Menu Close

1 யோவானிலுள்ள முரண்தொடைகள்

1. ஒளியும் இருளும்: 1யோ 1: 5 “தேவன் ஒளியாயிருக்கிறார், அவரில் எவ்வளவேனும் இருளில்லை;”
2. புதிய கற்பனை, பழைய கற்பனை: 1யோ 2:7,8 “நான் உங்களுக்குப் புதிய கற்பனையை அல்ல, ஆதிமுதல் நீங்கள் பெற்றிருக்கிற பழைய கற்பனையையே எழுதுகிறேன்; அந்தப் பழைய கற்பனை நீங்கள் ஆதிமுதல் கேட்டிருக்கிற வசனந்தானே.”
“மேலும், நான் புதிய கற்பனையையும் உங்களுக்கு எழுதுகிறேன், இது அவருக்குள்ளும் உங்களுக்குள்ளும் மெய்யாயிருக்கிறது; ஏனென்றால், இருள் நீங்கிப்போகிறது, மெய்யான ஒளி இப்பொழுது பிரகாசிக்கிறது.”
3. உலகில் அன்பு கூறுதல், தேவனில் அன்பு கூறுதல்: 1யோ 2:15, 16 “உலகத்திலும் உலகத்திலுள்ளவைகளிலும் அன்பு கூறாதிருங்கள்; ஒருவன் உலகத்தில் அன்பு கூர்ந்தால் அவனிடத்தில் பிதாவின் அன்பு இல்லை.”
“ஏனெனில், மாம்சத்தின் இச்சையும், கண்களின் இச்சையும், ஜீவனத்தின் பெருமையுமாகிய உலகத்திலுள்ளவைகளெல்லாம் பிதாவினால் உண்டானவைகளல்ல, அவைகள் உலகத்தினாலுண்டானவைகள்.”
4. கிறிஸ்து, அந்திகிறிஸ்து: 1யோ 2:22 “இயேசுவைக் கிறிஸ்து அல்ல என்று மறுதலிக்கிறவனேயல்லாமல் வேறே யார் பொய்யன்? பிதாவையும் குமாரனையும் மறுதலிக்கிறவனே அந்திகிறிஸ்து.”
5. சத்தியம், பொய்: 1யோ 2: 21 “நீங்கள் சத்தியத்தை அறியாததினானல்ல, நீங்கள் சத்தியத்தை அறிந்திருக்கிறதினாலும், சத்தியத்தினால் ஒரு பொய்யுமுண்டாயிரா தென்பதை நீங்கள் அறிந்திருக்கிறதினாலும் உங்களுக்கு எழுதியிருக்கிறேன்.”
6. தேவனுடைய பிள்ளைகள், பிசாசின் பிள்ளைகள்: 1யோ 3:9, 10 “தேவனால் பிறந்த எவனும் பாவஞ் செய்யான், ஏனெனில் அவருடைய வித்து அவனுக்குள் தரித்திருக்கிறது; அவன் தேவனால் பிறந்தபடியினால் பாவஞ் செய்யமாட்டான்.”
“இதினாலே தேவனுடைய பிள்ளைகள் இன்னாரென்றும், பிசாசின் பிள்ளைகள் இன்னாரென்றும் வெளிப்படும்; நீதியைச் செய்யாமலும் தன் சகோதரனில் அன்பு கூறாமலும் இருக்கிற எவனும் தேவனால் உண்டானவல்ல.”
7. நித்திய ஜீவன், நித்திய மரணம்: 1யோ 3:14 “நாம் சகோதரரிடத்தில் அன்புகூறுகிறபடியால், மரணத்தை விட்டு நீங்கி ஜீவனுக்குட்பட்டிருக்கிறோமென்று அறிந்திருக்கிறோம்; சகோதரனிடத்தில் அன்பு கூறாதவன் மரணத்திலே நிலைகொண்டிருக்கிறான்.”
8. அன்பு, பகை: 1யோ 3:14, 15 “நாம் சகோதரரிடத்தில் அன்புகூறுகிறபடியால், மரணத்தைவிட்டு நீங்கி ஜீவனுக்குட்பட்டிருக்கிறோமென்று அறிந்திருக்கிறோம்;”
“தன் சகோதரனைப் பகைக்கிற எவனும் மனுஷ கொலைபாதகனாயிருக்கிறான்;”
9. உலகத்துக்குரியவர்கள், தேவனுக்குரியவர்கள்: 1யோ 4:5, 6 “அவர்கள் உலகத்துக்குரியவர்கள், ஆகையால் உலகத்துக்குரியவைகளைப் பேசுகிறார்கள், உலகமும் அவர்களுக்குச் செவிகொடுக்கும்.”
“நாங்கள் தேவனால் உண்டானவர்கள்; தேவனை அறிந்தவன் எங்களுக்குச் செவிகொடுக்கிறான்; தேவனால் உண்டாயிராதவன் எங்களுக்குச் செவி கொடுக்கிறதில்லை;”
10. சத்திய ஆவி, வஞ்சக ஆவி: 1யோ 4: 6 “நாங்கள் தேவனால் உண்டானவர்கள்; தேவனை அறிந்தவன் எங்களுக்குச் செவிகொடுக்கிறான்; தேவனால் உண்டாயிராதவன் எங்களுக்குச் செவி கொடுக்கிறதில்லை; இதினாலே சத்தியஆவி இன்னதென்றும், வஞ்சகஆவி இன்னதென்றும் அறிந்திருக்கிறோம்.”

Related Posts