Menu Close

வேதத்தில் சிலர் கூறிய சில சாக்குபோக்குகள்

1. ஆதாம்: ஆதி 3:12 “என்னுடனே இருக்கும்படி தேவரீர் தந்த ஸ்திரீயானவள் அவ்விருட்சத்தின் கனியை எனக்குக் கொடுத்தாள், நான் புசித்தேன்” என்று சாக்குபோக்கு கூறினான்.
2. மோசே: மோசே கர்த்தரிடம் நான் வாக்குவல்லவன் அல்லவென்றும், திக்குவாயும், மந்தவாயும் உள்ளவன் என்றும், நீர் அனுப்பச் சித்தமாயிருக்கிற யாரையாகிலும் அனுப்பும். என்று சாக்குபோக்கு கூறினான். யாத் 4:10 – 13
3. எரெமியா: எரே 1:6 எரேமியா கர்த்தரிடம் “நான் பேச அறியேன்; சிறுபிள்ளையாயிருக்கிறேன்” என்று சாக்குபோக்கு கூறினான்.
4. ஆரோன்: ஜனங்களுடைய கட்டாயத்தினிமித்தம் இத்தப் பொன்னுடமைகளை அக்கினியில் போட்டேன். அதிலிருந்து இந்தக் கன்றுக்குட்டி வந்தது என்று கர்த்தரிடம் சாக்குப்போக்கு கூறினான் – யாத் 32:21 – 24, 1 – 6
5. சவுல்: ஜனங்கள் ஆடுமாடுகளில் நலமானவைகளை உம்முடைய தேவனாகிய கர்த்தருக்குப் பலியிடும்படி தப்ப வைத்திருக்கிறார்கள் என்று சவுல் சாமுவேல் தீர்க்கதரிசியிடம் கூறினான் – 1சாமு 15:15, 21, 22
6. கிதியோன்: தூதனிடம் மனாசேயில் என் குடும்பம் மிகவும் எளிது என்றும் என் தகப்பன் வீட்டில் நான் எல்லாரிலும் சிறியவன் என்று சாக்குபோக்கு கூறினான் – நியா 6:15, 16
7. சவுல்: சாமுவேல் தீர்க்கதரிசியிடம் இஸ்ரவேல் கோத்திரங்களிலே சிறிதான பென்யமீன் கோத்திரத்தில் உள்ள குடும்பங்களிலெல்லாம் என் குடும்பம் மிகவும் எளிது என்று சாக்குபோக்கு கூறினான் – 1சாமு 9:21
8. ஒபா: மோசேயின் மாமன் மகனான ஒபாவை மோசே அழைத்த போது “நான் வரக்கூடாது; என் தேசத்துக்கும் என் இனத்தாரிடத்துக்கும் போக வேண்டும் என்றார்,” – எண் 10:29 – 31
9. பர்சிலா: தாவீது ராஜா மக்னாயீமிலே தங்கியிருக்கு மட்டும் பர்சிலா என்பவன் ராஜாவை பராமரித்து வந்தான். ராஜா எருசலேமுக்குப் போகும்போது அவனை கூட அழைத்த போது அவன் “நான் என் ஊரிலே மரித்து, என் தாய்தகப்பன்மார் கல்லறையிலே அடக்கம் பண்ணும்படிக்குப் போகிறேன் என்றான்.” – 2சாமு 19:32 – 37

Related Posts