Menu Close

மிஷினரிக்குத் தேவையான தகுதிகள்

1. மறுபடி பிறந்தவனாக இருக்க வேண்டும்.
2. தன்னைத்தான் வெறுத்து, சிலுவையை எடுத்துக் கொண்டு பின்பற்றுகிறவனாக இருக்க வேண்டும்.
3. புதிய சுற்றுவட்டாரத்துக்குள் செல்வதால் வாலிப வயது உகந்தது.
4. எந்த இடத்திலும் முக்கியமாக திறந்த வெளியிலும் கூட தைரியமாக சுவிசேஷத்தை அறிவிக்கிறவர்களாக இருக்க வேண்டும்.
5. எப்பொழுதும், எல்லாவற்றிலும் கடவுளை முன்குறிப்பவர்களாக இருக்க வேண்டும்.
6. ஒவ்வொரு நாளும் கர்த்தரிடம் உபதேசத்தையும், தாழ்மையையும் எப்படி செயல் படுத்துவது என்று கற்றுக்கொள்ள வேண்டும்.
7. தேவனுக்கும், மனிதனுக்கும் முன்பாக குற்றமற்ற மனசாட்சியுடையவனாக இருக்க வேண்டும்.
8. ஊழியர்களை உருவாக்குவதற்கும், சுவிசேஷத்தைப் பரப்புவதற்கும் ஏற்ற படிப்பறிவு உள்ளவர்களாக இருக்க வேண்டும்.
9. உண்மையுள்ளவர்களாக, நேர்மையுள்ளவர்களாக இருக்க வேண்டும்.
10. எந்த பிரச்சனைகளையும் சந்திக்கும் திறமையுள்ளவர்களாக இருக்க வேண்டும்.

Related Posts