Menu Close

கர்த்தருக்கு அருவருப்பானவைகள்

1. அந்நிய தேவர்களின் விக்கிரகங்கள் கர்த்தருக்கு அருவருப்பானவைகள் – உபாகமம் 7:25
2. பொய் உதடுகள் கர்த்தருக்கு அருவருப்பானவைகள் – நீதிமொழிகள் 12:22
3. துன்மார்க்கருடைய பலி கர்த்தருக்கு அருவருப்பானது – நீதிமொழிகள் 21:27
4. வேதத்தைக் கேளாதபடி தன் செவியை விலக்குகிறவனுடைய ஜெபமும் அருவருப்பானது – நீதிமொழிகள் 28:9
5. மனுஷருக்கு மேன்மையாக என்னப்படுவது தேவனுக்கு முன்பாக அருவருப்பாயிருக்கிறது – லூக்கா 16:15
6. வேசியின் பணமும், நாயின் கிரயமும் கர்த்தருக்கு அருவருப்பானவைகள் – உபாகமம் 23:18
7. துன்மார்க்கருடைய நினைவுகள் கர்த்தருக்கு அருவருப்பானவைகள் – நீதிமொழிகள் 15:26
8. கள்ளத்தராசு கர்த்தருக்கு அருவருப்பானது – நீதிமொழிகள் 11:1
9. பொய்யைக் கர்த்தர் அருவருக்கிறார் – சங்கீதம் 119:163
10. தூபங்காட்டுதல் கர்த்தருக்கு அருவருப்பானது – ஏசாயா 1:13
11. மேட்டிமையான கண், பொய் நாவு, குற்றமற்றவர்களுடைய இரத்தஞ்சிந்துங்கை, தூராலோசனையைப் பிணைக்கும் இருதயம், தீங்கு செய்வதற்கு விரைந்தோடுங்கால், அபத்தம் பேசும் பொய்சாட்சி, சகோதரர்களுக்குள்ளே விரோதத்தை உண்டுபண்ணுதல் ஆகியவைகள் கர்த்தருக்கு அருவருப்பானவைகள் – நீதிமொழிகள் 6:16 – 19
12. பழுதும், அவலட்சணமுமான பலி கர்த்தருக்கு அருவருப்பானது – உபாகமம் 17:1
13. துன்மார்க்கனுடைய வழி கர்த்தருக்கு அருவருப்பானது – நீதிமொழிகள் 15:9
14. அநியாயஞ்செய்வது ராஜாக்களுக்கு அருவருப்பு – நீதிமொழிகள் 16:12
15. வேசித்தனம் கர்த்தருக்கு அருவருப்பு – எரே 13:27

Related Posts