1. மோசே செங்கடலைக் கடக்கும் போது கூறியது: யாத் 14:13”மோசே ஜனங்களை நோக்கி: பயப்படாதிருங்கள்; நீங்கள் நின்றுகொண்டு இன்றைக்குக் கர்த்தர் உங்களுக்குச் செய்யும் இரட்சிப்பைப் பாருங்கள்; இன்றைக்குக் நீங்கள் காண்கிற எகிப்தியரை இனி என்றைக்கும் காணமாட்டீர்கள்.”
2. யகாசியேல் என்னும் லேவியன் கூறியது: யகாசியேல் ஜனங்களிடமும் ராஜாவாகிய யோசாபாத்திடமும் அம்மோன் புத்திரரையும், மோவாபியரையும், சேயீர்மலை தேசத்தாரையும் கர்த்தர் உங்களுக்குத் தருவார் என்றார். 2 நாளா 20:17 “இந்த யுத்தத்தைப் பண்ணுகிறவர்கள் நீங்கள் அல்ல; யூதா மனுஷரே எருசலேம் ஜனங்களே, நீங்கள் தரித்து நின்று கர்த்தர் உங்களுக்குச் செய்யும் இரட்சிப்பைப் பாருங்கள்;”