1. தகப்பன் தன் பிள்ளைகளுக்கு இரங்குவது போல கர்த்தர் தன் பிள்ளைகளுக்கு இரங்குவார் – சங் 103:13
2. ஒரு தாய் தேற்றுவது போல தேவன் தன் பிள்ளைகளைத் தேற்றுவார் – ஏசா 66:13, 1தெச 2:7
3. மணவாளன் தன் மணவாட்டியின் மேல் மகிழ்ச்சியாயிருப்பதைப் போல தேவன் தன் பிள்ளைகள் மேல் மகிழ்ச்சியாயிருப்பார் – ஏசா 62:5
4. மேய்ப்பன் தன் மந்தையைத் தேடிக்கொண்டிருப்பதைப் போல தேவன் நம்மைத் தேடுவார் – எசே 34:12
5. வாலிபன் கன்னிகையை விவாகம் பண்ணுகிறது போல தேவன் நம்மை அவரோடு சேர்த்துக் கொள்ளவார் – ஏசா 62:5
6. கோழி தன் குஞ்சுகளை தன் சிறகுகளின் கீழே கூட்டிச் சேர்த்துக் கொள்ளுகிறது போல தேவன் நம்மைக் கூட்டிச் சேர்ப்பார் – மத் 23:37
7. கழுகு தன் குஞ்சுகளைத் தன் செட்டைகளின் மேல் சுமந்து கொண்டு போவது போல தேவன் நம்மை சுமந்து கொண்டு செல்வார் – உபா 32:11, 1:31