1. தாவீதின் ஜெபம்: சங் 119:18 “உமது வேதத்திலுள்ள அதிசயங்களை நான் பார்க்கும்படிக்கு, என் கண்களைத் திறந்தருளும்.”
2. தாவீதின் ஆகாரம்: சங் 119:103 “உம்முடைய வார்த்தைகள் என் நாவுக்கு எவ்வளவு இனிமையானவைகள்; என் வாய்க்கு அவைகள் தேனிலும் மதுரமாயிருக்கும்.”
3. தாவீதின் பாதைக்கு வெளிச்சம்: சங் 119:105 “உம்முடைய வசனம் என் கால்களுக்குத் தீபமும், என் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது.”
4. தாவீதின் உள்ளத்தில் மகிழ்ச்சி:
• சங் 119:70 “ நானோ, உம்முடைய வேதத்தில் மனமகிழ்ச்சியாயிருக்கிறேன்.”
• சங் 119:162 “மிகுந்த கொள்ளையுடைமையைக் கண்டுபிடிக்கிறவன் மகிழுகிறது போல, நான் உமது வார்த்தையின் பேரில் மகிழுகிறேன்.”
• சங் 119:174 “உம்முடைய வேதம் என் மனமகிழ்ச்சி.”
5. தாவீதின் துக்கத்தின் ஆறுதல்:
• சங் 119:77 “நான் பிழைத்திருக்கும்படிக்கு உமது இரக்கங்கள் எனக்குக் கிடைப்பதாக.”
• சங் 119:92 “உமது வேதம் என் மனமகிழ்ச்சியாயிராதிருந்தால், என் துக்கத்திலே அழிந்து போயிருப்பேன்.”
6. தாவீதின் தியானம்: சங் 119:97 “உமது வேதத்தில் நான் எவ்வளவு பிரியமாயிருக்கிறேன்! நாள்முழுதும் அது என் தியானம்.”
7. தாவீதின் கண்ணீருக்குக் காரணம்:
• சங் 119:53 “உமது வேதத்தை விட்டு விலகுகிற துன்மார்க்கர் நிமித்தம் நடுக்கம் என்னைப் பிடித்தது.”
• சங் 119:136 “உம்முடைய வேதத்தை மனுஷர் காத்து நடவாதபடியால், என் கண்களிலிருந்து நீர்த்தாரைகள் ஓடுகிறது.”
• சங் 119:139 “என் சத்துருக்கள் உம்முடைய வசனங்களை மறந்தபடியால், என் பக்திவைராக்கியம் என்னை பட்சிக்கிறது.”
8. தாவீதின் தீர்மானம்:
• சங் 119:44 “நான் எப்பொழுதும் என்றைக்கும் உமது வேதத்தைக் காத்துக் கொள்ளுவேன்.”
• சங் 119:112 “முடிவுபரியந்தம் இடைவிடாமல் உம்முடைய பிரமாணங்களின்படி செய்ய என் இருதயத்தைச் சாய்த்தேன்.”
9. தாவீதின் கீதம்: சங் 119:54 “நான் பரதேசியாய்த் தங்கும் வீட்டிலே உமது பிரமாணங்கள் எனக்குக் கீதங்களாயின.”
10. தாவீதின் சம்பத்து: சங் 119:72 “அநேகமாயிரம் பொன் வெள்ளியைப் பார்க்கிலும், நீர் விளம்பின வேதமே எனக்கு நலம்.”
11. தாவீதின் வெற்றியின் இரகசியம்: சங் 119:11 “நான் உமக்கு விரோதமாய்ப் பாவம் செய்யாதபடிக்கு, உமது வாக்கை என் இருதயத்தில் வைத்து வைத்தேன்.”
12. தாவீதின் சாட்சி:
• சங் 119:6 “நான் – வெட்கப்பட்டுப் போவதில்லை.”
• சங் 119:7 “நான் – செம்மையான இருதயத்தால் உம்மைத் துதிப்பேன்.”
• சங் 119:14 “நான் உமது சாட்சிகளின் வழியில் களிகூறுகிறேன்.”
சங் 119:17 “உமது வசனத்தைக் கைக்கொள்ளுவேன்.”
• சங் 119:16 “உமது வசனத்தை மறவேன்.”
• சங் 119:32 “நான் உமது கற்பனைகளின் வழியாக ஓடுவேன்.”
• சங் 119:22 “நான் உம்முடைய சாட்சிகளைக் கைக்கொள்ளுவேன்.”
• சங் 119:45 “நான் விசாலத்திலே நடப்பேன்.”
• சங் 119:46 “நான் உம்முடைய சாட்சிகளைக் குறித்து, ராஜாக்களுக்கு முன்பாக வெட்கப்படாமல் பேசுவேன்.”
• சங் 119:48 “உமது பிரமாணங்களைத் தியானிப்பேன்.”
• சங் 119:51 “நான் உமது வேதத்தை விட்டு விலகினதில்லை.”
• சங் 119:55 “இராக்காலத்தில் உமது நாமத்தை நினைத்து, உமது வேதத்தைக் கைக்கொள்ளுகிறேன்.”
• சங் 119:83 “உமது பிரமாணங்களையோ மறவேன்.”
• சங் 119:94 “நான் உம்முடைய கட்டளைகளை ஆராய்கிறேன்.”
• சங் 119:95 “நான் உமது சாட்சிகளை சிந்தித்துக் கொண்டிருக்கிறேன்.”
• சங் 119:102 “நான் உம்முடைய நியாயங்களை விட்டு விலகேன்.”
• சங் 119:115 “என் தேவனுடைய கற்பனைகளை நான் கைக்கொள்ளுவேன்.”
• சங் 119:117 “நான் எக்காலமும் உம்முடைய பிரமாணங்களின் பேரில் நோக்கமாயிருப்பேன்.”
• சங் 119:127 “நான் பொன்னிலும் பசும்பொன்னிலும் அதிகமாய் உமது கற்பனைகளில் பிரியப்படுகிறேன்.”
• சங் 119:130 “உம்முடைய வசனத்தின் பிரசித்தம் வெளிச்சம் தந்து, பேதைகளை உணர்வுள்ளவர்களாக்கும்.”
• சங் 119:134 “நான் உம்முடைய கட்டளைகளைக் காத்துக்கொள்ளுவேன்.”
• சங் 119:141 “உமது கட்டளைகளை மறவேன்.”
• சங் 119:142 “உம்முடைய வேதம் சத்தியம்.”
• சங் 119:146 “நான் உம்முடைய சாட்சிகளைக் காத்துக்கொள்ளுவேன்.”
• சங் 119:148 “உமது வசனத்தைத் தியானிக்கும்படி, குறித்த ஜாமங்களுக்கு முன்னே என் கண்கள் விழித்துக் கொள்ளும்.”
• சங் 119:153 “உமது வேதத்தை மறவேன்.”
• சங் 119:165 “உம்முடைய வேதத்தை நேசிக்கிறவர்களுக்கு மிகுந்த சமாதானமுண்டு; அவர்களுக்கு இடறலலில்லை.”
• சங் 119:176 “உமது கற்பனைகளை நான் மறவேன்.”