1. விசுவாசம்: தேவமனிதர்கள் பாவமன்னிப்பையும், பரிசுத்தமாக்கப்பட்டவர்களுடைய சுதந்தரத்தையும் பெற்றுக்கொள்ளும்படியாக, இருளை விட்டு ஒளியினிடத்திற்கும், சாத்தானுடைய அதிகாரத்தை விட்டுத் தேவனிடத்திற்கும் திரும்பும்படி விசுவாசத்தினால் சுத்திகரிக்கப்படுவர் – அப் 26:18
2. இயேசுவின் இரத்தம்: இயேசுவின் இரத்தமானது தேவபிள்ளைகளுடைய சகல பாவங்களையும் நீக்கி சுத்திகரிக்கும் – 1யோ 1:7
3. வேதவசனம்: வேதவசனத்தின் சத்தியம் தேவபிள்ளைகளை பரிசுத்தமாக்கும் – யோ 17:17
4. பரிசுத்த ஆவி: தேவனுடைய பரிசுத்த ஆவி தேவனுடைய பிள்ளைகளை கழுவி, பரிசுத்தமாக்கி நீதிமான்களாக்கும் – 2தெச 2:13
5. சிலுவைமரணம், உயித்தெழுதல்: கிறிஸ்துவின் மரணம் உயிர்த்தெழுதலின் ஐக்கியம் சுத்திகரிக்கும்.