மக்னாயீம் என்றால் இரு சேனைகள் என்பது பொருள். யாக்கோபைக் கொலை செய்ய வேண்டுமென்று காலகாலமாக காத்திருக்கிற அவனுடைய தமையன் ஏசாவைச் சந்திக்க வேண்டிய இக்கட்டான சூழல். மிகுந்த பயத்துடன் அந்த சூழலை நெருங்கும் போது தான் தேவசேனை அவனை சந்திக்கிறது. யாக்கோபின் சேனைகளைச் சுற்றி தேவசேனையின் பாதுகாப்பு உண்டென்பதை உணர்ந்தான். சிக்கலான சூழ்நிலைகளில் நம்மைக் காக்கும்படி தேவதூதர் அனுப்பப்படுவர் – ஆதியாகமம் 32:2