1. மிருகங்களில் விரிகுளம்பில்லாதவைகளின் மாம்சத்தைப் புசிக்கலாகாது. ஒட்டகம், குழிமுசல், முயல், பன்றி இவைகளைப் புசிக்கலாகாது – லேவி 11:3-8
2. ஜலத்தில் வாழ்வதில் செதில்களும், சிறகுகளும் இல்லாதவைகளைப் புசிக்கக் கூடாது – லேவி 11:12
3. பறவைகளில் கழுகு, கருடன், கடலூராஞ்சி, பருந்து, சகலவித வல்லூறு, காகம், தீக்குருவி, கூகை, செம்புகம், சகலவித டேகை, ஆந்தை, நீர்க்காகம், கோட்டான், நாரை, கூழைக்கடா, குருகு, கொக்கு ராஜாளி, புழுக்கொத்தி வௌவால் ஆகியவற்றை சாப்பிடக்கூடாது – லேவி 11:13-19
4. தரையில் ஊரும் பிராணிகளில் பெருச்சாளி, எலி, ஆமை, உடும்பு, அழுங்கு, ஓணான், பல்லி, பச்சோந்தி இவைகள் கூடாது – லேவி 11:29, 30
5. யாதொன்றையும் இரத்தத்துடன் புசிக்க வேண்டாம் – லேவி 19:26