சேபாராஜஸ்திரீ சாலமோனின் கீர்த்தியைக் கேள்விப்பட்டு விடுகதையினால் அவனை சோதிக்கிறதற்காக தன் பரிவாரங்களுடன் வந்தாள். அவளுடைய விடுகதையை சாலமோன் விடுவித்தான். அவள் சாலமோனுடைய ஞானத்தையும், அவருடைய அரண்மனையையும், உத்தியோகஸ்தர்களையும் கண்டு பிரமித்து அவள் கேள்விப்பட்டதைவிட சாலமோனின் ஞானமும், செல்வமும் அதிகமாயிருப்பதைக் கண்டு சாலமோனைப் புகழ்ந்து தேவனைத் துதித்து பொன்னையும் சுகந்தவர்க்கங்களையும், இரத்தனங்களையும் கொடுத்து திரும்பிச் சென்றாள் – 1இரா 10:1 – 10