- யாத்திராகமம் 15 : 26 “ நானே உன் பரிகாரியாகிய கர்த்தர்.”
- யாத்திராகமம் 23 : 25 “ கர்த்தர் உன் அப்பத்தையும் தண்ணீரையும் ஆசீர்வதிப்பார். வியாதியை உன்னிலிருந்து விலக்குவார்.”
- உபாகமம் 7 : 15 “கர்த்தர் சகல நோய்களையும் உன்னைவிட்டு விலக்குவார்;”
- 2 இராஜாக்கள் 20 : 5 “உன் விண்ணப்பத்தைக் கேட்டேன், உன் கண்ணீரைக் கண்டேன்; இதோ, நான் உன்னை குணமாக்குவேன்;”
- சங்கீதம் 34 : 20 “கர்த்தர் அவனுடைய எலும்புகளையெல்லாம் காப்பாற்றுகிறார்; அவைகளில் ஒன்றும் முறிக்கப்படுவதில்லை.”
- சங்கீதம் 41 : 3 “ படுக்கையின்மேல் வியாதியாய்க் கிடக்கிற அவனைக் கர்த்தர் தாங்குவார்; அவனுடைய வியாதியிலே அவன் படுக்கை முழுவதையும் மாற்றிப்போடுவீர்”
- சங்கீதம் 91 : 3 “ கர்த்தர் உன்னை வேடனுடைய கண்ணிக்கும், பாழாக்கும் கொள்ளைநோய்க்கும் தப்புவிப்பார்.”
- சங்கீதம் 91 : 10 “வாதை உன் கூடாரத்தை அணுகாது.”
Click here to join our “தேவ வார்த்தை” Whatsapp Group for updatesதினமும் ஒரு தேவ வார்த்தையை பெற “Whatsapp Group” இல் சேரவும் - சங்கீதம் 103 : 3 – 5 “ கர்த்தர் உன் அக்கிரமங்களையெல்லாம் மன்னித்து, உன் நோய்களையெல்லாம் குணமாக்குவார்,”
“உன் பிராணனை அழிவுக்கு விலக்கி மீட்டு, உன்னைக் கிருபையினாலும் இரக்கங்களினாலும் முடிசூட்டுவார்,”
“நன்மையினால் உன் வாயைத் திருப்தியாக்குகிறார்; கழுகுக்குச் சமானமாய் உன் வயது திரும்ப வால வயதுபோலாகிறது.” - சங்கீதம் 107 : 20 “கர்த்தர் தமது வசனத்தை அனுப்பி அவர்களை குணமாக்கி, அவர்களை அழிவுக்குத் தப்புவிக்கிறார்.”
- சங்கீத 147 : 3 “இருதயம் நொறுங்குண்டவர்களைக் கர்த்தர் குணமாக்குகிறார், அவர்களுடைய காயங்களைக் கட்டுகிறார்.”
- ஏசாயா 53 : 5 “ இயேசுவினுடைய தழும்புகளால் குணமாகிறோம்.”
- எரேமியா 17 : 14 “கர்த்தாவே, என்னைக் குணமாக்கும், அப்பொழுது குணமாவேன்;”
- எரேமியா 30 : 17 “கர்த்தர் உனக்கு ஆரோக்கியம் வரப்பண்ணி, உன் காயங்களை ஆற்றுவார்.”
- எரேமியா 33 : 6 “இதோ, நான் அவர்களுக்குச் சவுக்கியமும் ஆரோக்கியமும் வரப்பண்ணி, அவர்களைக் குணமாக்கி அவர்களுக்குப் பரிபூரண சமாதானத்தையும் சத்தியத்தையும் வெளிப்படுத்துவேன்.”
- மல்கியா 4 : 2 “என் நாமத்துக்குப் பயந்திருக்கிற உங்கள் மேல் நீதியின் சூரியன் உதிக்கும்; அதின் செட்டைகளின்கீழ் ஆரோக்கியம் இருக்கும்; “
- மத்தேயு 8 : 17 “கர்த்தர் தாமே நம்முடைய பெலவீனங்களை ஏற்றுக்கொண்டு, நம்முடைய நோய்களைச் சுமந்தார்.”
- மாற்கு 1 : 34 “பலவிதமான வியாதிகளினால் உபத்திரவப்பட்டிருந்த அநேகரை இயேசு சொஸ்தமாக்கி, அநேகம் பிசாசுகளைத் துரத்தி விட்டார்.”
- லூக்கா 10 : 19 “இதோ, சர்ப்பங்களையும் தேள்களையும் மிதிக்கவும், சத்துருவினுடைய சகல வல்லமையையும் மேற்கொள்ளவும் உங்களுக்கு அதிகாரங்கொடுக்கிறேன்; ஒன்றும் உங்களைச் சேதப்படுத்தமாட்டாது.”
- ரோமர் 8 : 11 “அன்றியும் இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பினவரு டைய ஆவி உங்களில் வாசமாயிருந்தால், கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து எழுப்பினவர் உங்களில் வாசமாயிருக்கிற தம்முடைய ஆவியினாலே சாவுக்கேதுவான உங்கள் சரீரங்களையும் உயிர்ப்பிப்பார்.”
- யாக்கோபு 5 : 15 “விசுவாசமுள்ள ஜெபம் பிணியாளியை இரட்சிக்கும்; கர்த்தர் அவனை எழுப்புவார்;”
- 1 பேதுரு 2 : 24 “நாம் பாவங்களுக்குச் செத்து, நீதிக்குப் பிழைத்திருக்கு ம்படிக்கு, அவர் தாமே தமது சரீரத்திலே நம்முடைய பாவங்களை சிலுவையின்மேல் சுமந்தார்; அவருடைய தழும்புகளால் குணமானீர்கள்.”
- 3 யோவான் 2 “உன் ஆத்துமா வாழ்கிறதுபோல நீ எல்லாவற்றிலும் வாழ்ந்து சுகமாயிருக்கும்படி வேண்டுகிறேன்.”
Click here to join our “தேவ வார்த்தை” Whatsapp Group for updates