Menu Close

கிறிஸ்து

கிறிஸ்து என்றால் அபிஷேகம் பண்ணப் பட்டவர் என்று பொருள். யூத வம்சத்தில் பொறுப்புள்ள பதவிக்கு வருபவர்களை அபிஷேகம் செய்தே அமர்த்துவார்கள். ஆசாரியனையோ, ராஜாவையோ அப்படி அபிஷேகம் செய்வது வழக்கம். யூதர்கள் தங்களை சிறையிருப்பிலிருந்து மீட்டு தங்களுக்கு ஒரு தனி ராஜ்ஜியம் ஸ்தாபிக்க அபிஷேகம் பண்ணப்பட்ட மேசியா வருவார், அந்த மேசியாவே தங்களுக்கு கிறிஸ்துவாக இருப்பார் எனக் காத்திருந்தனர். ஆண்டவரோ பிதாவால் அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவாய் பூமிக்கு வந்தார். பரிசுத்த ஆவியினால் கன்னி மரியாளிடம் உருவாகிப் பிறந்த இயேசுவை (மத்தேயு 1 :18 – 25) தேவன் பரிசுத்த ஆவியினால் அபிஷேகம் பண்ணினார் ( மத்தேயு 3:: 16, 17) அபிஷேகம் பண்ணப்பட்ட இயேசுவை நாம் இயேசு கிறிஸ்து என்றழைக்கிறோம். சாஸ்திரிகள் கிறிஸ்தவர்களுக்கு ராஜா என்று ஏற்றுக்கொண்டனர். பேதுருவும் அவனுடைய நண்பர்களும் இயேசுவை ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என அறிக்கையிட்டனர் (மத்தேயு 17 : 6 – 16) இயேசு அபிஷேகம் பண்ணப்பட்டவர் மட்டுமன்றி தம்மை விசுவாசிக்கிறவர்களில் வாஞ்சையோடு கேட்கிறவர்களைப் பரிசுத்த ஆவியினால் அபிஷேகம் பண்ணுகிறாயிருக்கிறார்.

Related Posts