1. கர்த்தரின் பர்வதம்: ஈசாக்கைப் பலியிட கர்த்தர் குறிப்பிட்ட இடம் தான் கர்த்தரின் பர்வதம் என்றழைக்கப்படுகிறது. ஆபிரகாம் அந்த இடத்திற்கு யேகோவாயீரே என்று பெயரிட்டார். அந்த இடம் கர்த்தர் குறிப்பிட்ட மலை என்றும், மோரியா என்றும் அழைக்கப்படுகிறது. பிற்காலத்தில் தேவாலயம் அந்த இடத்தில் கட்டப்பட்டது -2நாளா 3:1
2. தேவபர்வதம்: கிறிஸ்து மறுரூபமான மலையை தேவபர்வதம் என்றழைக்கின்றனர். இயேசு தம்முடைய சீஷர்களில் மூன்றுபேரை மாத்திரம் தனியாக அழைத்துக் கொண்டு போய் ஜெபித்த போது இயேசுவின் முகம் சூரியனைப்போல பிரகாசித்ததைப் பார்க்கிறோம். அவருடைய வஸ்திரம் வெளிச்சத்தைப்போல வெண்மையாயிற்று – மத் 17:2 மூன்று சீஷர்களும் மோசேயும், எலியாவும் தேவனோடு பேசுவதைக் கண்டார்கள். மேகத்திலிருந்து வந்த சத்தத்தையும் அவர்கள் கேட்டார்கள் – மத் 17:3 – 5
3. பரிசுத்த பர்வதம்: சீயோன்மலை பரிசுத்த பர்வதம் என்றழைக்கப் படுகிறது. கர்த்தர் எல்லா வாசஸ்தலங்களைப் பார்க்கிலும் சீயோனைத் தமக்கென்று தெரிந்து கொண்டார் – சங் 2:6 ”என்னுடைய பரிசுத்த பர்வதமாகிய சீயோன்” என்று கூறப்பட்டிருப்பதைப் பார்க்கிறோம்.