Menu Close

வியாதியினால் எசேக்கியா ராஜா வடித்த கண்ணீர்: ஏசாயா 38

எசேக்கியாராஜா:

எசேக்கியா யூதாவின் 12ம் ராஜா. இவர் 25ம் வயதில் ராஜாவானார். இவர் யூதாவின் 3உத்தமுமானராஜாக்களின்ஒருவர்.இவர்மேடைகளை அகற்றி, மோசே பண்ணியிருந்த வெண்கல சர்ப்பத்தை உடைத்து தேவாலய ஆரா தனைகளையும் ஒழுங்காய் நடப்பித்தார். இஸ்ரவேல் ராஜ்ஜியம் விழுந்த பின் சிதறியிருந்த சகல ஜனங்களையும் கூட்டி ஒரு விசேஷ பஸ்கா பண் டிகையை 14 நாட்களாய் நடத்தினார். பெலிஸ்தியருக்கு விரோதமாய் யுத் தம்செய்து அவர்களைத் தோற்கடித்தார். தேவதரிசனத்தை மிகவும் தெளி வாகக் கண்டவர்.அந்நியநாட்டினரால் சிறைபிடிக்கப்பட்டுக் கொண்டு போக ப்பட்ட இடத்தில் தேவதரிசனம் பெற்று சிறையிருப்பில் இருந்தவர்களுக்கு தேவனுடைய செய்தியை அளித்தவர். அவர் கண்ட உலர்ந்த எலும்புகள் உயிரடைந்த தரிசனமும் (எசேக்கியேல் 37:1–14,) வருங்கால தேவாலய த்தின் தரிசனமும் (எசேக்கியேல் 40:1-48:35) முக்கியமானவை. எரேமியா வைப்போன்று பிறப்பால்ஆசாரியர். அழைப்பால்தீர்க்கதரிசி. எரேமியா எரு சலேமிலும்,எகிப்திலும் ஊழியம் செய்தகாலத்தில் எசேக்கியேல் பாபிலோ னில் ஊழியம் செய்தார். அநேக ஆவிக்குரிய அனுபவங்களைப் பெற்றவர். தனது பணியினிமித்தமாக தனது மனைவியை இழக்க நேரிட் டபோதிலும் முறுமுறுக்காமல் கர்த்தருக்காகப் பணி செய்தார். கர்த்தருடைய கட்டளை யினால் பலநாட்கள் ஒருபுறமும், மீண்டும் பல நாட்கள் மற்றோரு புறமும் சரிந்து படுக்க நேரிட்டாலும், தனது தலையையும், தாடியையும் சிரைக்க நேரிட்டாலும் அவைகளைப் பொறுமையோடு ஏற்றுக் கொண்டவர். 

ஏசாயா கூறின கர்த்தரின் வார்த்தை: 

ஏசாயா 38 : 1 “ஏசாயா என்னும் தீர்க்கதரிசி அவனிடத்தில் வந்து, அவனை நோக்கி: நீர் உமது வீட்டுக்காரியத்தை ஒழுங்குப்படுத்தும், நீர் பிழைக்கமாட்டீர், மரித்துப்போவீர் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான்.”

எசேக்கியா ராஜாவாயிருந்து 14 ஆண்டுகள் ஆட்சி செய்த பின் எருசலே மானது அசீரியரின் இராணுவத்தால் முற்றுகை போட்டிருந்த நேரத்தில் எசேக்கியா ராஜாவின் சரீரத்திலுள்ள பிளவையினால் துன்பப்பட்டுக் கொண்டிருந்தான். அந்த வியாதியானது மரணத்துக்கு ஏதுவாக இருந்தது. மரிக்கும் தருவாயிலிருந்தான். மேலும் அசீரியர்களாலும் மிகவும் வேத னைப்பட வேண்டியதாயிருந்தது. மரணப் படுக்கையிலிருந்த எசேக்கியா வின் வீட்டை ஒழுங்குபடுத்த ஆமோத்சின் குமாரனாகிய ஏசாயா என்னும் தீர்க்கதரிசியைக் கர்த்தர் அனுப்பினார். 

நாம் ஒவ்வொருவரும் எந்த நாளிலே, எந்த நேரத்திலே மரிக்கப் போகிறோம் என்று தெரியாவிட்டாலும் தேவன் நியமிக்கப்பட்ட நேரத்தில் மரிப்பது உண்மையே (எபிரேயர் 9 : 27). ஒரு மனிதனின் ஆயுசுநாட்கள் ஏற்கெனவே கர்த்தரால் நியமிக்கப்பட்டிருக்கும். அவற்றை அவர் அதிகரிக்கவும், குறைக்கவும் கூடும். இங்கு எசேக்கியாவின் ஆயுசுநாட்கள் எவ்வளவு என்பதை ஏசாயா தீர்க்கதரிசி மூலம் தெரிவித்தார். இவ்விதம் ஆயுசுநாட்களைத் தெரிந்து கொள்வதற்காக மோசே 

சங்கீதம் 90 : 12 ல் “நாங்கள் ஞான இருதயமுள்ளவர்களாகும்படி, எங்கள் நாட்களை எண்ணும் அறிவை எங்களுக்குப் போதித்தருளும்.” 

என்று ஜெபித்ததையும். தாவீது, 

சங்கீதம் 39 : 4 “கர்த்தாவே, நான் எவ்வளவாய் நிலையற்றவன் என்று உணரும்படி என் முடிவையும், என் நாட்களின் அளவு இவ்வளவு என்பதையும் எனக்குத் தெரிவியும்.”

என்று ஜெபித்ததையும் பார்க்கிறோம்.ஒரு மனிதனின் ஆயுசுநாட்கள் ஏற்க னேவே கர்த்தரால் நியைக்கப்பட்டவை என்பதல்ல. அவற்றை அவர் அதிக ரிப்பதும் குறைப்பதும் உண்டு (சங்கீதம் 55 ; 23). ஒருவன் மரணத்தை எதிர் நோக்கும் நிலை வரும்போதுதான் உலகப்பிரகாரமான காரியங்களைச் சரி யாக நினைக்கத்துவங்குகிறான்.அதேபோல் எசேக்கியாவும் கர்த்தருடைய வார்த்தைகளைக்கேட்டவுடன் தன்னுடைய முகத்தை சுவர்ப்புறமாகத் திரு ப்பிக் கர்த்தரை நோக்கி மிகவும் அழுதான் தான் கர்த்தருக்கு முன்பாக உண் மையும் மன உத்தமுமாய் நடந்ததாகவும், கர்த்தருடைய பார்வைக்கு நல மானதைச் செய்ததாகவும்,அவைகளை நினைத்தருளவேண்டி மிகவும் அழுதான். எசேக்கியா தேவனுடைய வல்லமையின் மேல் நம்பிக்கை கொண்டு தமது வியாதி சுகமாகும்படி ஊக்கமுடன் ஜெபித்தான். அப்பொ ழுது ஏசாயா அவனுடைய இடத்திலிருந்து பாதிமுற்றத்தைக் கூடக் கடக்க வில்லை. அப்பொழுதே கர்த்தருடைய வார்த்தை திரும்பவும் ஏசாயாவுக்கு உண்டானது அதுமட்டுமல்லால் அவனைத் திரும்பி எசேக்கியாவிடம் போகச் சொல்லி கட்டளையிட்டதைப் பார்க்கிறோம். தேவன் தனது வார்த் தைக்குச் செவி கொடுப்பவர்களுக்காகத் தன்னுடைய திட்டங்களை மாற்று கிறார். ஏசாயாவிடம் எசேக்கியாவைப் பற்றிக் கூறும்போது “என் ஜனத்தின் அதிபதி”என்றும் தன்னைத் “தாவீதின் தேவன்” என்று கூறியிருப்பதைப் பார் க்கிறோம். கர்த்தர் திருப்பிப்போய் எசேக்கியாவிடம் கூறச் சொன்னதாவது. 

  1.  “உன் விண்ணப்பத்தைக் கேட்டேன்”.
  2. .“உன் கண்ணீரைக் கண்டேன்”. 
  3. “நான் உன்னைக் குணமாக்குவேன்”
  4. “மூன்றாம் நாளில் நீ கர்த்தருடைய ஆலயத்துக்குச் செல்வாய்”
  5. .“உன் நாட்களோடு 15 வருஷங்களைக் கூட்டிக் கொடுப்பேன்”
  6. .“உன்னையும் இந்த நகரத்தையும் அசீரியரின் கைக்குத் தப்புவிப்பேன்”
  7. “என்னிமித்தமும் என் தாசனாகிய தாவீதினிமித்தமும் இந்த நகரத்துக்கு ஆதரவாயிருப்பேன்” 

அதன்பின் ஏசாயா அத்திப்பழ அடையைக் கொண்டு பற்றுப் போடச் சொல் லிப் போட்டபோது எசேக்கியா பிழைத்தான்.

எசேக்கியேலுக்குக் கர்த்தர் கொடுத்த அடையாளம்:

ஏசாயா 38 : 7 “இதோ, ஆகாசுடைய சூரியகடியாரத்தில் பாகைக்குப் பாகை இறங்கின சாயையைப் பத்துப்பாகை பின்னிட்டுத் திருப்புவேன் என்றார்.”

அதன்பின் எசேக்கியேல் தான் குணமாகி மூன்றாம் நாளில் கர்த்தருடைய ஆலயத்திற்குப் போவதற்கு அடையாளம் கேட்டார். ஏசாயா கர்த்தர் தாம் சொன்ன வார்த்தையின்படியே செய்வாரென்பதற்கு அடையாளமாக சூரி யக் கடியாரத்தின் சாயை பத்துப் பாகை முன்னிட்டுப் போக வேண்டுமா, அல்லது பத்துப் பாகை பின்னிட்டுத் திரும்ப வேண்டுமா என்றான். அதற்கு எசேக்கியா சாயை முன்னால் போவது லேசான காரியமாதலால், பின்னி ட்டுத் திரும்ப வேண்டுமென்றான். அப்பொழுது ஏசாயா கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டான். அப்பொழுது கர்த்தர் ஆகாசுடைய கடியாரத்தில் பாகைக்குப் பாகை முன் போன சாயை பத்துப்பாகை பின்னிட்டுத் திரும்பும்படி செய் தார் (2இராஜாக்கள்20:1–11). தேவனிடம் அடையாளம் கேட்காமல் விசுவா சிப்பதுநல்லது. ஆனால்தம்மை உண்மையாக நேசிப்பவர்களுக்கு அடை யாளம் தருவதற்குத் தேவன் தயங்குவதில்லை. நியாயாதிபதிகள் 6:36-40 இஸ்ரவேலைத் தான் இரட்சிப்பதற்கு கிதியோன் கர்த்தரிடம் அடையாளம் கேட் டான். அது என்னவென்றால் கிதியோன் களத்தில் போட்ட தோலில் மட்டும் பனி பெய்திருக்க வேண்டுமென்றும், திரும்பத் தோலில் மட்டும் பனி பெய்யாதிருக்கவும் கட்டளையிடச் சொன்னான். அப்படியே தேவன் செய்தார். 

எசேக்கியாவின் ஜெபத்தைக் கேட்ட கர்த்தர் அவனைக் கிருபையால் சுகமாக்கி அவனது ஆயுசு நாட்களை 15 ஆண்டுகள் கூட்டி மீண்டும் உலகத்தில் வாழ வைத்தார். அது மட்டுமல்லால் எசேக்கியாவின் நாட்டை எதிரியினின்று கர்த்தர் தப்புவித்தார். கர்த்தர் மீது உண்மையான விசுவாசம் உள்ளவர்களின் ஊக்கமான ஜெபத்திற்கு கர்த்தர் நிச்சயம் நல்ல பதிலாகக் கொடுப்பாரென்று இதிலிருந்து அறிகிறோம். தான் அளிக்கும் தீர்க்கதரிசனத்தின் நிறைவேறுதலை 15 ஆண்டுகள் தள்ளிப்போடும் அளவுக்கு எசேக்கியாவின் ஜெபம் கேட்கப்பட்டது. மரணப்படுக்கையாகத் தோன்றும்போது கர்த்தரின் அற்புத சுகத்திற்காக ஜெபிக்கலாம் என்பதை இதிலிருந்து அறிகிறோம். ஏசாயா கூறியபடி அத்திப்பழ அடையின் மூலமாக குணமாக்கினார் என்பதல்ல. தேவன் தனது வசனத்தை அனுப்பியும் குணமாக்க முடியும். அதன்பின் எசேக்கியாவுக்கு ஒரு மகன் பிறந்து எசேக்கியா இறந்தபின் மகனது 12 வது வயதில் அரியணை ஏறினான். எசேக்கியா உத்தமமாக இருந்ததால் இரட்டிப்பான ஆசீர்வாதத்தைக் கர்த்தர் கொடுத்தார். அற்புதமான முறையில் சரியாகி, சூரியக் கடியாரம் பத்து பாகை பின்னிட்டுத் திரும்பும் அடையாளத்தையும் அவனுக்குக் காட்டினார். எசேக்கியாவைப் போல நமது ஆயுசுக்காகத் தேவ சமூகத்தில் கண்ணீரோடு ஜெபிக்க வேண்டும். கர்த்தர் கண்ணீரின் ஜெபத்திற்குக் கண்டிப்பாகப் பதிலளிப்பார். ஆமென்.

Related Posts