறினார்?
- இயேசு வந்திருந்த போது சீஷர்களுடனே இல்லாதவன் யார்?
- எத்தனை நாளுக்குப்பின் இயேசு சீஷர்களுக்கு காட்சி தந்தார்?
- தன் மேற்சட்டையை கட்டிக்கொண்டு கடலில் குதித்தவன் யார்?
- மற்ற சீஷர்கள் கரைக்கு எத்தனை முழ தூரத்தில் இருந்தார்கள்?
- சீமோன் பேதுரு படவில் ஏறி எத்தனை மீன்களுள்ள வலையை இழுத்தான்?
- நீ என்னிடத்தில் அன்பாயிருக்கிறாயா என்று இயேசு எத்தனை தரம் பேதுருவிடம் கேட்டார்?
- யோனாவின் குமாரன் யார்?
- யார் மரிப்பதில்லை என்ற பேச்சு சகோதரருக்குள்ளே பரம்பினது?
- என் ஆடுகளை மேய்ப்பாயாக என்று இயேசு யாரிடம் கூறினார் ?
Click here to join our “தேவ வார்த்தை” Whatsapp Group for updates