யூதாவிலிருந்து வந்த தேவமனிதன் யெரொபெயாம் தூபங்காட்ட பலிபீடத்தண்டையில் நிற்கும் பொழுது “தாவீதின் வம்சத்திலே யோசியா என்னும் பேருள்ள ஒரு குமாரன் பிறப்பான்; அவன் உன்மேல் தூபங்காட்டுகிற மேடைகளின் ஆசாரியர்களை உன்மேல் பலியிடுவான்” என்று கர்த்தர் உரைக்கிறார் என்றான். அதற்கு அடையாளமாக பலிபீடம் வெடிக்கும் என்றார். இதை ராஜா கேட்டு “அவனைப் பிடியுங்கள் என்று தன் கையை பலிபீடத்திலிருந்து நீட்டினான். நீட்டின கை மடக்கக் கூடாதபடி மரத்துப் போயிற்று. தேவமனிதன் கூறியபடி பலிபீடம் வெடித்து சிதறியது. ராஜா தேவமனிதனிடம் அவனுடைய கைக்காக கர்த்தரிடம் வேண்டச்சொல்லிக் கூறினான். அவர் வேண்டினபோது கை முன் போலாயிற்று. தேவமனிதர்கள் மேல் நாம் துணிகரமாகப் பேசும்போது அதிக ஆக்கினை அடைவோம் – 1இரா 13:1 – 6