வெண்கலச் சங்கிலிகளால் கட்டி பாபிலோனுக்குக் கொண்டு சென்ற மனாசேயை கர்த்தர் திரும்ப எருசலேமுக்கு வரப் பண்ணினார். அதற்கு மனாசே செய்த நல்ல காரியங்கள் யாதெனில்:
1. கர்த்தருடைய ஆலயத்திலிருந்த அந்நிய தேவர்களின் விக்கிரகங்களை எடுத்துப் போட்டான் – 2நாளா 33:15
2. முன்பு கட்டியிருந்த எல்லாப் பலிபீடங்களையும் அகற்ற வைத்தான் – 2நாளா 33:15
3. கர்த்தருடைய பலிபீடத்தை செப்பனிட்டான் – 2நாளா 33:16
4. அங்கு ஸ்தோத்திரப்பலிகளையும், சமாதானப் பலிகளையும் செலுத்தினான் – 2நாளா 33:16
5. இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரைச் சேவிக்கவேண்டும் என்று யூதாவுக்குக் கட்டளையிட்டான் – 2நாளா 33:16