Menu Close

சூனேமியாளின் குமாரனை உயிரோடெழுப்பினார்

2 இராஜாக்கள் 4 : 8 “பின்பு ஒருநாள் எலிசா சூனேமுக்குப் போயிருக்கும் போது, அங்கேயிருந்த கனம்பொருந்திய ஒரு ஸ்திரீ அவனை போஜனம்பண்ண வருந்திக் கேட்டுக்கொண்டாள்; அப்படியே அவன் பயணப்பட்டு வருகிறபோதெல்லாம் போஜனம்பண்ணும்படி அங்கே வந்து தங்குவான்.”

எலிசா என்ற வல்லமையான ஊழியக்காரன் கர்மேல் பர்வதத்தில் வாழ்ந்து வந்தான். அதன் பக்கத்திலுள்ள ஊர் தான் சூனேம் என்ற பட்டணம். எலிசா எந்த இடத்துக்கு ஊழியத்துக்குச் சென்றாலும் சூனேம் ஊரின் வழியாகத்தான் செல்ல வேண்டும். அங்கு வசதியான குடும்பத்தில் உள்ள ஒரு பெண்ணைக் கனம் பொருந்திய ஸ்திரீ என்று கொடுக்கப் பட்டிருப்பதால் அந்த ஊரிலுள்ள எல்லோரும் மதிக்கத்தக்கவள் என்று அறிகிறோம். மேலும் அவள் தெய்வ பக்தியுடையவளாகவும் இருந்தாள். அவளது பெயர் கொடுக்கப்படாததால் சூனேமியாள் என்று வேதம் கூறுகிறது. அந்தப் பெண் எப்பொழுதும் எலிசாவைத் தங்கள் வீட்டில் சாப்பிடும்படி வற்புறுத்தி அழைப்பாள். அவளுக்குத் தேவமனிதர்களுக்கு சேவை செய்ய வேண்டுமென்ற மனப் பான்மை இருந்ததைப் பார்க்கிறோம். எலிசா என்ற ஊழியனைக் கனப்படுத்த எவ்வாறு கனப்படுத்தலாம், அதற்கு என்ன செய்யலாம் என்று யோசித்தாள். அந்தப் பெண் தனக்கு நன்மை கிடைக்கும் என்று எதிர்பார்க்காமல் தேவனை நேசித்த ஒரே காரணத்தால் தேவனுடைய மனிதனுக்கு உதவி செய்தாள். அவள் வருந்திக் கேட்டுக் கொண்டதால் எலிசாவும் சூனேம் ஊருக்கு வரும் போதெல்லாம், தன் வேலைக்காரனுடன் அவள் வீட்டில் போஜனம் பண்ணி, தங்கி விட்டுச் செல்வது வழக்கம். 

சூனேமியாள் கணவனிடம் வேண்டியது:

2 இராஜாக்கள் 4 : 9, 10 “அவள் தன் புருஷனை நோக்கி: இதோ, நம்மிடத்தில் எப்போதும் வந்துபோகிற தேவனுடைய மனுஷனாகிய இவர் பரிசுத்தவான் என்று காண்கிறேன்.”

“நாம் மெத்தையின்மேல் ஒரு சிறிய அறைவீட்டைக் கட்டி, அதில் அவருக்கு ஒரு கட்டிலையும், மேஜையையும், நாற்காலியையும், குத்துவிளக்கையும் வைப்போம்; அவர் நம்மிடத்தில் வரும்போது அங்கே தங்கலாம் என்றாள்.”

ஒருநாள் அந்தப் பெண் தன் கணவனிடம் தம்முடைய வீட்டிற்கு வந்து போகிற மனுஷன் தேவமனுஷன் என்றும், பரிசுத்தவான் என்றும் கூறுவதிலிருந்து அவளுக்குப் பகுத்தறியும் அறிவு இருந்ததைப் பார்க்கிறோம். எலிசாவின் நடத்தை அத்தனை பிரபலமாக அனைவராலும் அறியப்பட்டிருந்ததென்றும் அறிகிறோம். அக்காலத்தில் எலிசா எல்லா மக்களாலும் தேவனுடைய மனுஷன் என்று அறியப்பட்டிருந்தான். (2இராஜாக்கள் 4 : 9, 16, 22, 25, 27, 40, 5 : 8, 6 : 6, 9 , 10, 7 : 18, 8 : 4, , 8, 11). எந்த ஒரு ஊழியனுக்கும் தேவ மனுஷன் என்னும் பெயர் கிடைப்பது ஒரு உயர்ந்த பாக்கியம் ஆகும். அதற்கு எலிசாவின் சில குணங்கள் தான் காரணம். 1. தேவனுடன் நெருங்கிய தொடர்பு கொண்டி ருந்தான். 2. அவன் ஒரு பரிசுத்தவானாகக் கர்த்தருக்குத் தன்னை முழுவது மாக அர்பணிந்திருந்தான். 3. இஸ்ரவேல் மக்களின் பாவங்கள், விக்கிரக ஆராதனை ஆகியவற்றைக் கடுமையாக எதிர்த்தான். 4. கர்த்தருடைய ஆவி யால் தேவனுடைய பிரதிநிதியாக தேவ வார்த்தைகளை மக்களிடம் அதிகா ரத்துடன் அறிவித்து வந்தான். 5. கர்த்தர் அவனை மாபெரும் தீர்க்கதரிசியாக பல அற்புதங்களை அவன் மூலம் நடைபெறச் செய்தார். எலிசாவுக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டுமென்ற நோக்கத்துடன் தன்னுடைய வீட்டின் மாடியில் ஒரு அறையைக் கட்டி அதில் அவருக்கென்று ஒரு கட்டிலையும், மேஜையை யும், நாற்காலியையும் வைப்போமா என்று தன் கணவனிடம் அனுமதி கேட்டாள். 

அவரும் அதற்கு சம்மதித்து அவள் சொன்னபடி மாடியில் ஒரு அரையையும், பொருட்களையும் ஒழுங்கு படுத்தி வைத்தாள். அவள் ஒரு கனம் பொருந்திய பெண்ணாக இருந்தாலும், அவளுடைய கனத்தைக் குறித்து மேன்மை பாராட்டாமல் தேவ மனிதனைக் கனம் பண்ணுவதில் உற்சாகமாயிருந்தாள். அவளுடைய கணவனும் அவளுடைய ஆவிக்குரிய ஜீவியத்திற்கு தடையா யில்லை என்றறிகிறோம். அந்தக்காலத்தில் விசுவாசிகள் ஊழியக்காரர்க ளுக்கென்று தங்களுடைய வீட்டில் தனியாக அறைகளைக் கட்டி வைப்பார்கள்/ ஊழியக்காரர்களும் ஊர் ஊராகச் செல்லும்போது விடுதிகளில் அல்ல. விசுவாசிகளின் வீடுகளில் தான் தங்குவர். தீர்க்கதரிசி என்னும் நாமத்தினி மித்தம் தீர்க்கதரிசியை ஏற்றுக் கொள்பவன் தீர்க்கதரிசிக்கேற்ற பலனை அடைவான். சீஷன் என்னும் நாமத்தினிமித்தம் இந்தச் சிறியரில் ஒருவனுக்கு ஒரு கலசம் தண்ணீர் மாத்திரம் குடிக்கக் கொடுத்தவனுக்கு தன்பலனை அடையாமல் போகான் என்று வேதத்தில் கூறியிருப்பதை அறிவோம். நம்முடைய வாழ்க்கையிலுக்கூட தேவனுடைய ஊழியத்தைச் செய்யும் பரிசுத்தவான்களை உபசரித்து, அவர்களை நமது பொருள் உதவியால் தாங்கும் நற்செயல்கள் செய்யும்போது, அதற்கேற்ற பலன் நமக்கு கிடைக்கும். நமது வாழ்க்கையும் திருப்தியாக அமையும்.

எலிசா சூனேமியாளுக்கு நன்மை செய்ய நினைத்தது:

2 இராஜாக்கள் 4 : 11 – 13 “ஒருநாள் அவன் அங்கே வந்து, அந்த அறைவீட்டிலே தங்கி, அங்கே படுத்துக்கொண்டிருந்தான்.”

“அவன் தன் வேலைக்காரனாகிய கேயாசியை நோக்கி: இந்தச் சூனேமியாளை அழைத்துக்கொண்டுவா என்றான்; அவளை அழைத்துக்கொண்டுவந்தான்; அவள் அவனுக்கு முன்பாக நின்றாள்.”

“அவன் கேயாசியைப் பார்த்து: இதோ, இப்படிப்பட்ட சகல சலக்கரணையோடும் எங்களை விசாரித்து வருகிறாயே, உனக்கு நான் என்ன செய்யவேண்டும்? ராஜாவினிடத்திலாவது சேனாபதியினிடத்திலாவது உனக்காக நான் பேசவேண்டிய காரியம் உண்டோ என்று அவளைக் கேள் என்றான். அதற்கு அவள்: என் ஜனத்தின் நடுவே நான் சுகமாய்க் குடியிருக்கிறேன் என்றாள்.”

எலிசா தனக்காகத் திறந்து வைக்கப்பட்டிருக்கிற அந்த வீட்டுக்காக மகிழ்ச்சியடைகிறார். ஒருநாள் எலிசா அந்த அறையில் படுத்திருக்கும்போது தனக்கும், தன்னோடு வருகிற ஊழியனுக்கும் இத்தனை கரிசனையோடு உபசாரம் செய்வதால் அவளுக்கு ஏதாவது செய்ய வேண்டுமென்று நினைத்து கேயாசியிடம் அவளை அழைத்து வரச் சொன்னான். கேயாசி அவளை அழைத்துக் கொண்டு வந்தான். அவளும் எலிசாவுக்கு முன்பாக நின்றாள். எலிசா கேயாசியிடம் அவள் இவ்வளவு உதவி செய்வதால் அவளுக்கு ஏதாவது உதவி வேண்டுமா கேள் என்றான். ராஜாவினிடமோ, சேனாபதி யிடமோ ஏதாவது அவளுக்காகப் பேச வேண்டுமானால் பேசுகிறேன் அவளைக் கேள் என்றான். ராஜாவுக்கே கட்டளை கொடுக்க எலிசாவால் முடியுமென்று இதனால் அறிகிறோம். ஆனால் அவளோ தன்னுடைய ஜனத்திற்கு நடுவில் தான் சுகமாகக் குடியிருப்பதாகக் கூறினாள். அவளுக்குப் பிள்ளையில்லா மலிருந்த நிலையிலும் அவள் அதை அந்தத் தேவ மனிதனிடம் கூறவில்லை. அவளுடைய மனமும் சிந்தையும் அவளுடைய குறையைச் சொல்ல இடம் கொடுக்கவில்லை. அவளுக்கு இனி குழந்தை பிறக்காது என்று நினைத்துப் பல வருடங்கள் ஆகியிருக்கலாம். கிழவனான புருஷனானாலும் அவள் அவனுடன் திருப்தியாய் வாழ்ந்து கொண்டிருந்தாள். இஸ்ரவேலில் குழந்தை இல்லையென்றால் அதைச் சாபம் என்பர். 

எலிசா கூறிய தீர்க்கதரிசனம்: 

2 இராஜாக்கள் 4 : 14 – 17 “அவளுக்குச் செய்யவேண்டியது என்னவென்று கேயாசியை அவன் கேட்டதற்கு; அவன், அவளுக்குப் பிள்ளை இல்லை, அவள் புருஷனும் பெரிய வயதுள்ளவன் என்றான்.”

“அப்பொழுது அவன்: அவளைக் கூப்பிடு என்றான்; அவளைக் கூப்பிட்ட போது, அவள் வந்து வாசற்படியிலே நின்றாள்.”

“அப்பொழுது அவன்: ஒரு பிராண உற்பத்திகாலத்திட்டத்திலே ஒரு குமாரனை அணைத்துக் கொண்டிருப்பாய் என்றான். அதற்கு அவள்: ஏது? தேவனுடைய மனுஷனாகிய என் ஆண்டவனே, உமது அடியாளுக்கு அபத்தம் சொல்லவேண்டாம் என்றாள்.”

“அந்த ஸ்திரீ கர்ப்பந்தரித்து, எலிசா தன்னோடே சொன்னபடி, ஒரு உற்பத்திகாலத்திட்டத்தில் ஒரு குமாரனைப் பெற்றாள்.”

எலிசா கேயாசியிடம் அவளுக்கு ஏதாவது குறை இருக்கிறதா என்று விசாரித்தான். அதற்கு கேயாசி அவளுக்குப் பிள்ளையில்லை, ஏனென்றால் அவளது கணவன் மிகவும் வயது சென்றவன் என்றான். எத்தனையோ தடவை எலிசா அவள் வீட்டில் தங்கியும் இந்தக் குறை எலிசாவுக்குத் தெரியவில்லை. தேவனுடைய அகராதியில் முடியாதென்று எதுவுமில்லை. எலிசா கேயாசி யிடம் அவளை அழைத்து வரச் சொன்னான். கேயாசி அவளைக் கூப்பிட்ட வுடன் அவள் வந்து எலிசா இருக்கும் அறையின் வாசற்படியில் நின்றாள். அப்பொழுது எலிசா அவளிடம் ஒரு பிராண உற்பத்திக்காலதிட்டத்திலே ஒரு குமாரனை அணைத்துக் கொண்டிருப்பாய் என்றுரைத்தான். ஊழியக்காரனை அவள் உபசரித்த போது அவள் கேட்காமலே ஆசீர்வாதம் வருகிறது. ஆனால் அவள் அதை உதாசீனம் செய்து அபத்தம் சொல்ல வேண்டாமென்றாள். ஏனென்றால் இனி தனக்கு பிள்ளை பிறக்காது என்ற முடிவுக்கு வந்திருந்தாள். கர்த்தர் அவளுடைய குறைவை நிறைவாக்கினார். ஆனால் கர்த்தருடைய வார்த்தையின்படி ஒரு குமாரனைப் பெற்றாள். எலிசா அவளுடைய வீட்டில் வருகை தரும்போது அவளுக்கு அற்புதம் நடக்கவில்லை. எப்பொழுது அவள் தங்க இடம் கொடுத்தாளோ அப்பொழுதுதான் அற்புதம் நடந்தது. அதேபோல் நம்முடைய வீட்டிலும் இயேசு வந்து தங்கினால் போதும். நமக்குள்ள குறைவை நிறைவாக்குவார். 

கர்த்தருடைய ஊழியர்களுக்காக என்றைக்கும் ஆத்தும பாரத்தோடு உதவி செய்கிற கர்த்தருடைய பிள்ளைகளுடைய வாழ்க்கையிலே அவர்களுடைய இருதயத்தில் உள்ள நல்ல விருப்பங்களை கர்த்தர் கனம் பண்ணுவார். அவைகளைக் கர்த்தர் நிச்சயமாய் நிறைவேற்றித் தருவார். கர்த்தர் தனக்கும் தனது ஊழியருக்கும் செய்தவற்றிற்காகப் பதிலளிக்கப்பததற்காக அவளை ஆசீர்வதித்தார். பலதடவைகள் தேவன் தம்மிடம் உண்மையான விசுவாசம் உள்ளவர்களைக் கடுமையான சோதனைகள், துன்பங்கள் வழியாகக் கடந்து செல்ல அனுமதிக்கிறார். (எபிரேயர் 11 : 17 – 40, யோபு 1, 2 அதிகாரங்கள்). பின்னர் அவர்கள் தேவனுடைய அன்பு, கிருபை, இரக்கம் ஆகியவற்றைப் பெற்று அனுபவிக்கும்போது அவர்கள் இன்னும் அதிக உறுதியுடன் கர்த்தரைப் பற்றிக் கொள்ளுகிறார்கள். சூனேமியாளைப் போல எந்த நிலைமையிலும் மன நிறைவாக இருக்கக் கற்றுக் கொள்வோமாக. அப்பெண் கேட்காமலே கர்த்தர் அவளது தேவையைச் சந்தித்தார். 

சூனேமியாளின் மகனின் இறப்பு 

2 இராக்கள் 4 : 18 – 20 “அந்தப் பிள்ளை வளர்ந்தான், ஒருநாள் அவன் அறுப்பறுக்கிறவர்களிடத்திலிருந்த தன் தகப்பனண்டைக்குப் போயிருக்கும் போது,”

“தன் தகப்பனைப் பார்த்து: என் தலை நோகிறது, என் தலை நோகிறது என்றான்; அப்பொழுது அவன் வேலைக்காரனிடத்தில், இவனை இவன் தாயினிடத்தில் எடுத்துக்கொண்டுபோய்விடு என்றான்.”

“அவனை எடுத்து, அவன் தாயினிடத்தில் கொண்டுபோனபோது, அவன் மத்தியானமட்டும் அவள் மடியில் இருந்து செத்துப்போனான்.”

கர்த்தர் எலிசாவின் மூலம் உரைத்தபடி சூனேமியாளுக்குக் குழந்தை பிறந்தது. அந்தப் பிள்ளை வளர்ந்தபின் ஒருநாள் தன்னுடைய தந்தையுடன் அறுப்பு நடக்கிற வயல் வெளிக்குச் சென்றான். அவன் அங்கிருக்கும் போது தலைவலி தாங்க முடியாமல் தன்னுடைய தகப்பனிடம் அதைக் கூறினான். தகப்பன் வேலைக்காரனை அழைத்து அவனை அவனுடைய அம்மாவிடம் கொண்டு விடும்படி கூறினான். தகப்பன் கூறியபடி அவனது வேலைக்காரன் அவனு டைய மகனைத் தாயிடம் கொண்டு விட்டான். மகன் அன்று மத்தியானம் வரை தாயுடன் இருந்து இறந்து விட்டான். எத்தனையோ வருடங்களாகக் குழந்தையில்லாமல் இருந்த அவளுக்கு தேவமனுஷனின் ஆசியினால் கர்த்தர் குழந்தையைக் கொடுத்தார். அப்படிப்பட்ட அற்புதத்தினால் பெற்ற மகன் இறந்துவிட்டதால் அவள் எப்படி துடித்திருக்க வேண்டும் ஆனால் அவள் அழவில்லை. அவள் தேவனுடைய தீர்க்கதரிசன வார்த்தையில் அவ்வளவு விசுவாசம் வைத்திருந்தாள். இறந்த தன்னுடைய மகனைப் பற்றி தன்னுடைய கணவனுக்கு கூடச் சொல்லி அனுப்பவில்லை. 

சடலத்தை வைத்த இடம்:

2 இராஜாக்கள் 4 : 21 – 23 “அப்பொழுது அவள் ஏறிப்போய், அவனை தேவனுடைய மனுஷன் கட்டிலின்மேல் வைத்து, அவன் வைக்கப்பட்ட அறையின் கதவைப் பூட்டிக் கொண்டுபோய்,”

“தன் புருஷனிடத்தில் ஆள் அனுப்பி: நான் சீக்கிரமாய் தேவனுடைய மனுஷன் இருக்கும் இடமட்டும் போய்வரும்படிக்கு, வேலைக்காரரில் ஒருவனையும் ஒரு கழுதையையும் எனக்கு அனுப்பவேண்டும் என்று சொல்லச்சொன்னாள்.”

“அப்பொழுது அவன்: இது அமாவாசியும் அல்ல, ஓய்வுநாளும் அல்லவே; நீ இன்றைக்கு அவரிடத்துக்குப் போகவேண்டியது என்ன என்று கேட்கச்சொன்னான். அதற்கு அவள்: எல்லாம் சரிதான், நான் போக வேண்டியிருக்கிறது என்று சொல்லியனுப்பி,”

அவனைத் தூக்கிக் கொண்டுபோய் தன்னுடைய வீட்டின் மாடிக்குப் போய் தேவனுடைய மனுஷனான எலிசா அடிக்கடி வந்து தங்கும் அறைக்குள் சென்று எலிசா படுக்கும் கட்டிலில் வைத்து கதவைப் பூட்டினாள். ஏசாயா 28 : 16 ல் “விசுவாசிக்கிறவன் பதறான்” என்ற வார்த்தையின்படி ஆத்திரமோ, பதட் டமோ அடையாமல் செயல்பட்டதைப் பார்க்கிறோம். சூனேமியாள் தன்னு டைய ஒரே மகன் மரித்த பின்னும், மனம் கலங்காமல் ஆவிக்குரிய செயலில் எவ்வாறு செயல்பட்டாளென்று இங்கு பார்க்கிறோம். எலிசாவிடம் செல்லத் தீர்மானம் எடுத்தாள். அவளுடைய விசுவாசம் இத்தனை வயதான காலத்தி லும் எலிசா என்ற ஊழியக்காரன் மூலம் தனக்கு ஒரு குழந்தையைக் கொடுக்கக் கர்த்தருக்கு முடியுமானால் அதே ஊழியக்காரன் மூலம் தன்னு டைய மரித்த குழந்தையையும் எழுப்ப முடியுமென்று விசுவாசித்தாள். எனவே தன்னுடைய கணவனுக்கு ஒரு ஆள் அனுப்பித் தான் சீக்கிரமாக தேவனுடைய மனுஷன் இருக்கும் இடம் வரை போக வேண்டுமாதலால் ஒரு கழுதையை யும், வேலைக்காரனையும் அனுப்பச் சொன்னாள். கணவனோ அன்று ஓய்வுநாளும் இல்லை, அமாவாசையும் இல்லை ஏன் போகிறாய் என்று கேட்ட னுப்பினான். ஆனால் அவள் போக வேண்டியதிருக்கிறது என்று மட்டும் கூறிப் புறப்பட்டாள். கணவனுக்கு அந்த அளவுக்கு விசுவாசம் இல்லாததால் அவனிடம் கூறாமலும், அவனைக் கூட அழைத்துச் செல்லாமலும் கர்மே லுக்குச் சென்று எலிசாவைப் பார்க்கப் போனாள். 

எலிசாவிடம் செல்லுதல்:

2 இராஜாக்கள் 4 : 24 – 27 “கழுதையின்மேல் சேணம்வைத்து ஏறி, தன் வேலைக்காரனை நோக்கி: இதை ஓட்டிக்கொண்டுபோ; நான் உனக்குச் சொன்னால் ஒழிய போகிற வழியில் எங்கும் ஓட்டத்தை நிறுத்தாதே என்று சொல்லிப் புறப்பட்டு,”

“கர்மேல் பர்வதத்திலிருக்கிற தேவனுடைய மனுஷனிடத்திற்குப் போனாள்; தேவனுடைய மனுஷன் தூரத்திலே அவளை வரக்கண்டு, தன் வேலைக்காரனாகிய கேயாசியைப் பார்த்து: அதோ சூனேமியாள் வருகிறாள்.”

“நீ அவளுக்கு எதிர்கொண்டு ஓடி, நீ சுகமாயிருக்கிறாயா? உன் புருஷன் சுகமாயிருக்கிறானா? அந்தப் பிள்ளை சுகமாயிருக்கிறதா என்று அவளிடத்தில் கேள் என்றான். அவள்: சுகந்தான் என்று சொல்லி,”

“பர்வதத்திலிருக்கிற தேவனுடைய மனுஷனிடத்தில் வந்து, அவன் காலைப் பிடித்துக்கொண்டாள்; அப்பொழுது கேயாசி அவளை விலக்கிவிட வந்தான்; தேவனுடைய மனுஷன்: அவளைத் தடுக்காதே; அவள் ஆத்துமா துக்கமாயிருக்கிறது; கர்த்தர் அதை எனக்கு அறிவியாமல் மறைத்து வைத்தார் என்றான்.”

சூனேமியாள் எலிசா இருக்கும் கர்மேல் மலைக்கு அவரைப் பார்க்கக் கழுதையின் மேலேறிச் சென்றாள். போகிற வழியில் எங்கும் நிற்க வேண்டா மென்று தன்னோடு வரும் வேலைக்காரனுக்குக் கட்டளையிட்டாள். தூரத்தில் வருகிற சூனேமியாளைப் பார்த்த எலிசா கேயாசியிடம் சூனேமியாள் வந்து கொண்டிருக்கிறாள். நீ அவளுக்கு எதிராகப் போய் அவளும், கணவனும், மகனும் சுகமாயிருக்கிறார்களா என்று கேள் என்றான். கேயாசி எலிசா சொன்னபடி ஓடிப்போய் அவளிடம் கேட்டான். அவளோ அவனிடம் எதுவும் கூறாமல் தன்னுடைய தாங்க முடியாத துக்கத்தை அடக்கி சுகந்தான் என்று கூறி விட்டு எலிசாவிடம் சென்றாள். முதலில் தனக்குப் பிள்ளையில்லை என்ற குறையைச் சொல்லவில்லை. இப்பொழுதும் தன்னுடைய துக்கத்தைச் சொல்லவில்லை. அவளுடைய விசுவாசம் தன்னுடைய போராட்டம், தேவனு டைய மனுஷனோடும், தேவனோடும்தான். என்ற உறுதியோடிருந்தாள். நாமும் நம்முடைய பிரச்சனைகளை மற்றவர்களிடம் கூறவேண்டாம். சூனேமியாள் எலிசாவின் காலைப் பிடித்துக் கொண்டு கதறினாள். யாக்கோபு யாப்போக்கு ஆற்றங்கரையில் விடாப்பிடியாகக் கர்த்தரோடு போராடி ஆசீர்வாதத்தைப் பெற்றுக் கொண்டதைப்போல, சூனேமியாள் விடாப்பிடியாக எலிசாவைத் தன்னோடு வர வேண்டுமென்கிறாள். அப்பொழுது கேயாசி அவளைத் தடுக்க ஓடிச் சென்றான். தேவனுடைய மனுஷனான எலிசாவோ கேயாசியிடம் தடுக்காதே என்று கூறி அவளுடைய ஆத்துமா மிகவும் துக்கமாக இருப்பதாகத் தெரிகிறது, கர்த்தர் இந்தக் காரியத்தைத் தனக்கு மறைத்து விட்டார் என்றான். கர்த்தர் இந்தச் செய்தியை எலிசாவிடம் வெளிப்படுத்தியிருந்தால் எலிசா அவளுடைய வீட்டிற்கே சென்றிருப்பான். சூனேமியாளின் விசுவாசத்தை வெளிப்படுத்தவும், எலிசாவின் மூலம் ஒரு அற்புதம் அங்கு நடக்கவும் கர்த்தர் இந்த சம்பவத்தை எலிசாவுக்கு மறைத்தார். 

எலிசா கேயாசிக்குக் கொடுத்த கட்டளை:

2 இராஜாக்கள் 4 : 28 – 30 “அப்பொழுது அவள், நான் என் ஆண்டவனிடத்தில் ஒரு குமாரனை வேண்டும் என்று கேட்டதுண்டா? எனக்கு அபத்தம் சொல்லவேண்டாம் என்று நான் சொல்லவில்லையா என்றாள்.”

“”அப்பொழுது அவன் கேயாசியைப் பார்த்து: நீ உன் இடையைக் கட்டிக்கொண்டு, என் தடியை உன் கையில் பிடித்துக்கொண்டு, வழியில் ஒருவனைச் சந்தித்தாலும் அவனை வினவாமலும், உன்னை ஒருவன் வினவினாலும் அவனுக்கு மறுமொழி சொல்லாமலும் போய்; என் தடியை அந்தப் பிள்ளையின் முகத்தின்மேல் வை என்றான்.”

“பிள்ளையின் தாயோ: நான் உம்மை விடுகிறதில்லை என்று கர்த்தரின் ஜீவனையும் உம்முடைய ஜீவனையும் கொண்டு சொல்லுகிறேன் என்றாள்; அப்பொழுது அவன் எழுந்திருந்து அவள் பின்னே போனான்.”

சூனேமியாள் எலிசாவைப் பார்த்து “தாங்கள் குழந்தை தனக்குப் பிறக்கும் என்று கூறினபோதுகூட அபத்தம் சொல்ல வேண்டாமென்று தானே கூறினேன். தாங்களாகத்தானே இந்த ஆசியைக் கொடுத்தீர்” என்றாள். அதனால் எலிசா இதற்கு ஏதாவது செய்ய வேண்டுமென்ற நினைப்பில் இவ்வாறு கூறுகிறாள். எலிசா செத்தவர்கள் யாரையும் உயிரோடெழுப்பியதை சூனேமியாள் பார்க்கவில்லை. கர்த்தர் கேட்டதையும் கொடுப்பார், கேட்காத தையும் கொடுப்பார். சாலமோன் ஞானத்தை மட்டும் கேட்டான். அவன் ஐசுவரி யத்தைக் கேட்கலை. ஆனால் அவன் கேட்காத ஐசுவரியத்தையும் கர்த்தர் கொடுத்தார். மோசேயின் கையில் கோல் இருந்ததைப் போல எலிசாவும் கோல் வைத்திருந்தான். எலிசா தன்னுடைய கோலை கேயாசியிடம் கொடுத்து சூனேமியாள் வீட்டுக்குப் போ என்றும், போகும் வழியில் யாராவது ஏதாவது கேட்டால் அதற்கு எந்தப் பதிலும் சொல்லாமல், . அங்கு போய் அந்தக் கோலை இறந்துபோன பிள்ளையின் மேல் வை என்றான். கேயாசி உடனே சந்தோஷத்தில் சென்றிருப்பான். அந்தப் பிள்ளை பிழைத்தால் தனக்கு பெயர் கிடைக்குமென்று நினைத்திருப்பான். கேயாசி போனாலும் சூனேமியாள் எலிசாவை விடாமல் பற்றிக் கொண்டு தாங்கள்தான் வரவேண்டுமென்று கர்த்தருடைய ஜீவனையும் எலிசாவின் ஜீவனையும் கொண்டு சொல்வதாகக் கூறினாள். யாக்கோபு யாப்போக்கு ஆற்றங்கரையில் கர்த்தர் ஆசீர்வதித்தா லொழிய போகவிடேன் என்று கூறியதைப் போல, ரூத் நகோமிடன் வருவேன் என்று விடாப்பிடியாகக் கூறி பெத்லகேமுக்குச் சென்றதைப் போல, சூனேமி யாளும் யார் மூலம் கர்த்தர் தனக்குப் பிள்ளையைக் கொடுத்தாரோ அவரே அங்கு வர வேண்டுமென்று நினைக்கிறாள். 

எலிசா செய்த செயல்:

2 இராஜாக்கள் 4 : 31 – 34 “கேயாசி அவர்களுக்கு முன்னே போய், அந்தத் தடியைப் பிள்ளையின் முகத்தின்மேல் வைத்தான்; ஆனாலும் சத்தமும் இல்லை, உணர்ச்சியும் இல்லை; ஆகையால் அவன் திரும்பி அவனுக்கு எதிர்கொண்டுவந்து: பிள்ளை விழிக்கவில்லை என்று அவனுக்கு அறிவித்தான்.”

“எலிசா வீட்டிற்குள் வந்தபோது, இதோ, அந்தப் பிள்ளை அவன் கட்டிலின்மேல் செத்துக்கிடந்தான்.”

“உள்ளே போய்த் தங்கள் இருவருக்கும் பின்னாக அவன் கதவைப் பூட்டி, கர்த்தரை நோக்கி வேண்டுதல் செய்து,”

கிட்டேபோய், தன் வாய் பிள்ளையின் வாயின்மேலும், தன் கண்கள் அவன் கண்களின்மேலும், தன் உள்ளங்கைகள் அவன் உள்ளங்கைகளின்மேலும் படும்படியாக அவன்மேல் குப்புறப் படுத்துக் கொண்டான்; அப்பொழுது பிள்ளையின் உடல் அனல் கொண்டது.”

எலிசா சொன்னபடி கேயாசி சூனேமியாளின் வீட்டுக்குப் போய் எலிசா கொடுத்த கோலை பிள்ளையின் முகத்தின் மேல் வைத்தான். ஆனால் பிள்ளையிடமிருந்து எந்த சத்தமும் வரவில்லை. கேயாசியின் மூலம் அந்த அற்புதம் நடைபெறாததற்குக் காரணம் அவன் இருதயத்திலிருந்த பொருளாசை. எனவே கேயாசி எலிசாவிடம் திரும்பி வந்து பிள்ளையிடம் எந்த உணர்வும் வரவில்லையென்றான். இந்த அற்புதத்தைச் செய்யக் கர்த்தர் கேயாசியை அழைக்கவில்லை. எலிசாவுக்குத்தான் அந்த அழைப்பு. எலிசா அவளுடைய வீட்டில் தனக்குக் கொடுக்கப்பட்ட அறைக்குச் சென்று தனக்குக் கொடுக்கப்பட்ட அந்தக் கட்டிலில் பிள்ளை செத்துக் கிடந்ததைப் பார்த்தான். எனவே கதவைப் பூட்டி கர்த்தரை நோக்கி ஜெபித்தான். “கர்த்தாவே நீங்கதானே இந்தப் பிள்ளையைக் கொடுத்தீர். இப்பொழுது அவளுக்கு நான் என்ன உத்தரவு சொல்வேன் என்று புலம்பியிருப்பான்.” அதன்பின் பிள்ளையின் கிட்டப்போய் தன்னுடைய வாயும், தன்னுடைய கண்களும், தன்னுடைய உள்ளங்கையும் பிள்ளையின் வாயின் மேலும், கண்ணின் மேலும் உள்ளங்கையின் மேலும் படும்படியாக பிள்ளையின் மேல் குப்புறப் படுத்தான். அந்தப்பிள்ளையின் மேல் வயதான எலிசா படுத்ததைப் பார்க்கிறோம். அப்பொழுது பிள்ளையின் உடலில் சூடு உண்டாயிற்று. 

நடந்த அற்புதம்:

2 இராஜாக்கள் 4 : 35 – 37 “அவன் எழுந்து, அறைவீட்டில் இங்கும் அங்கும் உலாவி, திரும்பக் கிட்டப் போய் அவன்மேல் குப்புறப்படுத்தான்; அப்பொழுது அந்தப் பிள்ளை ஏழுதரம் தும்மித் தன் கண்களைத் திறந்தான்.”

“அப்பொழுது அவன்: கேயாசியைக் கூப்பிட்டு, அந்தச் சூனேமியாளை அழைத்துக்கொண்டுவா என்றான்; அவளை அழைத்துக்கொண்டுவந்தான்; அவள் அவனிடத்தில் வந்தபோது ; அவன், உன் குமாரனை எடுத்துக்கொண்டு போ என்றான்.”

“அப்பொழுது அவள் உள்ளே போய், அவன் பாதத்திலே விழுந்து, தரைமட்டும் பணிந்து, தன் குமாரனை எடுத்துக் கொண்டு வெளியே போனாள்.”

எலிசா திரும்பப் பிள்ளையின் மேலிருந்து எழும்பி அறையில் இங்கும், அங்கும் உலாவி திரும்பவும் அதேபோல் பிள்ளையின் மேல் படுத்தான். மரித்த பிள்ளையின் உடலில் தன் ஜீவனையும் ஒன்றாக்கி அனல் கொள்ளச் செய்தபோது, சிறுவன் ஏழுமுறை தும்மி உயிர் பிழைத்தான். எலிசா தனது ஆன்மீகத் தலைவனான எலியாவைப்போல தேவனிடம் போராடி அக்குழந் தையைத் திரும்பவும் உயிர் பெறச் செய்தான். அப்பொழுது எலிசா வெளியே வந்து கேயாசியைக் கூப்பிட்டு சூனேமியாளை அழைத்துக் கொண்டு வரச் சொன்னான். கேயாசியும் அவளை அழைத்துக் கொண்டு வந்தான். எலிசா அவளிடம் உன் குமாரன் பிழைத்து விட்டான் என்று கூறாமலே பிள்ளையை எடுத்துக் கொண்டுபோ என்றான். அப்பொழுது அவள் தன்னுடைய மரித்த பிள்ளை உயிர் பெற்றெழுந்ததைப் பார்த்து மிகுந்த சந்தோஷத்தில் எலிசாவின் பாதத்தில் விழுந்து தரைமட்டும் பணிந்து வணங்கினாள். சந்தோஷத்துடன் பிள்ளையை அழைத்துக் கொண்டு போனாள். 

இதேபோல் நாம் பாவங்களில் மரித்துப் போயிருக்கிறோம். இயேசுவோடு தனிப்பட்ட விதத்தில் நாம் ஐக்கியம் கொள்ளும்போது நாம் உயிர்ப்பிக் கப்படுகிறோம். நமக்குள் இருக்கும் விசுவாசம் செத்துக் கிடக்கிற ஆசீர்வா தத்தை எழும்பப் பண்ணும். உலர்ந்த கோலைத் துளிர்க்கப் பண்ணியவர், உலர்ந்துபோன எலும்புகளை உயிரடைய பண்ணியவர், நமது தடைபட்டு நிற்கிற ஆசிகளைத் தர வல்லார் கர்த்தராகிய இயேசு ஒருவரே. நம்முடைய பணம், சுகம், சமாதானம், ஊழிய வளர்ச்சி ஆகியவைகளை இழந்து போகும் போது சூனேமியாளை நினைக்க வேண்டும். சூனேமியாளின் தேவன்தான் நம் தேவன் நமக்கும் ஆசியளிப்பார். கர்த்தராகிய இயேசுவே நமது வாழ்வாக இருக்கிறார். எலிசாவின் ஊழியம்: செத்துப் போன சிறுவனை கர்த்தரின் வல்லமையினால் எலிசா உயிரோடு எழுப்பினார். இவ்வித அற்புதம் இதற்கு முன் எலியாவின் மூலம் 1 இராஜாக்கள் 17 : 17 – 24 ல் நடந்தது. சூனேமியாளின் வாழ்க்கை அற்புதத்தில் ஆரம்பித்து அற்புதத்தில் முடிகிறது. இன்றும் கர்த்தர் தன்னை விசுவாசித்து தன்னைச் சார்ந்து ஊழியம் செய்கிறவர்கள் மூலம் அற்புதம் செய்வதற்கு ஆயத்தமாயிருக்கிறார். 

வேதத்தில் எலியா பழைய ஏற்பாட்டில் சாறிபாத் விதவையின் மகனை உயிரோடெழுப்பினார். எலிசா சூனேமியாளின் மகனையும், அவர் மரித்தபின் அவருடைய சடலத்தில் போட்டபோது ஒருவனும் உயிரோடெழுப்பப்பட்டனர். புதிய ஏற்பாட்டில் இயேசு ஒரு சிறு பெண்ணையும் (மாற்கு 5 : 41, 42), ஒரு வாலிபனையும் (லூக்கா 7 : 14, 15), லாசருவையும் (யோவான் 11 : 43, 44) உயிரோடெழுப்பினார். அப்போஸ்தலர் 9 : 40 ல் பேதுரு தொற்காளை உயிரோடெ ழுப்பினார். பவுல் அப்போஸ்தலர் 20 : 10 ல் ஐந்திகு என்ற வாலிபனை உயிரோடெழுப்பினார். இரட்சகராகிய இயேசுவும் உயிரோடெ ழுந்து இன்றும் உயிரோடி ருக்கிறார். சூனேமியாளின் வாழ்க்கையில் இரண்டு அற்புதம் நடந்தது. முதலாவது அவளுக்கும் வயதான அவளுடைய கணவனு க்கும் குழந்தை பாக்கியத்தைக் கொடுத்தார். இரண்டாவதாக செத்துப்போன அவளுடைய மகனை உயிரோடெழுப்பினார். நம்முடைய வாழ்க்கையிலும் அநேக காரியங்கள் செத்துப்போய்க் கிடக்கிறது. அவைகளை உயிரொழுப்பக் கர்த்தரிடம் மன்றாடுவோம். ஆமென்.

Related Posts