ஆகாப் எலியாவைக் கண்ட போது “இஸ்ரவேலைக் கலங்கப் பண்ணுகிறவன் நீயல்லவா” என்றான். எலியா பாகால் தொழுகைக்கு சவால் விட்டான். உண்மை தேவனை நிரூபிக்க கர்மேல் மலையில் போட்டி ஆயத்தமாக்கப் பட்டது. பாகால் தீர்க்கதரிசிகள் 400 பேர் காளைகளை வெட்டி பலிபீடத்தில் வைத்து பாகாலை அழைத்தார்கள். பயன் இல்லை எலியா காளைகளை வெட்டி பலிபீடத்தில் வைத்து கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டான். அக்கினி வானத்திலிருந்து இறங்கி பலியைப் பட்சித்தது. அக்கினியால் பதிலளிக்கிற கர்த்தரே மேய்யான தேவன் என்று ஜனங்கள் கூறினார் – 1 இரா 18:17 – 39