Menu Close

தூதன் யோசேப்பிடம் இயேசுவின் பிறப்பை பற்றி அறிவித்தார்

மத்தேயு 1 : 20 – 21 “யோசேப்பு இப்படி சிந்தித்துக்கொண்டிருக்கையில், கர்த்தருடைய தூதன் சொப்பனத்தில் அவனுக்குக் காணப்பட்டு: தாவீதின் குமாரனாகிய யோசேப்பே, உன் மனைவியாகிய மரியாளைச் சேர்த்துக்கொள்ள ஐயப்படாதே; அவளிடத்தில் உற்பத்தியாயிருக்கிறது பரிசுத்த ஆவியினால் உண்டானது.”

“அவள் ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக; அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார் என்றான்.”

யோசேப்பு நீதிமானாக இருந்ததால் மரியாளை அவமானப்படுத்த மனதில்லாமல் தள்ளிவிட யோசனையாயிருந்தான். அதையறிந்த கர்த்தருடைய தூதன் சொப்பனத்தில் யோசேப்பிடம், உண்மையாக என்ன நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்பதைத் தெளிவு படுத்தினார். அவளுடைய கர்ப்பத்திலிருப்பது பரிசுத்த ஆவியினால் உண்டானது என்றார். அவள் ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக என்று கூறினார். இயேசு என்ற வார்த்தைக்கு இரட்சகர் என்று பொருள். இயேசு பாவத்திலிருந்தும், சாபத்திலிருந்தும், இரட்சி க்கிறவர். நோயிலிருந்தும், பேயிலிருந்தும், பலவீனங்களிலிருந்தும் விடுவிக்கிறவர். நம்முடைய பாவங்களுக்காக பாவ நிவர்த்தி செய்யவும், கிரயம் செலுத்தவும், நமக்கு இரட்சிப்பைச் சம்பாதித்துத் தரவும், வேண்டுமானால் மீட்பரான அவர் மானிட உருவில் வெளிப்பட வேண்டும். முற்றிலும் தெய்வத்ன்மையுள்ளவராக இருக்க வேண்டும்.. பாவமற்றவராயிருக்க வேண்டும் இயேசு ஒரு கன்னியிடம் பிறந்ததால் இவைகள் அனைத்தும் பூர்த்தியானது. இயேசு மானிடனாக அவதரிக்க ஒரு பெண்ணின் வயிற்றில் பிறக்கவேண்டும். முற்றிலும் பரிசுத்தமுள்ளவராயிருக்க, அவர் பரிசுத்த ஆவியினால் உற்பத்தியாக வேண்டும். பரிசுத்த தேவன் அவருடைய பிதாவாக இருக்க வேண்டும். அதனால் அவர் இயற்கைக்கு அப்பாற்பட்ட தெய்வீக முறையில் பிறந்தார். அதனால் அவரிடம் இரண்டு தன்மைகள் இருந்தன. ஒன்று தெய்வீகத்தன்மை. இன்னொன்று பாவமற்ற தன்மை.

Related Posts