Menu Close

வேதத்தில் தனித்திருந்தவர்கள்

1. தாவீது: தாவீது தனித்து குருவியைப்போல் இருக்கிறேன் என அங்கலாய்க்கிறார்.
2. யாக்கோபு: ஏசாவின் மேலுள்ள பயத்தினால் யாக்கோபு தன் பெற்றோரை விட்டுப் புறப்பட்டு லூஸ் என்னுமிடத்தில் தனிமையாக படுத்திருந்தான். அப்பொழுது தேவதரிசனத்தைப் பெற்றான்.
3. மோசே: பார்வோன் அரண்மனையிலிருந்த மோசே பயந்து ஓடிப்போகவேண்டிய சூழ்நிலை வந்து ஓடினான். ஒருநாள் ஆடுகளை மேய்த்துக் கொண்டு ஒரேப் பர்வதம் வந்த போது முட்செடியின் நடுவே தேவன் காட்சியளித்தார்.
4. யோசுவா: இரவில் தனியாக மூடப்பட்டிருந்த எரிகோமதிலின் நடுவே யோசுவா நடந்து சென்றபோது கர்த்தர் சேனையின் அதிபதியாக தரிசனமாகி எரிகோவின் மதில்களை விழச்செய்யும் வழிகளை கர்த்தரிடம் பெற்றார்.
5. ஏசாயா: தனியாக தேவனுடைய ஆலயத்துக்கு ஏசாயா வந்தபோது கர்த்தரைக் கண்டு, சோராபீன்களெல்லாம் கர்த்தரைத் துதிக்கிறதை அவர் தரிசித்தார். அந்த தரிசனத்திற்குப் பின் பெரிய தீர்க்கதரிசியானார்.
6. எலியா: கர்மேல் பர்வதத்தில் எலியா தனிமையாக ஏறினார். 450 பாகால் தீர்க்கதரிசிகளுடன் சவால் விட்டார். அவர் தனியாய் நின்று அக்கினியில் உத்தரவு அருளுகிற தெய்வமே உண்மையான தெய்வம் என்று கூறி கர்த்தரே தெய்வம் என நிரூபித்தார்.
7. எலிசா: எலியா பரலோகத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும்போது எலிசா அவரைப் பார்த்துக் கொண்டிருந்தார். அப்பொழுது எலியாவின் சால்வை எலிசாவின் மேல் விழுந்தது. அப்பொழுது எலிசா தனிமையில் நின்றார். எலிசா எலியாவிடமிருந்து இரட்டிப்பான வரங்களைப் பெற்றார்.

Related Posts