Menu Close

எசேக்கியேல் ஆவியில் நிறைந்த அனுபவங்கள்

1. கர்த்தர் எசேக்கியேலிடம் “மனுபுத்திரனே காலூன்றி நில்.” என்று கூறி பேசும்போது எசேக்கியேல் ஆவியில் நிரப்பப்பட்டார் – எசே 2:1, 2
2. கர்த்தர் திரும்பவும் எசேக்கியேலிடம் பேசும்பொழுது ஆவி உயர எடுத்துச் சென்று செட்டைகளின் இரைச்சலையும், மகா சத்தத்தின் இரைச்சலையும் கேட்கச் செய்தார். கேபார் நதியண்டையில் கர்த்தருடைய கரம் எசேக்கியேல் மேல் பலமாக இருந்தது – எசே 3:12 – 14
3. கர்த்தர் எசேக்கியேலைப் பள்ளத்தாக்குக் போகச்சொன்னார். அங்கே எசேக்கியேலுடன் பேசினார். அப்பொழுது ஆவி எசேக்கியேலுக்குள் புகுந்து காலூன்றி நிற்கும்படி செய்தது. கர்த்தர் எசேக்கியேலை வீட்டிற்குள்ளே அடைத்துக் கொண்டிருக்கச் சொன்னார் – எசே 3:22 – 24
4. எசேக்கியேல் வீட்டில் உட்கார்ந்திருந்தபோது அவருடைய தலைமயிரைப் பிடித்து ஆவியானவர் தூக்கி பூமிக்கும் வானத்துக்கும் நடுவே கொண்டுபோய் எருசலேமின் உள்வாசலில் விட்டார் – எசே 8:1 – 3
5. ஆவியானவர் எசேக்கியேலை ஆலயத்தின் கிழக்கு வாசலுக்கு எடுத்துக் கொண்டு போய் அங்கிருந்த ஜனத்தின் பிரபுக்களுக்கு விரோதமாகத் தீர்க்கதரிசனம் சொல்லச் சொன்னார் – எசே 11:1 – 4
6. கர்த்தருடைய ஆவி எசேக்கியேலை எடுத்து கல்தேயாவுக்குச் சிறைபட்டுப் போனவர்கள் இடத்திலே கொண்டுபோய் விட்டது. கர்த்தர் காண்பித்த யாவையும் அவர்களுக்கு எசேக்கியேல் கூறினார் – எசே 11:24, 25
7. கர்த்தர் எசேக்கியேலை ஆவிக்குள்ளாக்கி எலும்புகள் நிறைந்த பள்ளத்தாக்கின் நடுவே நிறுத்தி எலும்புகளைக் குறித்துத் தீர்க்கதரிசனம் உரைக்கச் சொன்னார் – எசே 37:1 – 4

Related Posts