Menu Close

இயேசுவின் பிறப்பு பற்றி எரேமியாவின் தீர்க்கதரிசனங்கள்

எரேமியா 23 : 5, 6 “இதோ, நாட்கள் வருமென்று கர்த்தர் சொல்லுகிறார், அப்பொழுது தாவீதுக்கு ஒரு நீதியுள்ள கிளையை எழும்பப்பண்ணுவேன்; அவர் ராஜாவாயிருந்து, ஞானமாய் ராஜரீகம்பண்ணி, பூமியிலே நியாயத்தையும் நீதியையும் நடப்பிப்பார்.”

“அவர் நாட்களில் யூதா இரட்சிக்கப்படும், இஸ்ரவேல் சுகமாய் வாசம்பண்ணும்; அவருக்கு இடும் நாமம் நமது நீதியாயிருக்கிற கர்த்தர் என்பதே.”

இது கிறிஸ்துவைக் குறித்து எரேமியா கூறிய தீர்க்கதரிசனமாகும். இதில் கர்த்தர் என்பதின் மூலச்சொல் யேகோவா என்பதாகும். எனவே கிறிஸ்துவை யோகோவா என்று கூறுகிறது. தாவீதின் குடும்பத்தாரை கி.மு 586 ல் தேவன் அழித்த போது, தாவீதின் ராஜவம்சம் வெட்டப்பட்டுப் போய்விட்டது. இருப்பினும் தாவீதின் வம்சத்திலிருந்து ஒரு கிளையை எழுப்புவதாகத் தேவன் வாக்களித்தார். இந்த ராஜா இறுதியாக நீதியையும் நேர்மையையும் செய்வார். அவருடைய 1000 வருட அரசாட்சியின் முன் நடக்கும் அவரது இரண்டாம் வருகைக்குப் பின் தான் அவரது முழு நியாயத்தீர்ப்பின் அரசாட்சி விளங்கும். அப்பொழுது இயேசுவை “நமது நீதியாயிருக்கிற கர்த்தர்” என்று அழைப்பார்கள். அப்பொழுது யூதா இரட்சிக்கப்படும். இஸ்ரவேலர் சுகமாய் வாசம் பண்ணுவார்கள்.

Related Posts