நாற்பது நாள் சென்றபின் நோவா பேழையிலிருந்த ஜன்னலைத் திறந்து ஒரு காகத்தை வெளியே விட்டான். அது போகிறதும் வருகிறதுமாயிருந்தது. அதன்பின் ஒரு புறாவை வெளியே விட்டான். புறா பேழைக்குள் திரும்பி வந்தது. ஏழு நாள் கழித்து மறுபடியும் புறாவை வெளியே விட்டான். அது ஒரு ஒலிவமரத்தின் இலையைக் கொண்டு வந்தது. பின்னும் ஏழு நாள் பொறுத்து புறாவை வெளியே விட்டான். அது திரும்ப வரவேயில்லை. நோவா பேழையின் மேல்தட்டை எடுத்துப் பார்த்து ஜலம் வற்றிப்போனதை அறிந்து தேவனின் கட்டளையின்படி நோவாவும், குடும்பமும், ஜீவஜந்துக்கள் யாவும் வெளியே வந்தன – ஆதி 8:6 – 18