கர்த்தர் மோசேயை நோக்கி மோவாப் தேசத்திலுள்ள நேபோ மலையில் ஏற வைத்து, அங்கு நின்று கானான் தேசம் முழுவதையும் காண்பித்தார். பிஸ்கா கொடுமுடியில் நின்று பார்த்தார். ஆனால் மேரிபாவின் தண்ணீர் சம்பந்தமாக ஏற்பட்ட கர்த்தரின் கோபத்தினால் மோசே கானான் தேசத்தில் பிரவேசிக்கவில்லை. கர்த்தர் அவனை அங்கு பெத்பேயோருக்கு எதிரான பள்ளத்தாக்கிலே அடக்கம் பண்ணினார். இந்நாள் வரைக்கும் ஒருவனும் அவன் பிரேதக்குழியை அறியான் – உபா 34:1-6