Menu Close

மோசேயும் பவுலும்

1. மோசேக்கு பகலில் எரிகிற முட்செடியின் நடுவில் அக்கினிஜீவாலையில் கர்த்தர் தரிசனமானார் –- அப் 7:30, யாத் 3:2. பவுலுக்கு மத்தியான வேளையில் தமஸ்குவுக்குப் போகும் வழியில் பேரொளியில் கர்த்தர் தரிசனமானார் – அப் 9:1-11, 22:6-16
2. மோசேயைக் கர்த்தர் இருமுறை பெயர் சொல்லிக் கூப்பிட்டார் – யாத் 3:4 பவுலையும் இருமுறை கர்த்தர் பெயர் சொல்லிக் கூப்பிட்டார் – அப் 9:4
3. மோசே கர்த்தரின் சத்தத்தைக் கேட்டு நடுங்கினான் – அப் 7:32
பவுலும் கர்த்தரின் சத்தத்தைக் கேட்டு நடுங்கினான் – அப் 9:6
4. மோசே எகிப்தியருடைய சகல சாஸ்திரங்களையும் கற்றவன் – அப் 7:22
பவுல் நியாயசாஸ்திரியாகிய கமாலியேலின் பாதத்தருகே வேதசாஸ்திரம் கற்றவன் – அப் 5:34, 22:3
5. மோசேயை இஸ்ரவேலருக்கு முதலாம்சபைத் தலைவனாக நியமித்தார் – அப் 7:35 பவுலை கிறிஸ்து பலத்த அஸ்திபாரம் போடுகிற தலைவனாக நியமித்தார் – 1கொரி 3:10, கலா 1:1
6. மோசே ராஜகுமாரத்தியின் மகன் என்ற மேன்மையான பதவியை வெறுத்தான். பாவ சந்தோஷங்களை வெறுத்தான் – எபி 11:24-27. பவுல் உலக சந்தோஷங்களை வெறுத்தான். தனக்கு லாபமானவைகளை நஷ்டமென்றெண்னினான். துன்பம் அனுபவிப்பதையே தெரிந்து கொண்டான் – பிலி 3:7-11, 2கொரி 11:23-27, அப் 20:19,22-24, 21:13
7. தேவசமூகத்தில் தரித்திருந்த மோசேயின் முகம் பிரகாசித்தது – யாத் 34:29,30, 35 பவுல் கிறிஸ்துவின் அச்சடையாளங்களை தரித்துக் கொண்டிருந்ததால் அவனுடைய இருதயத்தில் சுவிசேஷத்தின் ஒளி பிரகாசித்தது – 2கொரி 4:6, கலா 6 :17
8. மோசே இனி வரும் பலன் மேல் நோக்கமாயிருந்தான் – எபி 11:26
பவுல் இனி வரும் பலன் மேல் நோக்கமாயிருந்து கிறிஸ்து இயேசுவுக்குள் தேவன் அழைத்த பந்தயப் பொருளுக்காக இலக்கை நோக்கித் தொடர்ந்தான் – பிலி 3:13,14,20, 2தீமோ 4:7,8
9. மோசே தேவசமூகத்தில் மூன்று தடவை நாற்பது நாட்கள் வரை உபவாசமிருந்தான் – யாத் 34:28, உபா 9:9, 10, 18, 25, 10:10. பவுல் அநேகநாள் உபவாசத்திலும், கண் விழிப்புகளிலுமிருந்தான் – 2கொ 11:27
10. மோசே இஸ்ரவேல் சபைக்காக கர்த்தரிடம் வேண்டினான் – யாத் 32:13,32. பவுல் சபைக்காக அடிக்கடி கர்த்தரிடம் வேண்டினான் – எபே 1:13-19, 1தெச 1 :4
11. மோசே கர்த்தரின் வார்த்தையின்படி கானானை நோக்கி வெகுதூரம் சஞ்சரித்தான் – உபா 31:1-13. பவுல் சுவிசேஷத்தினிமித்தம் பல தேசங்களிலும், பட்டணங்களிலும், கிராமங்களிலும் சஞ்சரித்தான் – அப் 27, 28அதி ரோ 1:15, 15:19, 1கொரி 9:16-23
12. மோசே தேவசத்தத்தையும், தேவதரிசனத்தையும் அடிக்கடி பெற்றான் – யாத் 4:5, லேவி 7:38. பவுல் தேவ தரிசனத்தையும், தேவ சத்தத்தையும், தேவ மகிமையையும் அடிக்கடி பெற்றான் – அப் 23:11,16:9, 27:23,24 2கொரி 12:1
13. மோசே கர்த்தரின் வார்த்தைகளை கர்த்தரிடம் நேரடியாகப் பெற்று ஜனங்களுக்கு அறிவித்தான் – அப் 7:38, உபா 12:7,8. பவுல் தேவஆலோசனையின் ரகசியங்களை கர்த்தரிடம் நேரடியாகப் பெற்று ஜனங்களுக்கு அறிவித்தான் – கலா 1:12
14. மோசே நியாயப்பிரமாணகால கர்த்தருடைய ஊழியக்காரன் – யோ 1:17. பவுல் கிருபையின்கால கர்த்தருடைய ஊழியக்காரன் – எபே 3:7
15. மோசே சீனாய் மலையில் வைத்து தேவமகிமையைக் கண்டான் – யாத் 34:28-35. பவுல் பரதீசுக்குள் எடுக்கப்பட்டு தேவமகிமையைத் தரிசித்தான் – 2கொ 12:1-5
16. மோசே தேவனுடைய வீட்டில் எங்கும் உண்மையுள்ளவன் – எபி 3:2. பவுல் உண்மையுள்ள ஊழியக்காரனும், ஸ்தானாதிபதியுமாயிருந்தான் – அப் 23:1, 24:16
17. மோசேயின் மூலம் கர்த்தர் அநேக அற்புதங்களைச் செய்தார் – யாத் 14: 16, 21. பவுலின் மூலம் கர்த்தர் அநேக அற்புதங்கள் நடக்கும்படி செய்தார் – அப் 19 :11,12
18. மோசே ஐந்து ஆகமங்களை நமக்கு எழுதிக் கொடுத்தான் – ஆதியாகமம் முதல் உபாகாமம் வரை பவுல் பதினான்கு நிருபங்களை நமக்கு எழுதிக் கொடுத்தான் – ரோமர் முதல் எபிரெயர் வரை
19. மோசேக்கு யோசுவா உடன் ஊழியக்காரனாயிருந்தான் – யோசு 1 :1 யாத் 33:11 பவுலுக்கு தீமோத்தேயு உத்தம உடன் ஊழியக்காரனாயிருந்தான் – ரோ 16 :21, மோசேயின் மேலிருந்த தேவ ஆவியை கர்த்தர் 70 மூப்பர் மேல் வரப் பண்ணினார். அவர்கள் தீர்க்கதரிசனம் உரைத்தனர் – எண் 11:24-29. பவுல் தன் கைகளை வைத்தபோது பன்னிரண்டு சீஷர்கள் பரிசுத்தாவியைப் பெற்று அந்நிய பாஷைகளைப் பேசி தீர்க்கதரிசனம் சொன்னார்கள் – அப் 19:1-7, 2தீமோ 1:6

Related Posts