1. ஆசாரியன் தலைப்பாகையை கூடாரத்திலிருக்கும்போது எடுக்கக் கூடாது – லேவி 10:6
2. ஆசாரியன் தன் வஸ்திரங்களைக் கிழிக்க கூடாது – லேவி 10:6, 21:10
3. ஆசாரியன் தன் வஸ்திரங்களை அழுக்காக்கவோ, கறைபடுத்தவோ, கிழிக்கவோ, பிரேதம் இருக்கும் இடத்தில் போய் தன்னைத் தீட்டுப்படுத்தவோ கூடாது – லேவி 21:10, 11 பிர 9:8
4. ஆசாரியன் கூடாரத்தை விட்டுப் புறப்பட்டுப் போகக் கூடாது – லேவி 10:7
5. ஆசாரியன் திராட்சரசமும் மதுவும் குடிக்கக்கூடாது – லேவி 10:9, 10 எசே 44:21
6. ஆசாரியன் புளிப்புள்ளதைப் புசிக்கக் கூடாது – லேவி 10:12, கலா 5: 9
7. ஆசாரியன் விதவையையோ, தள்ளப்பட்டவளையோ, வேசியையோ, கற்புக்குலைந்தவளையோ, விவாகம் பண்ணக் கூடாது. இஸ்ரவேலிலுள்ள கன்னியையே விவாகம் பண்ண வேண்டும் – லேவி 21:7 எசே 44:22