1. புறஜாதியருக்கு நற்செய்தியை அறிவிக்க தேவன் பவுலை அழைத்தது போல, யூத சமுதாயத்தை சந்திக்க பேதுருவைத் தேவன் ஆயத்தப் படுத்தியிருக்கிறாரென்று பவுல் புரிந்து கொண்டான் – கலா 2:8
அதுபோலவே பவுலின் ஆழமான வேத உபதேசங்களை பேதுரு மெச்சினான் – 2பே 3:15, 16
2. இஸ்ரவேலின் தளபதியாகிய யோவாப் தன் சகோதரனாகிய அபிசாயியைப் பார்த்து, “சீரியர் என்னை மேற்கொள்வதாக இருந்தால், நீ எனக்கு உதவ வரவேண்டும். அம்மோனியர் உன்னை மேற்கொள்வதாக இருந்தால் நான் உதவ வருவேன்.” என்றான் – 2சாமு 10:10 – 12 ஒருவரது வலிமை மற்றவரது வலிமையின்மையில் உதவும். ஒருவரையொருவர் போட்டி போட்டு எதிரியாகிவிடக் கூடாது.