தேவன் நோவாவிடம் “பூமி கொடுமையினால் நிறைந்திருப்பதால் அதை அழிக்கப் போகிறேன். எனவே நீ கொப்பேர் மரத்தால் நான் சொல்லும் அளவில் ஒரு பேழையை உண்டாக்கு. அதில் உன் குடும்பமும், நான் சொல்லும் மிருகஜீவன்களும் பிரவேசியுங்கள்.” என்றார். அதன்படியே செய்தார். தேவன் ஜலப்பிரளயத்தை அனுப்புவதற்கு முன் தொடர்ந்து நாற்பது நாள் மழை பெய்தது. கர்த்தர் நோவாவின் குடும்பம் இருந்த பேழையின் கதவை அடைத்தார். பேழை தண்ணீரில் மிதந்தது. ஜலம் அதிகமாய்ப் பெருகினதினால் உயர்ந்த மலைகளெல்லாம் மூடப்பட்டன. சகல ஜீவஜந்துக்களும் அழிந்தது. ஜலம் 150 நாள் பூமியின் மேல் பிரவாகித்துக் கொண்டிருந்ததது. தேவன் நோவாவையும், பேழையில் இருந்தவைகளையும் நினைத்து பூமியின் மேல் காற்றை வீசப்பண்ணினார். ஆழத்தின் ஊற்றுக்கண்களும், வானத்தின் மதகுகளும் நின்று போயிற்று – ஆதி 6:12 – 24, 7:1 – 4