Menu Close

இரகசியங்களை வெளிப்படுத்துகிறவர் இயேசு

மத் 10 : 26 “வெளியாக்கப்படாத மறைபொருளுமில்லை; அறியப்படாத இரகசியமுமில்லை.”

மாற் 4 : 22 “வெளியரங்கமாகாத அந்தரங்கமுமில்லை, வெளிக்கு வராத மறைபொருளுமில்லை.”

அப் 15 : 8 “இருதயங்களை அறித்திருக்கிற தேவன்…”

லூக் 16 : 15 “… தேவனோ உங்கள் இருதயங்களை அறிந்திருக்கிறார்;”

யோ 2 : 25 “மனுஷருள்ளத்திலிருப்பதை அவர் அறிந்திருக்கிறபடியால், மனுஷரைக் குறித்து ஒருவரும் அவருக்குச் சாட்சி கொடுக்க வேண்டியதாயிருக்கவில்லை.”

லூக் 11 : 17 “அவர்களுடைய சிந்தனைகளை அவர் அறிந்து, அவர்களை நோக்கி: தனக்குத்தானே விரோதமாய்ப் பிரிந்திருக்கிற எந்த ராஜ்யமும் பாழாய்ப்போம்; தனக்குத்தானே விரோதமாய்ப் பிரிந்திருக்கிற எந்த வீடும் விழுந்துபோம்.”

லூக் 6 : 8 “அவர்களுடைய சித்தனைகளை இயேசு அறிந்து, சூம்பின கையையுடைய மனுஷனை நோக்கி; நீ எழுந்து, நடுவே நில் என்றார். அவன் எழுந்து நின்றான்.”

மாற் 2 : 8 “அவர்கள் தங்களுக்குள்ளே இப்படிச் சிந்திக்கிறார்களென்று இயேசு உடனே தம்முடைய ஆவியில் அறிந்து, அவர்களை நோக்கி: நீங்கள் உங்கள் இருதயங்களில் இப்படிச் சிந்திக்கிறதென்ன?”

மத் 22 : 18 “இயேசு அவர்கள் துர்க்குணத்தை அறிந்து: மாயக்காரரே, நீங்கள் என்னை ஏன் சோதிக்கிறீர்கள்?”

எரே 20 : 12 “நீதிமானைச் சோதித்தறிந்து, உள்ளிந்திரியங்களையும் இருதயத்தையும் பார்க்கிற சேனைகளின் கர்த்தாவே,…”

Related Posts