Menu Close

மீட்பு பற்றி யோவேலில்

• யோவே 2:18, 19, 21 – 27 “கர்த்தர் தமது தேசத்துக்காக வைராக்கியங் கொண்டு, தமது ஜனத்தைக் கடாட்சிப்பார்.”
• “கர்த்தர் மறுமொழி கொடுத்து, தமது ஜனத்தை நோக்கி: இதோ, நான் உங்களை இனிப் புறஜாதிகளுகுள்ளே நிந்தையாக வைக்காமல், உங்களுக்குத் தானியத்தையும் திராட்சரசத்தையும் எண்ணையையும் கொடுத்தேன், நீங்கள் அதினால் திருப்தியாவீர்கள்.”
• “தேசமே, பயப்படாதே, மகிழ்ந்து களிகூறு: கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார்.”
• “வெளியின் மிருகங்களே பயப்படாதேயுங்கள்; வனாந்தரத்திலே மேய்ச்சல்கள் உண்டாகும்; விருட்சங்கள் காய்களைக் காய்க்கும்; அத்திமரமும் திராட்சச்செடியும் பலனைத் தரும்.”
• “சீயோன் குமாரரே, உங்கள் தேவனாகிய கர்த்தருக்குள் மகிழ்ந்து களிகூறுங்கள்; அவர் தக்கபடி உங்களுக்கு முன்மாரியைக் கொடுத்து, உங்களுக்கு முன்மாரியையும் பின்மாரியையும் ஏற்கெனவே வருஷிக்கப்பண்ணுவார்.”
• “களங்கள் தானியத்தினால் நிரம்பும்; ஆலைகளில் திராட்சரசமும் எண்ணையும் வழிந்தோடும்.”
• “நான் உங்களிடத்தில் அனுப்பிய பெரிய சேனைகளாகிய வெட்டுக்கிளிகளும், பச்சைக்கிளிகளும், முசுக்கட்டைப் பூச்சிகளும், பச்சைப் புழுக்களும் பட்சித்த வருஷங்களின் விளைவை உங்களுக்குத் திரும்ப அளிப்பேன்.”
• “நீங்கள் சம்பூரணமாய் சாப்பிட்டு, திருப்தியடைந்து, உங்களை அதிசயமாய் நடத்திவந்த உங்கள் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தைத் துதிப்பீர்கள்; என் ஜனங்கள் ஒருபோதும் வெட்கப்பட்டுப்போவதில்லை.”
• “நான் இஸ்ரவேலின் நடுவில் இருக்கிறவரென்றும், நானே உங்கள் தேவனாகிய கர்த்தர், வேறொருவர் இல்லை என்றும் அறிந்து கொள்வீர்கள்; என் ஜனங்கள் ஒரு போதும் வெட்கப்பட்டுப்போவதில்லை.”

Related Posts