பிலேயாம் பாலாக்கிடம் செல்வதை தேவன் விரும்பவில்லை. ஒரு தேவதூதன் உருவிய பட்டயத்தோடு வழியிலே நின்றான். பிலேயாம் ஏறிச்சென்ற கழுதை தூதனைக் கண்டு வழிவிலகிச் சென்றது. பிலேயாம் அதை அடித்தான். கழுதை மறுபடியும் விலகியது. இப்படி மூன்று தரம் அடித்தான். உடனே கர்த்தர் கழுதையின் வாயைத் திறந்தார். கழுதை பேசினது. அப்பொழுது பிலேயாமின் கண்களைக் கர்த்தர் திறந்தார் – எண் 22:22-41