Menu Close

மல்கியா புத்தகத்தின் விளக்கம்

இப்புத்தகத்தை ஆக்கியோன் குறித்து

  • மல்கியா என்ற பெயருக்கு “எனது செய்தியாளன்” என்று பொருள்.
  • மல்கியா குறித்ததோ அல்லது அவனது வம்சாவளி குறித்தோ எந்த வரலாற்று ஆவணங்களும் இல்லை.
  • அவனது பெயரின் அர்த்தத்தின்படியே தேவன் அவனுக்கு கொடுத்த செய்தியை தெரிவிக்கிறவனாயிருந்தான்.
  • பாபிலோனிலிருந்து எருசலேமிற்கு திரும்பிய நூறு ஆண்டுகளுக்கு பின்பு அவன் தீர்க்கதரிசனம் உரைத்தான்.
  • மல்கியாவின் புத்தகம் 400 ஆண்டுகால தீர்க்கதரிசன மௌனிப்பிற்கு முன்னுரையாக இருக்கிறது. இந்த மௌனம் யோவான் ஸநானகனால் இறுதியாக நீக்கப்படுகிறது.

கர்த்தர் 400 ஆண்டுகால அமைதியை காப்பதற்கு முன்பதாக, எப்படி மறுபடியும் இந்த சத்தம் தொனிக்கும் என்பதை மல்கியா மூலமாக தீர்க்கதரிசனமாய் உரைத்தபின்புதான் அமைதி காத்தார். இதை கீழ்க்காண்கிற வசனத்தில் வாசிக்கலாம்.

மலகியா 3:1
இதோ, நான் என் தூதனை அனுப்புகிறேன், அவன் எனக்கு முன்பாகப் போய், வழியை ஆயத்தம்பண்ணுவான்; அப்பொழுது நீங்கள் தேடுகிற ஆண்டவரும் நீங்கள் விரும்புகிற உடன்படிக்கையின் தூதனுமானவர் தம்முடைய ஆலயத்துக்குத் தீவிரமாய் வருவார்; இதோ, வருகிறார் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.

மல்கியா குறித்து ஒரு பார்வை

  • யூதா ஜனங்கள் வாக்குப்பண்ணப்பட்ட நிலப்பரப்பிலிருந்து கி.மு. 605ல் நாடுகடத்த ப்பட்டு எழுவது ஆண்டுகளுக்குபின் நாட்டிற்கு திரும்பத் தொடங்கினார்கள்.
  • மல்கியாவின் காலத்தில் அவர்கள் நாட்டிற்கு திரும்பி 100 ஆண்டுகள் ஆகியிருந்தது.
  • எருசலேம் நகரமும், இரண்டாம் ஆலயமும் கட்டப்பட்டிருந்தாலும் ஜனங்கள் உற்சாகத்தை இழந்திருந்தார்கள்.
  • இது பரவலாக ஆசாரியர்கள் மத்தியில் ஊழலையும், ஜனங்கள் மத்தில் ஆவிக்குரிய சோர்வுநிலையையும் தோற்றுவித்திருந்தது.
  • ஜனங்களும், அசாரியர்களும் பலிபீடத்தில் அசுத்தமான அப்பத்தை படைக்கும் அளவிற்கு பின்வாங்கிப்போயிருந்தார்கள்.(1:7)
  • தசமபாகத்தை செலுத்துவதில் நிர்விசாரிகளாயிருந்தார்கள் (3:8)
  • அவர்களது இருதயங்கள் கர்த்தரோடு இராததால். அவர்களது குடும்பங்களும் கர்த்தரோடு இருக்கவில்லை.
  • தேவன் தங்களை நேசிக்கிறார் என்று ஜனங்கள் நம்புவதற்கு தயங்கிய காலகட்டத்திலேதான் மல்கியா ஊழியத்திற்கு வருகிறான்.(1:2)
  • ஜனங்கள் தங்கள் துரதிர்ஷடமான சூழ்நிலைகளை பார்த்தார்களேயன்றி அதற்கு காரணமான அவர்களது பாவநிலையை பார்க்க மறுத்தார்கள்.
  • மல்கியா தேவனாகிய கர்த்தரை, பிள்ளைகள் மேல் அன்பு செலுத்தி, அதற்கு பதிலாக அன்பை பெறாத தகப்பனாக சித்தரிக்கிறார்.
  • கர்த்தருக்கு உண்மையான ஆராதனையை செலுத்தாததற்காக மல்கியா ஜனங்களை கடிந்துகொள்ளுகிறார் (1:6)
  • கேள்வி – பதில் என்ற அமைப்பில் கீழ்க்காணும் பிரச்சினைகளை மல்கியா முன்வைக்கிறார். இந்தப் புத்தகத்தில் 23 கேள்விகள் இருக்கின்றன.
  • மாய்மாலம் – விசுவாசமின்மை – கலப்பு திருமணங்கள் – விவாகரத்துக்கள் – தவறான வழிபாடுகள் – அகந்தை
  • மல்கியா ஜனங்களை மனந்திரும்பும்படி அழைத்தான் (3:7)

மல்கியா புத்தகத்தின் முக்கிய பகுதிகள்

  1. இஸ்ரவேலின் மேல் கர்த்தரின் மனதுருக்கம் 1:1-5
    1. அவரது மனதுருக்கம் அறிவிக்கப்படுதல் 1:1-2
    2. அவரது மனதுருக்கத்தை சந்தேகித்தல் 1:1-2
    3. அவரது மனதுருக்கம் வெளிப்படுத்தபடுதல் 1:3-5
  2. இஸ்ரவேல் குறித்த கர்த்தரின் குற்றச்சாட்டு 1:6-3:15
    1. ஏமாற்றுதல் 1:6-14
    2. உண்மையில்லை 2:1-9
    3. அவிக்குரிய கலப்பு திருமணங்கள் 2:10-12
    4. விவாகரத்து 2:13-16
    5. விசுவாசக்குறைவு, அகங்காரம் 2:17
    6. இடைவேளை: யோவான் ஸ்நானனின் வருகை 3:1-6
    7. கொள்ளை 3:7-12
    8. ஆணவம் 3:13-15
  3. தேவன் ஜனங்களை கடிந்து கொள்ளுதல் 3:16-4:6
    1. தேவனற்ற ஜனங்கள் 3:16-18
    2. தேவனுடைய தீர்ப்பின் வடிவம் 4:1-6

இந்த மல்கியா புத்தகத்தின் கண்ணோட்டம் / விளக்கம், ACA Avadi சபையின் போதகர் திரு. Gabriel Thomasraj அவர்களின் PDF பதிவிலிருந்து எடுக்கப்பட்டது. Pastor. Gabriel Thomasraj அவர்களுக்காக கர்த்தரை ஸ்தோத்தரிக்கிறோம்.

Related Posts