கர்த்தர் தாம் தெரிந்து கொள்ளுகிறவனை வெளிப்படுத்தி, ஜனங்கள் முறுமுறுப்பை ஒழிக்கும்படியாய் சித்தங் கொண்டார். கர்த்தர் மோசேயை நோக்கி, இஸ்ரவேல் வம்சத்தாரின் பிரபுக்களிடத்தில் வம்சத்தாருக்கு ஒரு கோலாக எடுத்து சாட்சிப் பெட்டிக்கு முன்பாக வைக்கச் சொன்னார். அப்பொழுது கர்த்தர் யாரைத் தெரிந்து கொள்ளுகிறாரோ அவனுடைய கோல் துளிர்க்கும் என்றார். மறுநாள் காலையில் ஆரோனின் கோல் துளிர் விட்டு பூப்பூத்து, வாதுமைப் பழங்களைக் கொடுத்தது. அந்த கோலை சாட்சி பெட்டிக்கு முன்னே வைத்தனர். இதிலிருந்து கர்த்தர் தாம் தெரிந்து கொண்ட பிள்ளைகளை கனப்படுத்தியதைக் காணலாம் – எண் 17:1-13.
Click here to join our “தேவ வார்த்தை” Whatsapp Group for updates
தினமும் ஒரு தேவ வார்த்தையை பெற “Whatsapp Group” இல் சேரவும்