”எப்பொழுதும் தேவனை நோக்கி ஜெபம் பண்ணிக்கொண்டிருந்தான்” (அப்.10:2).
கொர்நேலியு புறஜாதி மார்க்கத்தைச் சேர்ந்த நூற்றுக்கதிபதியாய் இருந்த போதிலும் அவருடைய விசேஷ தன்மைகளை வேதம் சுட்டிக் காண்பிக்கிறது. அவர் தேவ பக்தியுள்ளவர். தன் வீட்டாரோடுகூட தேகனுக்குப் பயந்தவர். ஜனங்களுக்கு மிகுதியான தர்மங்களைச் செய்தவர். எப்பொழுதும் ஜெபம் பண்ணிக்கொண்டிருக்கிறவர்.
அவருடைய ஜெப நேரத்திலே தேவ தூதன் இறங்கி வந்தான். ”கொர்நேலியுவே” என்று அன்போடு பெயர் சொல்லி அழைத்தான். நீ யோப்பா பட்டணத்துக்கு மனுஷரை அனுப்பி பேதுரு என்ற மறு பெயர் கொண்ட சீமோனை அழைப்பி. நீ செய்ய வேண்டியதை அவன் உனக்குச் சொல்லுவ என்றார். தேவனுடைய பிள்ளைகளே, நீங்கள் ஜெபிக்கும்போது தேவ தூதர்கள் இறங்கி வருவார்கள். பரிசுத்தவான்கள் உங்களைச் சந்திப்பார்கள். நீங்கள் நடக்க வேண்டிய வழிகளையும், ஆலோசனைகளையும் சொல்லுவார்கள். ஆகவே தனிப்பட்டமுறையிலே தனி ஜெபம் செய்யுங்கள். குடும்ப ஜெபத்தை பழக்கு வியுங்கள். உங்களுடைய பிள்ளைகளையும் ஆழமான ஜெப ஜீவியத்திற்குள் வழி நடத்துங்கள்.
இன்று அநேகம்பேருடைய குறைபாடுகள் என்ன? எங்களால் ஊக்கமாய் ஜெபிக்க முடியவில்லையே. ஜெப நேரத்தில் கொட்டாவி வருகிறது. மந்தமாய் இருக்கிறது. சிந்தனை சிதறுகிறது. என் ஜெபம் கூரையைத் தாண்டிப் போகிறதா என்று சந்தேகமாய் இருக்கிறது என்று சொல்லுகிறார்கள். ஊக்கமான ஜெப ஜீவியத்திற்கு வழிமுறை என்ன? சிந்தனைகள் சிதறும்போது சத்தமாய் ஜெபிக் கும் பழக்கத்தை மேற்கொள்ளுங்கள். என்னவானாலும் ஒருமணி நேரமாவது ஜெபிக்கப்போகிறேன் என்று உங்கள் உள் உணர்வுகளைத் தட்டி எழுப்பி விடுங்கள். தூக்க மயக்கத்திலிருந்து முகத்தைக் கழுவி ஒருசில சாதாரண உடற் பயிற்சிகளை மேற்கொண்டு சீக்கிரமாய் கர்த்தருடைய பாதத்திற்கு ஓடி வந்து விடுங்கள். உங்களுடைய உள்ளம் தேவ அன்பினால் நிரப்பப்பட்டு இருக்கும் போது உங்களால் எளிதாய் ஜெபிக்க முடியும்.
ஜெபம் என்பது ஒரு விசுவாசியின் சுவாசத்தைப் போன்றது. இருதயத் துடிப்பைப் போன்றது. ஊக்கமான ஜெப ஜீவியத்தில்தான் உங்களுக்கு ஆரோக்கியமான ஆத்தும வாழ்வு கிடைக்கமுடியும். கர்த்தரைக் கண்டடை யத்தக்க அதிகாலை நேரத்தை ஜெபத்திலே செலவழியுங்கள். ஜெபக்குறிப்பு களை ஆயத்தப்படுத்திக்கொள்ளுங்கள். இரவிலே படுக்கைக்குப் போவதற்கு முன்பாகவே நான் காலையிலிருந்து ஜெபிக்கப்போகிறேன். கர்த்தருடைய பொன்முகத்தைத் தேடப் போகிறேன். என்னுடைய பிரச்சனைக்கு தீர்மானத்தைக் காணப்போகிறேன் என்ற தீர்மானத்தோடு செல்லுங்கள். அப்பொழுது காலையிலே உற்சாகத்தோடு எழும்பி ஜெபிக்க முடியும்.
அநேக வாலிபர்கள் ஐயா, ஜெபிக்க முடியவில்லை . இச்சைகள், அசுத்த எண்ணங்கள், ஜெப நேரத்திலும் என் சிந்தனையில் வந்து தொல்லைப் படுத்து கிறது என்று சொல்லுகிறார்கள். உங்களுடைய ஜெப ஆவியை, ஜெப அக்கினியை, ஜெப தீயை அணைக்க சாத்தான் கொண்டுவரும் சதித் திட்டத்தை இயேசுவின் இரத்தம் ஜெயம் என்று சொல்லி முறியடியுங்கள்.