1. பாகாலில் மீதியானவர்கள் – செப் 1:4
2. கெம்மரீம் பெயர் தாங்கிய ஆசாரியர்கள் – செப் 1:4
3. வானசேனையைப் பணிவோர் – செப் 1:5
4. கர்த்தர் பேரிலும் மல்காமின் பேரிலும் ஆணையிட்டுப் பணிவோர் – செப் 1:5
5. கர்த்தரை விட்டுப் பின்வாங்குவோர் – செப் 1:6
6. கர்த்தரைத் தேடாமலும், விசாரியாமலும் இருப்போர் – செப் 1:6
பாகால் என்பது கானானிய விக்கிரக தெய்வம். கெம்மரீம் என்பது கானானிய ஆசாரியர்களுக்கான மதிப்பிற்குரிய பதவிச் சொல். வானசேனை என்பது ஜோதிடம். சூரிய சந்திர வழிபாடுடன் தொடர்பு படுவது. மல்காம் என்பது மேளேகு என்னும் நரபலிகேட்கும் அம்மோனியா விக்கிரக தெய்வமாகும். இவைகள் அனைத்தும் இஸ்ரவேலின் கலப்பு தெய்வ வழிபாட்டைக் காட்டுகிறது. இதனால் இஸ்ரவேலர் தேவனை மறந்து நியாயத்தீர்ப்பு அடைந்தனர்.