மத்தேயு அதிகாரம் 1 – 10 Quiz கேள்வி பதில்
- இரட்டை குழந்தைகளை யூதாவுக்குப் பெற்றெடுத்தவள் யார்?
- ராகாப் பெற்றெடுத்த மகன் பெயர் என்ன?
- மரியாளின் புருஷனாகிய யோசேப்பின் தந்தை யார்?
- தாவீது முதல் பாபிலோன் சிறையிருப்பு வரை உள்ள தலைமுறைகள் எத்தனை?
- பெத்லகேம் எந்த நாட்டில் உள்ளது?
- ஏரோது யாரை இரகசியமாய் அழைத்து விசாரித்தான்?
- சாஸ்த்திரிகளுக்கு வழிகாட்டி சென்றது எது?
- புலம்பலும் அழுகையும் எங்கே கேட்கப்பட்டது?
- தன் தகப்பனாகிய ஏரோதின் பட்டத்திற்கு வந்தது யார்?
- வனாந்தரத்திலே கூப்பிடுகிறவனுடைய சத்தம் யாருடையது?
- எல்லா நீதியையும் நிறைவேற்றுவது நமக்கு ஏற்றதாயிருக்கிறது இயேசு யாரிடம் கூறினார்?
- இயேசுவை வனாந்திரத்திற்கு கொண்டு சென்றவர் யார்?
- பிசாசானவன் இயேசுவை விட்டு விலகியவுடன் அவருக்குப்பணிவிடை செய்தவர்கள் யார்?
- மரண இருளின் திசையிலிருக்கிறவர்களுக்கு வெளிச்சம் உதித்தது என்று கூறிய தீர்க்கதரிசி யார்?
- செபெதேயுவின் குமாரர் இருவர் பெயர் என்ன?
- எவர்களுடைய நீதியைக்காட்டிலும் நம்முடைய நீதி அதிகமாயிருக்க வேண்டும்?
- மகாராஜாவினுடைய நகரம் எது?
- தங்களை சிநேகிக்கிறவர்களை மட்டுமே சிநேகிக்கிறவர்கள் யார்?
- சரீரத்தின் விளக்காயிருப்பது எது?
- ஆகாரத்தைப் பார்க்கிலும் விசேஷித்தது எது?
- முதலாவது எதைத் தேட வேண்டும்?
- பரிசுத்தமானதை எதற்குக் கொடுக்க கூடாது?
- முத்துக்களை எதன் முன் போடக்கூடாது?
- எதற்கு போகிற வாசல் இடுக்கமும் வழி நெருக்கமுமாயிருக்கிறது?
- ஆட்டுத்தோலை போர்த்துக்கொண்டு நம்மிடம் வருபவர்கள் யார்?
- பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பவன் யார்?
- இயேசு மலையிலிருந்து இறங்கினபோது வந்து அவரைப் பணிந்து கொண்டவன் யார்?
- தன் வேலைக்காரன் குணமடைய இயேசுவை வேண்டினவன் யார்?
- புறம்பான இருளிலே தள்ளப்படுபவன் யார்?
- இயேசு தொட்டவுடன் ஜுரம் நீங்கி குணமடைந்தாள் யார்?
- அவர் தாமே நம்முடைய பெலவீனங்களை ஏற்றுக்கொண்டு நம்முடைய நோய்களை சுமந்தார் என்று கூறிய தீர்க்கதரிசி யார்?
- நீர் எங்கே போனாலும் உம்மைப் பின் பற்றி வருவேன் என்று இயேசுவிடம் கூறியவன் யார்?
- எந்த பட்டணத்தார் இயேசுவைத் தங்கள் எல்லைகளைவிட்டுப் போகும் படி வேண்டிக்கொண்டார்கள்?
- தன் படுக்கையை எடுத்துக்கொண்டு நடந்து சென்றவன் யார்?
- ஆயத்துறையில் உட்கார்ந்திருந்த எந்த மனிதனை இயேசு தம்மைப் பின்பற்றும்படி அழைத்தார்?
- யார் தன் ஆகாரத்திற்குப் பாத்திரனாயிருக்கிறான்?
- எது எண்ணப்பட்டிருக்கிறது?
Click here to join our “தேவ வார்த்தை” Whatsapp Group for updates
தினமும் ஒரு தேவ வார்த்தையை பெற “Whatsapp Group” இல் சேரவும்
மத்தேயு அதிகாரம் 11 – 20 Quiz கேள்வி பதில்
- காவலில் இருக்கும் போது கிறிஸ்துவின் கிரியைகளைக் கேட்டவன் யார்?
- தீர்க்கதரிசியைப் பார்க்கிலும் மேன்மையுள்ளவன் யார்?
- வருகிறவனாகிய எலியா இயேசு யாரை குறிப்பிட்டார்?
- தன் பிள்ளைகளால் நீதியுள்ளதென்று ஒப்புக்கொள்ளப்படுவது எது?
- வானபரியந்தம் உயர்த்தப்பட்ட நகரம் எது?
- ஓய்வு நாளில் தேவனுடைய வீட்டில் பிரவேசித்து தேவசமுகத்து அப்பங்களை புசித்தவன் யார்?
- இயேசு வாக்குவாதம் செய்யமாட்டார் என்று முன்னுரைத்த தீர்க்கதரிசி யார்?
- பிசாசுகளின் தலைவன் பெயர் என்ன?
- யாருக்கு விரோதமான தூஷணம் மன்னிக்கப்படுவதில்லை?
- இருதயத்தின் நிறைவினால் பேசுவது எது?
- வேதபாரகருக்கும் பரிசேயருக்கும் யாருடைய அடையாளம் கொடுக்கப்படும் என்று இயேசு கூறினார்?
- விதை என்பது எதைக் குறிக்கிறது?
- ஆகாயத்துப் பறவைகள் தன் கிளைகளில் வந்தடையத்தக்க பூண்டு எது?
- நிலம் எதற்கு ஒப்பிடப்பட்டுள்ளது?
- அறுப்பு என்பது எதைக் குறிக்கிறது?
- தங்களுடைய பிதாவின் ராஜ்யத்திலே சூரியனைப்போல பிரகாசிப்பவர்கள் யார்?
- இயேசுவின் கீர்த்தியை கேள்விப்பட்ட காற்பங்கு தேசாதிபதி யார்?
- ஏரோது இயேசுவை யாரென்று கூறினான்?
- காணாமற் போன ஆடுகள் என்று இயேசு யாரைக் குறிப்பிட்டார்?
- ஸ்திரீயே உன் விசுவாசம் பெரிது இயேசு யாரிடம் கூறினார்?
- இந்தக் கல்லின் மேல் என் சபையைக் கட்டுவேன் யார் யாரிடம் கூறியது?
- பரலோகத்தின் திறவுகோல் யாருக்கு கொடுக்கப்படும் என இயேசு கூறினார்?
- இயேசு தம் பாடுமரணங்களைக்குறித்து யாரிடம் கூறினார்?
- எனக்கு பின்னாகப் போ சாத்தானே என்று இயேசு யாரைப் பார்த்து கூறினார்?
- இயேசு யாருக்கு முன்பாக மறுரூபமானார்
- மறுரூபமான இயேசுவோடு பேசுகிறவர்களாகக் காணப்பட்டவர்கள் யார்?
- எந்த தரிசனத்தை ஒருவருக்கும் சொல்ல வேண்டாம் என்று இயேசு தம்முடைய சீஷர்களுக்கு கட்டளையிட்டார்?
- யாரை இயேசுவின் சீஷர்களால் குணமாக்கக் கூடாமற் போயிற்று?
- எதன் வாயிலிருந்து வரிப்பணம் எடுத்துக் கொடுக்க இயேசு பேதுருவிடம் கூறினார்?
- நியாயம் விசாரிக்க எத்தனை சாட்சிகள் வேண்டும்?
- தள்ளுதற் சீட்டை கொடுத்து தள்ளி விடலாமென்று கட்டளையிட்டவர் யார்?
- இயேசுவிடம் வந்து உம்மிடம் ஒரு விண்ணப்பம் பண்ண வேண்டும் என்றவள் யார்?
மத்தேயு அதிகாரம் 21 – 28 Quiz கேள்வி பதில்
- இயேசு எங்கே இராத்தங்கினார்?
- ஜெபத்திலே கேட்பதெல்லாம் பெறுவதற்கு அடிப்படை எது?
- போகிறேன் என்று சொல்லியும் திராட்சை தோட்டத்திற்கு போகாதவன் யார்?
- நீதிமார்க்கமாய் மக்களிடம் வந்தவன் யார்?
- ஜனங்கள் இயேசுவை யார் என்று எண்ணினார்கள்?
- நல்லவர் பொல்லாதவர்களால் நிறையப்பட்டிருந்தது எது?
- உயிர்த்தெழுதல் இல்லை என்று சாதிக்கிறவர்கள் யார்?
- இயேசுவை சோதிக்கும்படியாக வந்தவன் யார்?
- நியாயப்பிரமாணம் முழுமையும் தீர்க்கதரிசனங்களும் எத்தனை கற்ப்பனைகளில் அடங்கியிருக்கிறது?
- பரிசுத்த ஆவியினாலே இயேசுவை ஆண்டவர் என்று கூறியது யார்?
- தங்கள் கிரியைகளை மனுஷர் காணவேண்டுமென்று செய்கிறவர்கள் யார்?
- வேதபாரகரையும் பரிசேயரையும் தேவன் எப்படி அழைத்தார்?
- நீதிமான்களின் சமாதிகளை சிங்கரிக்கிறவர்கள் யார்?
- தேவாலயத்துக்கும் பலிபீடத்துக்கும் நடுவே கொலை செய்யப்பட்டவன் யார்?
- எந்த செய்திகளைக் கேள்விப்படும்போது கலங்காதபடி எச்சரிக்கையாக இருக்கவேண்டுமென்று இயேசு கூறினார்?
- அக்கிரமம் மிகுதியாவதினால் தணிந்து போவது எது?
- யார் இரட்சிக்கப்படுவான்?
- பாழாக்குகிற அருவருப்பைக் குறித்து கூறிய தீர்க்கதரிசி யார்?
- வாசிக்கிறவன் என்ன செய்யக்கடவன் என்று இயேசு கூறினார்?
- யார் நிமித்தம் முடிவு நாட்கள் குறைக்கப்படுகிறது?
- பிணம் எங்கேயோ அங்கே வந்து கூடுவது எது?
- வானமும் பூமியும் ஒழிந்து போகும் ஆனால் ஒழிந்து போகாதது எது?
- மணவாளன் வருகிறார் அவருக்கு எதிர் கொண்டு போகப் புறப்படுங்கள் என்கிற சத்தம் எப்பொழுது உண்டாயிற்று?
- மணவாளனோடு கலியாண வீட்டில் பிரவேசித்தவர்கள் யார்?
- உண்மையும் உத்தமும்மான ஊழியக்காரர்கள் என்று பாராட்டப்பட்டவர்கள் யார்?
- பரிமள தைலம் தன் மேல் ஊற்றப்பட்டது எதற்கு அடையாளமானது என்று இயேசு கூறினார்?
- பாவமன்னிப்பு உண்டாகும் படி அநேகருக்காக சிந்தப்படுவது எது?
- உயிர்த்தெழுந்தபின் இயேசு எங்கே போவதாகக் கூறினார்?
- எது உற்சாகமுள்ளது என்று இயேசு கூறினார்?
- எத்தனை முறை இயேசு உம்சித்தம் ஆகக்கடவது என்று கெத்சமனேயில் ஜெபம்பண்ணினார்?
- இயேசு எதைச் சொன்னதாகப் பிரதான ஆசாரியன் கூறினான்?
- இயேசுவின் வார்த்தைகளை நினைத்து மனங்கசந்து அழுதவன் யார்?
- யூதாசின் காசினால் யாருடைய நிலம் வாங்கப்பட்டது?
- குயவனுடைய நிலத்தை வாங்குவார்கள் என்று தீர்க்கதரிசனம் உரைத்த தீர்க்கதரிசி யார்?
- காவல்பண்ணப்பட்டவர்களில் பேர் போனவனாயிருந்தவன் யார்?
- பிராதான ஆசாரியர் இயேசுவை எதினாலே ஒப்புக்கொடுத்தார்கள் என்று பிலாத்து அறிந்து கொண்டான்?
- இயேசுவினிமித்தம் சொப்பனத்தில் வெகுபாடுபட்டவள் யார்?
- பிலாத்து இயேசுவை யாரென்று ஜனங்களுக்கு முன்பாக கூறினான்?
- இயேசுவின் வலது கையில் கொடுக்கப்பட்டது என்ன?
- கொல்கொதா என்பதன் இன்னொரு பெயர் என்ன?
- ஆறாம் மணிமுதல் ஒன்பதாம் மணிவரை பூமியெங்கும் உண்டானது எது?
- ஒன்பதாம் மணி நேரத்தில் இயேசு எப்படி சத்தமிட்டுக் கூப்பிட்டார்?
- இயேசு தம்முடைய ஆவியை விட்டபோது கல்லறைத் திறந்து யாருடைய சரீரங்கள் எழுந்திருந்தன?
- சம்பவித்த காரியங்களை கண்டு மெய்யாகவே இவர் தேவனுடைய குமாரன் என்று கூறியவன் யார்?
- வாரத்தின் முதல் நாள் கல்லறையைப் பார்க்க வந்தவர்கள் யார்?
- கர்த்தருடைய தூதனின் ரூபம் எதைப் போல இருந்தது?
- உயிர்த்தெழுந்த இயேசு எங்கே போவதாக தூதன் கூறினான்?
- இயேசுவை களவாய்க் கொண்டு போய்விட்டார்கள் என்று சொல்லும்படி காவல்சேவகருக்கு பணம் கொடுத்தவர்கள் யார்?
- ஸ்திரீகளுக்கு எதிர்ப்பட்டு இயேசு அவர்களிடம் முதலில் என்னக் கூறினார்?
- ஸ்திரீகளை நோக்கி பயப்படாதிருங்கள் என்று கூறியவர் யார்?
Click here to join our “தேவ வார்த்தை” Whatsapp Group for updates