“ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இம்மானுவேல் என்று பெயரிடுவார்கள் என்று சொன்னான்”
இம்மானுவேல் என்பதற்கு தேவன் நம்மோடிருக்கிறார் என்று அதன் பொருளையும் தேவதூதன் யோசேப்பிற்கு அறிவித்தான் (மத்தேயு 1 : 23).
தேவன் நம்மோடு கூட இருக்கிறார் என்பதை ஆண்டவரும் உறுதிப்படுத்தும் விதமாக, தம் சீடர்களுக்கு “உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனே கூட இருக்கிறேன்” என்றார் (மத்தேயு 28 : 20).
மத்தேயு முதல் அதிகாரத்தில் இம்மானுவேலராய் நம்மோடு இருக்கும் தேவன் மத்தேயு கடைசி அதிகாரத்தில் இயேசுவாகவே உலக முடிவு வரை நம் கூட இருக்கிறார். துவக்கம் முதல் முடிவு வரை அவர் நம்மோடு கூட இருப்பது மனுக்குலம் பெற்ற பாக்கியம் ஆகும்.