இயேசுகிறிஸ்து மணவாளன் என்று அழைக்கப்பட்டார் (மத்தேயு 9: 15). இந்த மணவாளன் சீடர்களோடு தங்கி வாழ்ந்து பரத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டார். ஆனால் அங்கே தங்கி விடாமல் திரும்ப வந்து, தமது மக்களனைவரையும் தம்மோடு மணவாட்டியாக இணைத்துக் கொள்ளக் காத்திருக்கிறார். கிறிஸ்துவின் சபைகளனைத்தும் கிறிஸ்து என்னும் மணவாளனுக்காகத் தங்களைப் பரிசுத்தத்தில் அலங்கரித்துக் காத்துக் கொண்டிருந்தால், அவர் வரும்போது எடுத்துக்கொள்ளப்பட்டு, அவரோடு இணைத்துக் கொள்ளப்படுவார்கள். ஆட்டுக்குட்டியானவரின் கலியாண விருந்து என்றழைக்கப்படும் அந்த நாளில் சபையாகிய மணவாட்டியை, சபைக்குத் தலைவரான மணவாளனாகிய இயேசு மணமுடிப்பார். இந்த ஆவிக்குரிய சத்தியத்தை, ஆவிக்குரியவர்கள் புரிந்து கொள்வார்கள்.