Menu Close

ஊழியக்காரர் இருக்க வேண்டிய விதம்

1. விசுவாசமும், நல்மனசாட்சியும் உடையவனாயிருக்க வேண்டும் – 1தீமோ 1:18
2. உண்மையுள்ளவர்களாக இருக்க வேண்டும் – 1தீமோ 1:12
3. எல்லா மனுஷருக்காகவும் விண்ணப்பங்களையும், ஜெபங்களையும், வேண்டுதல்களையும், ஸ்தோத்திரங்களையும் செய்கிறவர்களாக இருக்க வேண்டும் – 1தீமோ 2:1
4. பக்தியுள்ளவர்களாகவும், நல்லொழுக்கமுள்ளவர்களாகவும் இருக்க வேண்டும் – 1தீமோ 2:2
5. தேவபக்தியுடன் கட்டுக்கதைகளுக்கு விலகினவர்களாக இருக்க வேண்டும் – 1தீமோ 4:7
6. வார்த்தையிலும், நடக்கையிலும், அன்பிலும், ஆவியிலும், விசுவாசத்திலும், கற்பிலும் விசுவாசிகளுக்கு மாதிரியாக இருக்க வேண்டும் – 1தீமோ 4:12
7. சுத்தவானாக இருக்க வேண்டும் – 1தீமோ 5:22
8. போதுமென்கிற மனதுடையவர்களாய் இருக்க வேண்டும் – 1தீமோ 6:6
9. உண்ணவும், உடுக்கவும் நமக்கிருந்தால் போதுமென்கிறவர்களாக இருக்க வேண்டும் – 1 தீமோ 6:8
10. பணஆசை இல்லாதவனாக இருக்க வேண்டும் – 1தீமோ 6:11
11. நீதியையும், தேவபக்தியையும், விசுவாசத்தையும், அன்பையும், பொறுமையையும், சாந்தகுணத்தையும் அடையும்படி நாட வேண்டும் – 1தீமோ 6:11
12. விசுவாசத்தில் போராடுகிறவனாக இருக்க வேண்டும் – 1தீமோ 6:12
13. நித்தியஜீவனைப் பற்றிக்கொண்டிருக்கிறவனாக இருக்க வேண்டும் – 1தீமோ 6:12
14. சீர்கேடான வீண்பேச்சுகளுக்கும், கொள்கையின் விபரீதங்களுக்கும் விலகுகிறவனாக இருக்க வேண்டும் – 1தீமோ 6:20, 2தீமோ 2:16
15. சத்திய வசனத்தை நிதானமாய்ப் போதிக்கிறவனாகவும், உத்தமனாகவும் இருக்க வேண்டும் – 2தீமோ 2:15
16. சண்டை பண்ணுகிறவனாயிராமல், சாந்தமுள்ளவனாக, போதக சமர்த்தனாக தீமையை சகிக்கிறவனாக இருக்க வேண்டும் – 2தீமோ 2:24
17. தேவனை அறிகிற அறிவுடையவர்களாக, விசுவாசமுள்ளவர்களாக இருக்க வேண்டும் – தீத் 1:3

Related Posts