யாக்கோபு யோசேப்பை ஆடு மேய்க்கப்போன அவனது சகோதரர்களை விசாரிக்க அனுப்பினான். அவன் சீகேமுக்கும், அங்கிருந்து தோத்தானுக்கும் சென்றான். அவனது சகோதரர்கள் அவன் மேல் பொறாமை கொண்டு அவனைக் கொலை செய்ய ஆலோசனை பண்ணி, ஒரு குழியிலே அவனைப் போட்டார்கள். பின்பு அவ்வழியாய்ப் போன இஸ்மவேலருக்கு இருபது வெள்ளிக் காசுக்கு அவனை விற்றுப் போட்டார்கள். யோசேப்பின் பலவருண அங்கியை ஆட்டுரத்தத்தில் தோய்த்து யாக்கோபுக்கு காண்பித்தார்கள். யாக்கோபு யோசேப்பை நினைத்து துக்கித்துக் கொண்டிருந்தான். ஆதி 37 :12-34